பாட்னா அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பீகார் முதல் கட்ட தேர்தல்...ஜிதன் ராம் மாஞ்சி, ஜெயில் பறவை 38 கேஸ் ஆனந்த்சிங்...10 விஐபி தொகுதிகள்!

Google Oneindia Tamil News

பாட்னா: பீகாரில் முதல் கட்ட தேர்தலுக்கான வாக்குப் பதிவு காலை 7 மணி முதல் நடைபெற்று வருகிறது. முதல் கட்ட வாக்குப் பதிவு நடைபெறும் 71 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களில் முன்னாள் முதல்வர் ஜிதன்ராம் மாஞ்சியும் ஒருவர்.

பீகாரில் இன்று வாக்குப் பதிவு நடைபெறும் விபிஐ தொகுதிகள் விவரங்கள்: ஜமுய் தொகுதியில் பாஜகவின் வேட்பாளராக காமன்வெல்த் போட்டிகளில் துப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்ற ஷ்ரேயாசி சிங் போட்டியிடுகிறார். முன்னாள் மத்திய அமைச்சர் திக்விஜய்சிங்கின் மகள். மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் செலுத்தும் தொகுதி ஜமுய். ஆர்ஜேடி சிட்டிங் எம்.எல்.ஏ. முன்னாள் அமைச்சர் விஜய்பிரகாஷை எதிர்த்து ஷ்ரேயாசி சிங் களத்தில் நிற்கிறார்.

 பீகாரின் திப்ராவில் 2 வெடிகுண்டுகள் கண்டுபிடிப்பு.. தேர்தல் நாளில் பரபரப்பு பீகாரின் திப்ராவில் 2 வெடிகுண்டுகள் கண்டுபிடிப்பு.. தேர்தல் நாளில் பரபரப்பு

ஷ்ரேயாசி சிங்

ஷ்ரேயாசி சிங்

ஷ்ரேயாசி சிங்கின் தந்தை திக்விஜய்சிங் பங்கா தொகுதியில் இருந்து எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். ராஜ்யசபா எம்.பியாகவும் இருந்தார். 2010-ல் அவர் மறைந்த போது ஷ்ரேயாசி சிங்கின் தாயார் புதுல் சிங், பங்கா தொகுதியில் சுயேட்சை எம்.பியாக வென்றார். பின்னர் பாஜகவில் இணைந்தார். ஆனால் 2019 லோக்சபா தேர்தலில் பங்கா தொகுதியை ஜேடியூவுக்கு பாஜக ஒதுக்கியதால் சுயேட்சையாக புதுல்சிங் போட்டியிட்டார். இதனால் பாஜகவில் இருந்து அவர் நீக்கப்பட்டார். இம்முறை ஜமுய் தொகுதியை ஷ்ரேயாசி சிங் வெல்வாரா என்பது எதிர்பார்ப்பு

ஜிதன் ராம் மாஞ்சி

ஜிதன் ராம் மாஞ்சி

பீகார் முன்னாள் முதல்வரும் ஹிந்துஸ்தானி அவாமி மோர்ச்சா தலைவருமான ஜிதன் ராம் மாஞ்சி இமாம்கஞ்ச் தொகுதியில் வேட்பாளராக உள்ளார். மாஞ்சிக்கு எதிராக ஆர்ஜேடியின் உதய் நாராயண் செளத்ரி களத்தில் உள்ளார். பீகார் சட்டசபை சபாநாயகராகவும் பணியாற்றியவர் உதய் நாராயண் செளத்ரி. முதுபெரும் தலித் தலைவர்களில் ஒருவர் உதய் நாராயண். இந்த தொகுதியில் 4 முறை ஜேடியூ வேட்ப்பாளராக வென்றவர் உதய் நாராயண் சவுத்ரி. 2015 தேர்தலில் 30,000 வாக்குகள் வித்தியாசத்தில் மாஞ்சியிடம் தோற்றார் உதய் நாராயண். ஜேடியூவும் பாஜகவும் மீண்டும் கூட்டணி சேர்ந்ததை விரும்பாமல் ஆர்ஜேடிக்கு தாவினார் உதய் நாராயண் செளத்ரி. இமாம்கஞ்ச் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. ராம்ஸ்வரூப் பாஸ்வான் மருமகள் ஷோபா சின்ஹாவை லோக் ஜனசக்தி வேட்பாளராக இங்கு நிறுத்தி உள்ளது.

