பாட்னா அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பீகார்: சலுகை அறிவிப்பு மழைகளுடன் தேர்தல் அறிக்கைகளை வெளியிட்ட காங், எல்ஜேபி

Google Oneindia Tamil News

பாட்னா: பீகார் சட்டசபை தேர்தலுக்கான தேர்தல் அறிக்கைகளை காங்கிரஸ் மற்றும் லோக் ஜனசக்தி கட்சிகள் வெளியிட்டன. இந்த கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளில் வழக்கம் போல இலவசங்கள் தொடர்பான அறிவிப்புகள் ஏராளமாக இடம்பெற்றுள்ளன.

பீகாரில் வரும் அக்டோபர் 28, நவம்பர் 3, நவம்பர் 7 என 3 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. நவம்பர் 10-ல் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

ராகுல் படத்துடன் தேர்தல் அறிக்கை

இந்த தேர்தலில் ஆர்ஜேடி-காங்கிரஸ்- இடதுசாரிகள் இணைந்து மெகா கூட்டணியை அமைத்துள்ளன. இக்கூட்டணியில் காங்கிரஸ் கட்சி தமது தேர்தல் அறிக்கையை இன்று வெளியிட்டது. ராகுல் காந்தியின் படத்துடன் இந்த தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

அள்ளிவீசிய வாக்குறுதிகள்

அள்ளிவீசிய வாக்குறுதிகள்

காங்கிரஸ் கட்சியின் தேர்தல் வாக்குறுதிகளாக கடன்கள் தள்ளுபடி, முதியோருக்கு மாதந்தோறும் உதவித் தொகை. விவசாய சட்டங்களை நிராகரித்தல் உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. இதேபோல் லோக் ஜனசக்தியின் தலைவர் சிராக் பாஸ்வானும் அக்கட்சியின் தேர்தல் அறிக்கையை இன்று வெளியிட்டார்.

சிராக் பாஸ்வான் அறிக்கை

பீகார் முதலிடம் பீகாரி முதலிடம் என்ற முழக்கத்தை இந்த தேர்தல் அறிக்கை வலியுறுத்துகிறது. பெண்கள் பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்யலாம், இடம்பெயர் தொழிலாளர்கள் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களின் கல்விக்கான சிறப்பு மையங்கள் அமைக்கப்படும் உள்ளிட்டவை எல்ஜேபியின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.

15 ஆண்டுகாலம் என்ன செய்தீர்கள்?

அப்போது பேசிய சிராக் பாஸ்வான், கடந்த 15 ஆண்டுகாலமாக பீகாரில் வேலைவாய்ப்புக்காக முதல்வர் நிதிஷ்குமார் செய்தது என்ன? வெள்ள பாதிப்பு போன்ற காலங்களில் பீகாருக்கு எதுவுமே செய்யவில்லையே ஏன்? என்றும் கேள்வி எழுப்பினார். முன்னதாக தேர்தல் அறிக்கை வெளியீட்டு நிகழ்ச்சிக்குப் புறப்பட்ட சிராக் பாஸ்வானுக்கு அவரது தாயார் ஆரத்தி எடுத்து வழிஅனுப்பி வைத்தார்.

English summary
LJP, Congress today released their manifestos with freebies ahead of Bihar Assembly Election 2020.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X