பாட்னா அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பீகாரில் வயதான பெற்றோரை பராமரிக்காவிட்டால் மகன் அல்லது மகளுக்கு ஜெயில்.. ஜாமினில் வரமுடியாது

Google Oneindia Tamil News

பாட்னா: வயதான பெற்றோரை பராமரிக்காவிட்டால் மகன் அல்லது மகளுக்கு சிறை தண்டனை வழங்க வகை செய்யும் சட்ட மசோதாவுக்கு பீகார் முதல்வர் நீதீஷ்குமார் தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில் நேற்று ஒப்புதல் அளித்துள்ளது.

ஆசை ஆசையாய் பார்த்து பார்த்து வளர்த்த பிள்ளைகள் வளர்ந்து பெரிய பிள்ளைகள் ஆன பின்னர் தங்களது வயதான பெற்றோரை பார்த்துக் கொள்வது இல்லை. இதனால் வயதான பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் உதவி மற்றும் ஆதரவு இல்லாமல் மிகவும் வேதனையுடன் தங்கள்து மீதி காலத்தை கழிக்கும் அவல நிலை இந்தியா முழுவதுமே காணப்படுகிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க அரசுகள் எத்தனையோ முயற்சிகள் செய்து வருகின்றன. ஆனால் தீர்வு தான் இல்லை.

Bihar to punish with a jail term sons and daughters who abandon their elderly parents

ஏனெனில் சம்பாதிக்கும் பணம் தனக்கும் தன் பிள்ளைக்கும் மட்டுமே போதவில்லை என மனநிலையுடன் பல பிள்ளைகள் இருக்கிறார்கள். இதேபோல் மருமகள்களும் இருக்கிறார்கள். இதன்காரணமாக ஆதரவு இல்லாமல் வயதான பெற்றோர்கள் தனித்துவிடப்படும் அவலம் தொடர்கிறது.

சம்பாதித்து படிக்க வைத்து, பிள்ளைகள் தான் பெரிது என அவர்களுக்காக எல்லாவற்றையும் தியாகம் செய்யும் பெற்றோர் கடைசியில் ஒன்றும் இல்லாமல் ஆதரவும் இல்லாமல் தவித்து வருகிறார்கள். இதை தடுக்க பீகார் மாநில அரசு புதிய சட்டம் கொண்டுவருகிறது. பீகார் மாநில முதல்வர் நிதீஷ்குமார் தலைமையில் நேற்று அமைச்சரவை கூட்டம் நடந்தது.

சசிகலா முன்கூட்டியே விடுதலை ஆகிறார்?... சிறைத்துறை முன்னாள் டி.ஐ.ஜி. ரூபா பதில் சசிகலா முன்கூட்டியே விடுதலை ஆகிறார்?... சிறைத்துறை முன்னாள் டி.ஐ.ஜி. ரூபா பதில்

இந்த கூட்டத்தில் வயதான பெற்றோரை பராமரிக்காவிட்டால் மகன் அல்லது மகளுக்கு சிறைதண்டனை அளிக்க வகை செய்யும் மசோதவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. பீகார் மாநில சமூக நலத்துறை அமைச்சகம் உருவாக்கியிருந்த மசோதாவின் படி இனி வயதான பெற்றோரை பராமரிக்காவிட்டால் பிள்ளைகளுக்கு சிறை தண்டனை விதிக்கப்படும். வயதான பெற்றோர் புகார் அளித்தால் பிள்ளைகள் மீது ஜாமினில் வெளிவரமுடியாத பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படும்.

தமிழகத்திலும் வயதான பெற்றோரை பராமரிக்காவிட்டால் சிறை தண்டன அல்லது அபாராதம் அல்லது இரண்டும் விதிக்கும் வகையில் சட்டம் உள்ளது. வயதான பெற்றோரை பாதுகாக்க மத்திய அரசும் சட்டம் இயற்றி உள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
Bihar Cabinet-led by CM Nitish Kumar yesterday approved a proposal to punish with a jail term sons & daughters who abandon their elderly parents.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X