பாட்னா அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

நாசாவின் அழைப்பை ஏற்க மறுத்த பீகார் மாணவர்.. காரணத்தை கேட்டால் அசந்து போய்டுவீங்க!

Google Oneindia Tamil News

பாட்னா: நாசாவில் பணிபுரியவும் ஆராய்ச்சி மேற்கொள்ளவும் அழைப்பு விடுத்த போதும் அந்த வாய்ப்பை பீகார் மாணவர் நிராகரித்துள்ளார்.

பீகார் மாநிலம், பாகல்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் கோபால்ஜி (19). இவரது தந்தை பிரேம் ரஞ்சன் குன்வார் விவசாய குடும்பத்தில் பிறந்த கோபால் அரசுப் பள்ளியில் படித்து புதிய முயற்சிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.

இவர் 2017-ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து தனது முயற்சி குறித்து கூறினார். இதைத் தொடர்ந்து அவர் அறிவியல், தொழில்நுட்பத் துறைக்கும், பின்னர் ஆமதாபாத்தில் உள்ள தேசிய கண்டுபிடிப்பு அறக்கட்டளைக்கும் அனுப்பப்பட்டார்.

10 ஆம் வகுப்பில் விருது

10 ஆம் வகுப்பில் விருது

இங்கு கோபால்ஜி 4 புதிய கண்டுபிடிப்புகளை செய்து காட்டினார். அவர் வாழை இலை கழிவில் இருந்து வாழை உயிர் செல், காகித உயிர், அதிக வெப்பத்தை தாங்கக் கூடிய கோபோனியம் அலாய் ஆகியவற்றை உருவாக்கி இருந்தார். தனது 10 -ஆம் வகுப்பின் போது இன்ஸ்பயர் விருதையும் பெற்றிருந்தார்.

ஆராய்ச்சி

ஆராய்ச்சி

இதைத் தொடர்ந்து அவருக்கு வெளிநாடுகளில் இருந்து அழைப்புகள் வரத் தொடங்கியது. அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா, கோபால்ஜிக்கு அழைப்பு விடுத்தது. துபாய், ஐக்கிய அரபு அமீரகம் ஆகியவை தங்கள் நாடுகளில் ஆராய்ச்சி மேற்கொள்ள அழைப்பு விடுத்தன. இதையெல்லாம் அவர் வேண்டாம் என கூறிவிட்டார்.

ஊக்குவிக்க

ஊக்குவிக்க

காரணத்தை கேட்ட போது இந்தியாவுக்கு அவர் ஏதாவது செய்ய வேண்டும் என்ற குறிக்கோளுடன் இருப்பதாக கூறி அனைத்து அழைப்புகளையும் நிராகரித்து விட்டார். இதுகுறித்து கோபால் கூறுகையில் அறிவியல் மற்றும் புதுமைகளுக்காக 12-ஆம் வகுப்புக்கு கீழ் உள்ள மாணவர்களை ஊக்குவிக்க என்னால் முடிந்த அனைத்தையும் செய்து வருகிறேன்.

100 ஆராய்ச்சி மாணவர்கள்

100 ஆராய்ச்சி மாணவர்கள்

பள்ளி மாணவர்களிடம் அறிவியலை வளர்ப்பதே எனது லட்சியம். தற்போது டேராடூனில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி படிப்பு மேற்கொண்டு வருகிறேன். 100 ஆராய்ச்சி மாணவர்களை கண்டுபிடிப்பதே எனது லட்சியம் ஆகும் என்றார். இவர் நீர் மின் உயிர் செல், கோபா அலாஸ்கா, போலி பிளாஸ்டிக், லிச்சி ஒயின் போன்ற மற்ற சோதனைகளை நடத்தி வருகிறார். இந்தியாவில் கடந்த 2017 ஆம் ஆண்டு 17 மில்லியன் இந்தியர்கள் வெளிநாடுகளில் பணிபுரிந்தது குறிப்பிடத்தக்கது.

English summary
19 years old Student belongs to Bihar declined to accept Nasa's offer to work for their country.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X