பாட்னா அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் மரண வழக்கு- சிபிஐ விசாரிக்க பீகார் அரசு பரிந்துரை

Google Oneindia Tamil News

பாட்னா: பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் மரண வழக்கை சிபிஐ விசாரிக்க பீகார் மாநில அரசு பரிந்துரைத்துள்ளது.

Recommended Video

    Sushant Singh 4 அக்காவின் மனவலி 'Miss You Sushant'

    மும்பையில் பீகாரை சேர்ந்த நடிகர் சுஷாந்த் சிங் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தொழில் ரீதியான மன அழுத்தம் தரப்பட்டதாலேயே சுஷாந்த் சிங் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

    Bihar govt recommends CBI investigation into Sushant Singh death

    இது தொடர்பாக மும்பை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அதேநேரத்தில் பீகார் போலீசாரோ, சுஷாந்த் சிங் மரணம் தொடர்பாக மகாராஷ்டிரா போலீசார் முறையாக விசாரணை நடத்தவில்லை என குற்றம்சாட்டியுள்ளனர்.

    அத்துடன் வெறும் விளம்பரத்துக்காகவே சுஷாந்த் சிங் மரணம் தொடர்பாக மகாராஷ்டிரா போலீசார் பிரபலங்களிடம் விசாரணை நடத்துகின்றனர் என்றும் பீகார் அரசும் குற்றம்சாட்டியது. இந்த நிலையில் சுஷாந்த் சிங் மரணம் தொடர்பாக விசாரணை நடத்த போலீஸ் ஐபிஎஸ் அதிகாரியை மும்பை அதிகாரிகள், கொரோனாவை காரணம் காட்டி வலுக்கட்டாயமாக தனிமைப்படுத்தும் முகாமுக்கு அனுப்பி வைத்ததும் பெரும் சர்ச்சையாக வெடித்தது.

    ஸ்ப்ரே அடித்தால் போதும்.. தற்கொலை எண்ணம் ஓடிவிடும்.. அமெரிக்காவில் அறிமுகமான ஜான்சன்&ஜான்சன் மருந்துஸ்ப்ரே அடித்தால் போதும்.. தற்கொலை எண்ணம் ஓடிவிடும்.. அமெரிக்காவில் அறிமுகமான ஜான்சன்&ஜான்சன் மருந்து

    இதனிடையே மகனின் மரணத்துக்கு நீதி கோரி பீகார் முதல்வர் நிதிஷ்குமாரிடம் சுஷாந்த் சிங் தந்தை மனு கொடுத்தார். இதனையடுத்து சுஷாந்த்சிங்கின் தந்தை விரும்பினால் சி.பி.ஐ. விசாரணைக்கு மாநில அரசு பரிந்துரைக்கும் என பீகார் முதல்வர் நிதிஷ்குமார் கூறியிருந்தார். இந்த நிலையில் சுஷாந்த்சிங்கின் மரணம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்த பீகார் அரசு பரிந்துரைத்துள்ளது.

    English summary
    Bihar government recommended probe by Central Bureau of Investigation (CBI) in the Sushant Singh Rajput death case.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X