கயா டவுன்- பாஜக கோட்டை

கயா டவுன்- பாஜக கோட்டை

பாஜகவின் கோட்டையாக இருக்கும் தொகுதிகளில் கயா டவுனும் ஒன்று. அமைச்சர் பிரேம்குமார் போட்டியிட்டு வென்ற தொகுதி. 1990-ம் ஆண்டு முதல் 7 முறை இதே தொகுதியில் பிரேம்குமார் வென்றுள்ளார். இப்போது மீண்டும் இதே தொகுதியில் பிரேம்குமார் களமிறங்கி இருக்கிறார். காங்கிரஸ் கட்சி, அஹவுரி ஓங்கார் நாத் என்ற மோகன் ஶ்ரீவதஸ்வாவை வேட்பாளராக நிறுத்தியுள்ளது. கடந்த தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் பிரேம் ரஞ்சன் டிம்பிளியை பிரேம்குமார் தோற்கடித்தார். தற்போதைய காங்கிரஸ் வேட்பாளர் மோகன், ஏற்கனவே இரு முறை பிரேம்குமாரை எதிர்த்து போட்டியிட்டு தோல்வியைத் தழுவி இருக்கிறார். கயா துணை மேயராகவும் மோகன் பதவி வகித்தவர்.

போட்டியில் ஜெகனாபாத்

போட்டியில் ஜெகனாபாத்

பீகார் கல்வி அமைச்சரான ஜேடியூவின் கிருஷ்ண நந்தன் வர்மா போட்டியிடுகிறார். 2015 தேர்தலில் இதே தொகுதியில் வெற்றி பெற்றவர் நந்தன் வர்மா. ஆர்ஜேடியின் மூத்த தலைவரான மறைந்த முந்திர்கா யாதவின் மகன் சுதய் யாதவ் வேட்பாளராக களத்தில் உள்ளார். 2005-ல் மக்தும்பூர் தொகுதியில் ஜேடியூ வேட்பாளராக போட்டியிட்டு வென்ற நந்தன்வர்மா பின்னர் ஆர்ஜேடியில் இணைந்தார். 2010-ல் ஆர்ஜேடியில் சீட் மறுக்கப்பட்டதால் மீண்டும் ஜேடியூவில் இணைந்து கோஷி தொகுதியில் போட்டியிட்டு வென்றார்.

சுயேட்சைகள் ஆதிக்கம்

சுயேட்சைகள் ஆதிக்கம்

ஜேடியூ 2 முறை வெற்றி பெற்ற தொகுதி. இம்முறை பெண் வேட்பாளர் அஞ்சும் ஆராவை நிறுத்தியுள்ளது. ஆர்ஜேடி, சிபிஎம்-எல்க்கு இத்தொகுதியை ஒதுக்கியுள்ளது. இளைஞரான அஜித்குமார் குஷாவா இங்கு சிபிஎம்-எல் வேட்பாளராக போட்டியிடுகிறார். ஷிவாங் விஜய் சிங், சுயேட்சையாக களமிறக்கப்பட்டுள்ளார். மகாராஜா கமல்சிங்கின் பேரர்ன். மகாராஜா கமல்சிங் 1952,57-ல் பக்சார் லோக்சபா தொகுதியில் வென்றவர். இத்தொகுதியில் சிட்டிங் எம்.எல்.ஏ. தாதன்சிங் யாதவ் சுயேட்சையாக போட்டியிடுகிறார். ஜேடியூவில் அவருக்கு சீட் கொடுக்கப்படவில்லை. ஏற்கனவே இந்த தொகுதியில் பலமுறை போட்டியிட்டு வென்றவர் தாதன்சிங் யாதவ் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தாராபூர்- இளம் வேட்பாளர்

