பாட்னா அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பீகார் சட்டசபை தேர்தலில் நிதிஷ்குமார் தலைமையில் ஜேடியூ-பாஜக இணைந்து போட்டி: அமித்ஷா

Google Oneindia Tamil News

பாட்னா: பீகாரில் நிதிஷ்குமார் தலைமையில் பாஜகவும் ஐக்கிய ஜனதா தளமும் இணைந்து சட்டசபை தேர்தலை எதிர்கொள்ளும் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

பீகார் சட்டசபை தேர்தலில் முதல்வர் வேட்பாளராக நிதிஷ்குமாரை ஏற்க முடியாது என பாஜக கூறி வருகிறது. ஆனால் நிதிஷ்குமார்தான் முதல்வர் வேட்பாளர் என்கிறது ஜேடியூ.

BJP and JDU will be fought under the leadership of Nitish Kumar: Amit Shah

மேலும் ஜேடியூ அதிக இடங்களில் போட்டியிட வேண்டும் என்று அதன் துணைத் தலைவர் பிரஷாந்த் கிஷோர் உள்ளிட்டோர் வலியுறுத்தி வருகின்றனர். இதனால் இரு கட்சிகளும் இணைந்து தேர்தலை சந்திக்குமா? என்ற கேள்வி எழுந்தது.

இந்நிலையில் இன்று பீகாரின் வைஷாலியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய பாஜக தலைவரும் உள்துறை அமைச்சருமான அமித்ஷா, பீகாரில் கூட்டணி தொடர்பான அனைத்து வதந்திகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்க விரும்புகிறேன்.

அர்ச்சுனனுடன் சிவன் மல்யுத்தம் செய்வதே ஜல்லிக்கட்டு.. தமிழக பாஜக டிவிட்.. புதிய சர்ச்சை!அர்ச்சுனனுடன் சிவன் மல்யுத்தம் செய்வதே ஜல்லிக்கட்டு.. தமிழக பாஜக டிவிட்.. புதிய சர்ச்சை!

பீகார் சட்டசபை தேர்தலில் ஜேடியூவும் பாஜகவும் இணைந்தே போட்டியிடும். முதல்வர் நிதிஷ்குமார் தலைமையில் இரு கட்சிகளும் இணைந்து தேர்தலை எதிர்கொள்ளும் என்றார்.

மேலும் மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்தத்தை முஸ்லிம் சகோதரர்கள் நன்கு படித்து பார்க்க வேண்டும். ராகுல் காந்தி, லாலு பிரசாத் யாதவ், மமதா பானர்ஜி, கெஜ்ரிவால் ஆகியோர் தேசத்தை தவறாக வழிநடத்தக் கூடாது என்றும் அமித்ஷா கேட்டுக் கொண்டார்.

English summary
Union Home Minister Amit Shah said that "I would like to put all rumours to rest. The next election in Bihar will be fought under the leadership of Nitish Kumar. BJP and JD(U) will contest together".
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X