பாட்னா அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"ஜெய் ஸ்ரீராம்" சொல்ல மறுத்த முஸ்லிம் இளைஞர்... கத்தியால் நாக்கை அறுக்க முயன்ற கும்பல்.. பீகார் ஷாக்

ஜெய் ஸ்ரீராம் மந்திரம் சொல்லாத பீகார் இளைஞர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது

Google Oneindia Tamil News

பாட்னா: "ஜெய் ஸ்ரீ ராம்"ன்னு சொல்ல மறுத்த முஸ்லிம் இளைஞரை, சரமாரியாக ஒரு கும்பல் தாக்கியதுடன், கத்தியால் அவரது நாக்கை அறுக்க முயன்றுள்ளனர்.. இதில் அந்த முஸ்லிம் இளைஞர் ரத்த வெள்ளத்தில் கீழே சுருண்டு விழுந்துள்ளார்.. தற்போது தீவிர சிகிச்சையும் அவருக்கு நடந்து வரும்நிலையில், இது தொடர்பாக போலீசாரும் விசாரித்து வருகின்றனர். பீகாரில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

பீகாரை சேர்ந்தவர் முகமத் இஸ்ரேல்... இவர் சம்பரன் என்ற கிராமத்தில் வசித்து வந்துள்ளார்.. ஜூன் 2, இவரது கிராமத்தில் மழை பலமாக பெய்துள்ளது.

 bihar muslim youth thrashed after refusing to chant jai shri ram

அதனால் கரண்ட் கட் ஆகிவிட்டதால், செல்போனிலும் சார்ஜ் இல்லை.. அதனால் தன்னுடைய நண்பர் வீட்டிற்கு செல்போனுக்கு சார்ஜ் போட சென்றிருக்கிறார். அப்போதுதான் அந்த பயங்கரம் நடந்துள்ளது.

இஸ்ரேலின் சகோதரர், பதட்டத்துடன் போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று, இஸ்ரேல் உயிர் ஆபத்தாக உள்ளது.. அவன் தலையில் அடிபட்டுள்ளது.. வாய் திறந்தும் பேசவில்லை.. அவனை யாரோ அடித்து போட்டிருக்கிறார்கள்.. ஆஸ்பத்திரியில் அனுமதித்திருக்கிறோம்" என்றார்.

இதையடுத்து, போலீசாரும் ஆஸ்பத்திரிக்கு சென்று இஸ்ரேலிடம் விசாரிக்க முயன்றனர்.. "ஜெய் ஸ்ரீ ராம்"ன்னு சொல்ல சொன்னாங்க.. நான் சொல்ல மறுத்ததால், என் நாக்கை அறுக்க வந்தனர்" என்று வாக்குமூலம் தந்துள்ளதாக தெரிகிறது.

"சித்தாள்" ஜெயா - "கொத்தனார்" செல்வம்.. கும்பகோணம் லாட்ஜில் ரூம் போட்டு அலறிய கள்ள ஜோடி.. பரபரப்பு

இதுகுறித்து போலீசார் தரப்பில் சொல்லும்போது, ஜுன் 2ம்தேதி வந்த புகாரை எப்ஐஆர் பதிவு செய்து விசாரித்து வருகிறோம்.. முஸ்லிம் இளைஞரான இஸ்ரேலினை சிலர் தாக்கி உள்ளனர்.. ஜெய் ஸ்ரீராம் என்று சொல்ல சொல்லி இருக்கிறார்கள்.. அதற்கு இஸ்ரேல் மறுத்துள்ளார்.. அதனால்தான் ஆத்திரமடைந்து அடித்ததுடன், நாக்கையும் அறுக்க முயன்றுள்ளனர்.

ரத்த வெள்ளத்தில் இஸ்ரேல் விழுந்துவிடவும், அவர் இறந்துவிட்டார் என்று நினைத்து அங்கிருந்து சென்று விட்டனர்.. அதன்பிறகு அவரை மீட்டு மோஷி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றிருக்கிறார்கள்.. ஆனால் அவரது நிலைமை மோசமாக இருந்ததை பார்த்து அங்கிருந்த டாக்டர்கள், சிகிச்சைக்காக முசாபர்பூர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல அறிவுறுத்தி உள்ளனர்.

இளைஞரை தாக்கியது கோபால், ராகுல் பன்வரிலால், லாகான், பிரின்ஸ், அபிஷேக், நிதிஷ் சிங் என்பது தெரியவந்துள்ளது.. அவர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளோம்.. எல்லோருமே பதனா என்ற கிராமத்தை சேர்ந்தவர்கள்" என்றனர். இந்நிலையில் குற்றம்சாட்டப்பட்டவர்களில் ஒருவரான வீர பிரின்ஸ் என்பவர் இதை பற்றி சொல்லும்போது, "அந்த முஸ்லீம் இளைஞர் பைக்கில் வேகமாக போனார்.. ஆனால் அவரை யார் அடித்தது என்று எங்களுக்கு தெரியாது.. வீண் பழி எங்கள் மீது சுமத்தப்படுகிறது.. சாதாரண பிரச்சனையை மத பிரச்சனையாக மாற்றி உள்ளனர்" என்றார்.

எனினும் இதை பற்றின விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது.. ஆனால் இதுவரை யாரும் கைதாகவில்லை என தெரிகிறது.. சம்பந்தப்பட்டவர்கள் பஜ்ரங் தள் அமைப்பை சேர்ந்தவர்கள் என்றும் சொல்லப்படுகிறது.. வேண்டுமென்றே பழி சுமத்தப்படுவதாக சொல்வதால் இதன் உண்மை தன்மையை போலீசார் கண்டறிந்து வருகிறார்கள்.

English summary
bihar muslim youth thrashed after refusing to chant jai shri ram
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X