தாராபூர்- இளம் வேட்பாளர்

முன்னாள் எம்பி ஜெய்பிரகாஷ் நாராயண் யாதவின் 28 வயது மகள் திவ்யாவை ஆர்ஜேடி வேட்பாளராக நிறுத்தியுள்ளது. பீகார் தேர்தலில் போட்டியிடும் இளம் வேட்பாளர் திவ்யா. சிட்டிங் எம்.எல்.ஏ. ஜேடியூ வேட்பாளர் மேவா லால் செளத்ரியை எதிர்த்து நிற்கிறார் திவ்யா.

ராஜேந்திரசிங் - தினாரா

ராஜேந்திரசிங் - தினாரா

சிட்டிங் எம்.எல்.ஏ.வான அமைச்சர் ஜெய் பிரகாஷ்சிங் இங்கு போட்டியிடுகிறார். எல்ஜேபியின் மூத்த தலைவர் ராஜேந்திரசிங் இங்கு களத்தில் நிற்கிறார். 37 ஆண்டுகாலம் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் பணிபுரிந்தவர் ராஜேந்திர சிங். 2015 தேர்தலில் ஜெய்பிரகாஷ் சிங்கிடம் தோல்வியை தழுவினார் ராஜேந்திரசிங். இருவரும் ராஜ்புத் ஜாதியை சேர்ந்தவர்கள். அண்மையில் பாஜகவில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டவர் ராஜேந்திரசிங்.

38 கேஸ் ஆனந்த்சிங்

38 கேஸ் ஆனந்த்சிங்

பீகரின் பேலூர் சிறையில் சட்டவிரோத தடுப்பு நடவடிக்கைகளின் கீழ் அடைக்கப்பட்டுள்ள சிட்டிங் சுயேட்சை எம்.எல்.ஏ. ஆனந்த்சிங்- ஆர்ஜேடி வேட்பாளராக போட்டியிடுகிறார். ஆனந்த் சிங் மீது மட்டும் 38 வழக்குகள் நிலுவையில் உள்ளன. சமூக ஆர்வலரான ராஜீவ் லோசன்- ஜேடியூ வேட்பாளராக நிற்கிறார். எல்ஜேபியின் சுரேஷ் சிங் நிஷாத்தும் இங்கே களத்தில் உள்ளார்.

ஆர்ஜேடி கோட்டை?

ஆர்ஜேடி கோட்டை?

ஆர்ஜேடியின் மாநில தலைவர் ஜக்தானாந்த் சிங் 1985 முதல் 2005 வரை 6 முறை வென்ற தொகுதி. அவரது மகன் சுதாகர் சிங் இம்முறை ஆர்ஜேடி வேட்பாளராக போட்டியிடுகிறார். பாஜகவின் அசோக்குமார் சிங் வேட்பாளராக போட்டியிடுகிறார். கடந்த தேர்தலில் ஆர்ஜேடியின் அம்பிகாசிங்கை அசோக் குமார் சிங் தோற்கடித்தார். அம்பிகாசிங் இம்முறை பிஎஸ்பி வேட்பாளராக களத்தில் போட்டியிடுகிறார்.

பாஜக தக்க வைக்கும் லகிசராய்?

பாஜக தக்க வைக்கும் லகிசராய்?

சிட்டிங் எம்.எல்.ஏ. விஜய்குமார் சின்ஹா இம்முறை இதே தொகுதியில் போட்டியிடுகிறார். இதுவும் பாஜகவின் கோட்டையாக கருதப்படுகிறது. 2010,15-ல் விஜய்குமார் சின்ஹா வென்ற தொகுதி இது. காங்கிரஸ் வேட்பாளர் அம்ரேஷ் குமார் போட்டியிடுகிறார்.

English summary
Here are Top 10 VIP constituencies in First Phase Bihar Assembly Election.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X