பாட்னா அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

40 சப்பாத்திகள், 10 பிளேட் உணவு.. அலறவிட்ட புலம்பெயர்ந்த தொழிலாளர்.. பகீர் காரணம் கூறும் ஆய்வுகள்

Google Oneindia Tamil News

பாட்னா: பீகாரில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் ஒரு புலம்பெயர்ந்த தொழிலாளி ஒரு நாளைக்கு 40 சப்பாத்திகளையும் 10 பிளேட் உணவையும் உண்டு அதிகாரிகளை அதிர வைத்துள்ளார்.

கொரோனா ஊரடங்கால் வேலையில்லாமல் உள்ள புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பணமில்லாமல் பசி பட்டினியுடன் சொந்த ஊர்களுக்கு செல்லும் நிலை உள்ளது. மற்ற மாநிலங்களில் இருந்து பீகாருக்கு ஆயிரக்கணக்கான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வருகை தந்துள்ளனர்.

மற்ற மாநிலங்களில் இருந்து வருவதால் கொரோனா அச்சம் காரணமாகவும் அந்த நோய் பீகாருக்கு பரவாமல் இருக்கவும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் 14 நாட்களுக்கு அரசின் தனிமைப்படுத்தும் மையத்தில் தங்க வைக்கப்படுகிறார்கள்.

ஜான்சி டூ கோரக்பூர் ரயிலின் கழிவறையில் புலம்பெயர்ந்த தொழிலாளரின் உடல்.. 4 நாள் கழித்து கண்டெடுப்பு ஜான்சி டூ கோரக்பூர் ரயிலின் கழிவறையில் புலம்பெயர்ந்த தொழிலாளரின் உடல்.. 4 நாள் கழித்து கண்டெடுப்பு

அதிர்ச்சி

அதிர்ச்சி

பீகார் மாநிலம் பக்ஸாரில் உள்ள புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கியுள்ள தனிமைப்படுத்தும் மையம் உள்ளூர் மற்றும் மாவட்ட நிர்வாகிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. அதற்கு காரணம் 23 வயது தனிமைப்படுத்தப்பட்ட புலம்பெயர்ந்த தொழிலாளர் அனூப் ஓஜா. இவர் தினசரி உட்கொள்ளும் உணவால் அந்த இடமே அதிர்ச்சியில் உறைந்துள்ளது.

40 சப்பாத்திகள்

40 சப்பாத்திகள்

கார்ஹா தண்ட் பஞ்சாயத்தைச் சேர்ந்தவர் அனூப். இவர் காலை உணவாக 40 சப்பாத்திகளை உண்கிறார். மதிய உணவுக்கு 10 பிளேட் சாப்பாட்டை உட்கொள்கிறார். இவ்வாறு அதிகமாக உட்கொள்வதால் கவலையடைந்த அதிகாரிகள் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளனர். அனூப் கடந்த 10 நாட்களுக்கு முன்புதான் இந்த மையத்திற்குவந்தார்.

தனிமை

தனிமை

ராஜஸ்தான் மாநிலத்தில் பிழைப்பு தேடி சென்ற நிலையில் தற்போது பீகாரில் சொந்த ஊருக்கு செல்ல வந்த போது தனிமைப்படுத்தப்பட்டார். வரும் வியாழக்கிழமையுடன் அவரது தனிமைப்படுத்துதல் காலம் முடிவடைகிறது. அன்றைய தினம் அவர் வீடு திரும்புகிறார்.

Recommended Video

    காசு இல்ல பசி இருக்கு • Kushboo வெளியிட்ட விடியோ |Bihar Migrant women
    ஸ்ட்ரெஸ்

    ஸ்ட்ரெஸ்

    அதிக அழுத்தமிருந்தால் அட்ரினல் சுரப்பிகள் கார்டிசோல் எனும் ஹார்மோனை சுரக்கும். இந்த ஹார்மோன் பசியை தூண்டி அதிகமாக உணவு உட்கொள்ளத் தூண்டும் என்கிறார்கள் ஹார்வார்டு மருத்துவ கல்லூரி ஆய்வறிக்கை கூறுகிறது. மன அழுத்தம் இருந்தாலும் அதிக உணவு உட்கொள்வார்கள் என்கிறது ஆய்வறிக்கை.

    English summary
    Bihar Migrant Worker's diet in Quarantine center is 40 rotis and 10 plates of rice.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X