பாட்னா அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பீகாரில் மூளைக்காய்ச்சலால் இறந்த குழந்தைகளின் எண்ணிக்கை 129ஆக உயர்வு.. மருத்துவர் இடைநீக்கம்

Google Oneindia Tamil News

பாட்னா: பீகாரில் மூளைக்காய்ச்சலால் இறந்த குழந்தைகளின் எண்ணிக்கை 129-ஆக உயர்ந்துள்ளது. இதையடுத்து அலட்சியமாக பணி செய்தது காரணமாக மருத்துவர் ஒருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

பீகார் மாநிலத்தில் குழந்தைகளை பாதிக்கும் மூளைக் காய்ச்சல் நோய் பரவி வருகிறது. கடந்த ஜனவரி மாதம் முதல் அங்கு அந்த நோய் பரவி வருகிறது. இதிலே கடந்த மாதம் வரை பாதிக்கப்பட்ட 11 பேர் உயிரிழந்தனர். தற்போது அதன் தாக்கம் அதிகரித்துள்ளது.

Bihar government hospital doctor suspended as death toll rises to 129

இதனால் உயிரிழப்புகளும் அதிகரித்துள்ளன. இந்த நோய் பாதிப்பால் 129 பேர் இதுவரை பலியாகிவிட்டனர். மூளைக் காய்ச்சலை தடுக்க தவறியதாக முதல்வர் நிதிஷ்குமார் அரசுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கும் தொடுக்கப்பட்டது.

பார்த்தாலே மனசு வலிக்குது.. உடைப்பெடுத் குடிநீர் குழாய்.. ஆயிரக்கணக்கான லிட்டர் நீர் வீண்! பார்த்தாலே மனசு வலிக்குது.. உடைப்பெடுத் குடிநீர் குழாய்.. ஆயிரக்கணக்கான லிட்டர் நீர் வீண்!

இந்த நிலையில் பீகார் அரசின் ஸ்ரீகிருஷ்ணா மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையில்தான் மூளைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு ஏராளமான குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்.

இந்த நிலையில் சிகிச்சை முறையில் அலட்சியம் காண்பித்ததாக கூறி அரசு மருத்துவமனையின் மருத்துவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். மூளை காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு பிரசுரங்கள் மாநிலம் முழுவதும் விநியோகம் செய்யப்படுகிறது.

அடுத்த 2 ஆண்டுகளில் இந்த மருத்துவமனையில் 2500 படுக்கை வசதி கொண்ட மருத்துவமனையாக மாற்ற முதல்வர் நிதிஷ்குமார் அறிவித்துள்ளார்.

English summary
Bihar government hospital doctor suspended as death toll rises to 129 in Encephalitis.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X