பாட்னா அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பீகார் தேர்தல்:10% வாக்குகளுடன் தீர்மானிக்கும் சக்தியாக உருவெடுக்கப் போகிறார்களா 3-வது அணி கட்சிகள்?

Google Oneindia Tamil News

பாட்னா: பீகார் சட்டசபை தேர்தலில் 10% வாக்குகளுடன் 3-வது அணி கட்சிகள் தீர்மானிக்கும் சக்தியாகவும் உருவெடுக்கவும் வாய்ப்புள்ளன என்பது அரசியல் பார்வையாளர்கள் கருத்து.

பீகாரில் 71 தொகுதிகளில் முதல் கட்ட வாக்குப் பதிவு முடிவடைந்துள்ளது. நவம்பர் 3, நவம்பர் 7-ல் 2வது, 3-வது கட்ட வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. நவம்பர் 10-ல் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

தொழில்துறையில் மிகப் பெரிய அளவில் பின்தங்கியிருக்கும் பீகார்! தலைவிரித்தாடும் வேலைவாய்ப்பின்மை! தொழில்துறையில் மிகப் பெரிய அளவில் பின்தங்கியிருக்கும் பீகார்! தலைவிரித்தாடும் வேலைவாய்ப்பின்மை!

அணிகள் மாறுமா?

அணிகள் மாறுமா?

இந்த தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு பெரும்பான்மை இடங்கள் கிடைக்கும் என கூறப்படுகிறது. இருந்தபோதும் தேர்தலுக்குப் பின்னர் ஜேடியூ-ஆர்ஜேடி, காங்கிரஸ்- இடதுசாரிகள் புதிய கூட்டணி அமைக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

3வது அணி கட்சிகள்

3வது அணி கட்சிகள்

பீகார் தேர்தல் முடிவுகளில் தொங்கு சட்டசபை உருவாகுமானால் 3-வது அணியாக மொத்தம் 6 கட்சிகள் உள்ளன. இந்த கட்சிகள் தீர்மானிக்கும் சக்திகளாக இருக்கவே வாய்ப்பிருக்கின்றன. இந்த 3-வது அணி கட்சிகள் மொத்தம் 10% வாக்குகளை தங்கள் வசம் வைத்திருக்கிறது.

கடந்த கால நிலவரம்

கடந்த கால நிலவரம்

2015 தேர்தலில் ஆர்.எல்.எஸ்.பி. 3.6% வாக்குகளுடன் 2 இடங்களில் வென்றது. பகுஜன் சமாஜ் கட்சி 2% வாக்குகளைப் பெற்றது. ஆனால் எந்த ஒரு தொகுதியிலும் வெல்லவில்லை. ஆர்.எல்.எஸ்.பி 104 தொகுதிகளிலும் பகுஜன் சமாஜ் கட்சி 80 தொகுதிகளிலும் மஜ்லிஸ் கட்சி 20 தொகுதிகளிலும் போட்டியிட்டது.

பீகாரில் உபி கட்சிகள்

பீகாரில் உபி கட்சிகள்

உத்தரப்பிரதேசத்தில் செல்வாக்கு செலுத்தும் கட்சிகள் பீகாரில் தலைதூக்க முயற்சிப்பது வழக்கம். இந்த தலைவர்களின் முயற்சிகள் சில நேரங்களில் லேசான தாக்கத்தை பீகாரில் ஏற்படுத்துவதும் உண்டு. அப்படி இம்முறையும் ஏற்படுத்தினால் அவர்கள் பக்கம் காற்று வீசவும் வாய்ப்பிருக்கிறது.

English summary
According to the data, Third Front may emerge as King Maker in Bihar Assembly election.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X