பாட்னா அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சொல்லியடித்த மோடி.. 4 நாட்கள், 12 பேரணிகள்.. நிலைமையே மாறிப் போச்சு.. 'டார்கெட் 101'

Google Oneindia Tamil News

பாட்னா: பீகாரில் நரேந்திர மோடியின் செல்வாக்கு மற்றும் அவரது உரைக்கு மக்கள் மத்தியில் இருக்கும் செல்வாக்கை முன்னிலை நிலவரங்கள் தெளிவாக படம் பிடித்துக் காட்டுகின்றன.

பீகார் தேர்தலின் போது பிரதமர் நரேந்திர மோடி நான்கு நாட்களில் மொத்தம் 12 பேரணிகளை நடத்தினார். அக்டோபர் 23 அன்று தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கிய அவர், நவம்பர் 3 ம் தேதி பேரணியை நிறைவு செய்து உரையாற்றினார்.

மோடி அலை வீசியதை அந்த தேர்தல் பிரச்சாரத்தின்போது பார்க்க முடிந்தது.

போதும்.. இனியும் வாக்குப் பதிவு இயந்திரத்தை குறை சொல்லாதீங்க.. கார்த்தி சிதம்பரம் ஒரே போடு போதும்.. இனியும் வாக்குப் பதிவு இயந்திரத்தை குறை சொல்லாதீங்க.. கார்த்தி சிதம்பரம் ஒரே போடு

மோடி பிரச்சாரம்

மோடி பிரச்சாரம்

அக்டோபர் 23 ம் தேதி சசாரம், கயா மற்றும் பாகல்பூர், அக்டோபர் 28 அன்று தர்பங்கா, முசாபர்பூர் மற்றும் பாட்னா, நவம்பர் 1 ஆம் தேதி சப்ரா, கிழக்கு சம்பரன் மற்றும் சமஸ்திபூர் ஆகிய இடங்களில் தேர்தல் பேரணிகளில் உரையாற்றினார், நவம்பர் 3 ஆம் தேதி மேற்கு சம்பரன், சஹர்சா மற்றும் ஃபர்பிஸ்கஞ்ச் ஆகிய இடங்களில் அவர் உரையாற்றினார்.

 101 தொகுதிகள் டார்கெட்

101 தொகுதிகள் டார்கெட்

இங்குள்ள 101 இடங்களில் என்.டி 59 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. ராஷ்டிரிய ஜனதாதளம் கூட்டணி 42 இடங்களில் முன்னிலையில் உள்ளன. என்.டி.ஏ கூட்டணியில் பாஜக 39, ஜேடியூ 14, விஐபி கட்சி 5ல் முன்னிலையில் உள்ளன. ஆர்ஜேடி 29 இடங்களிலும், காங்கிரஸ் 7, சிபிஐ (எம்ஏ) 4 இடங்களிலும், சிபிஐ (எம்) 2 இடங்களில் முன்னிலையிலும் உள்ளன.

பாஜக முன்னிலை

பாஜக முன்னிலை

பாகல்பூரில் காங்கிரஸ் வேட்பாளரான அஜித் சர்மாவை விட பாஜகவைச் சேர்ந்த ரோஹித் பாண்டே முன்னணியில் உள்ளார். தர்பங்காவில், 10 இடங்களில் 9 இடங்களில் பாஜக கூட்டணி முன்னிலையில் உள்ளது.

பாட்னாவிலும் வெற்றி அலை

பாட்னாவிலும் வெற்றி அலை

பாஜக வேட்பாளர் சுரேஷ்குமார் சர்மா முசாபர்பூரில் முன்னிலை வகிக்கிறார். இது தவிர பாட்னாவின் பெரும்பாலான இடங்களில் பாஜக-ஜே.டி.யூ கூட்டணி முன்னிலை வகிக்கிறது. சஹர்சா தொகுதியில் பாஜகவின் அலோக் ரஞ்சன் முன்னிலை வகிக்கிறார். மோடியின் பிரச்சாரத்திற்கு இருக்கும் செல்வாக்குதான், நிதிஷ் குமார் மீதான அதிருப்தியை கட்டுப்படுத்த உதவி வாக்குகளை அறுவடை செய்ய உதவியது என்கிறார்கள் பாஜகவினர்.

English summary
During the Bihar elections, Prime Minister Narendra Modi held a total of 12 rallies in four days. He began his election campaign on October 23 and addressed the rally on November 3.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X