பாட்னா அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பீகாரில் தேர்தலுக்கு தேர்தல் வாக்கு சதவீதத்தை அதிகரித்து கொண்டே வரும் பாஜக!

Google Oneindia Tamil News

பாட்னா: பீகாரில் ஒவ்வொரு சட்டசபை தேர்தலிலும் பாரதிய ஜனதா கட்சிதான் தனது வாக்கு சதவீதத்தை அதிகரித்துக் கொண்டே வருவதை புள்ளிவிவரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

பீகார் சட்டசபை தேர்தல் வரும் 28-ந் தேதி தொடங்கி 3 கட்டங்களாக நடைபெறுகின்றன. நவம்பர் 10-ந் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

பீகாரில் ஜேடியூ- பாஜக ஒரு அணியாகவும் ஆர்ஜேடி-காங்கிரஸ்-இடதுசாரிகள் மற்றொரு அணியாகவும் களமிறங்கி உள்ளன. பாஜக-ஜேடியூ அணியில் இருந்த எல்ஜேபி இம்முறை தனித்து ஜேடியூவை எதிர்த்து போட்டியிடுகிறது.

மேலும் ஒரு பீகார் அமைச்சர் மரணம்- இந்தியாவில் கொரோனாவுக்கு பலியான 20-வது மக்கள் பிரதிநிதிமேலும் ஒரு பீகார் அமைச்சர் மரணம்- இந்தியாவில் கொரோனாவுக்கு பலியான 20-வது மக்கள் பிரதிநிதி

பீகாரில் தேசிய கட்சிகள் வாக்கு

பீகாரில் தேசிய கட்சிகள் வாக்கு

பீகார் மாநிலத்தில் இருந்து ஜார்க்கண்ட் தனி மாநிலம் 2000-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இதனையடுத்து 2000, 2005, 2010 மற்றும் 2015-ம் ஆண்டுகளில் பீகார் சட்டசபை தேர்தல்கள் நடைபெற்றன. இந்த 4 சட்டசபை தேர்தல்களில் மொத்தம் 6 தேசிய கட்சிகள் களத்தில் போட்டியிட்டன. பாஜக, பகுஜன் சமாஜ், சிபிஐ, சிபிஎம், காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் ஆகிய 6 கட்சிகளும் மொத்தமாக 2005 தேர்தலில் 23.57% வாக்குகளைப் பெற்றிருந்தன. இது 2015 தேர்தலில் 35.6% ஆக அதிகரித்தது.

பாஜகவின் வாக்குகள் அதிகரிப்பு

பாஜகவின் வாக்குகள் அதிகரிப்பு

இதில் பாஜக மட்டும் 2005 தேர்தலில் 10.97% வாக்குகளைப் பெற்றிருந்தது. 2015-ல் பாஜகவின் வாக்கு சதவீதம் 24.42% ஆக அதிகரித்தது. 2015-ல் பாஜக 157 சட்டசபை தொகுதிகளில் போட்டியிட்டதும் இந்த வாக்கு சதவீதம் அதிகரிப்புக்கு ஒரு காரணம். ஏனெனில் முந்தைய 2005 தேர்தலில் பாஜக மொத்தம் 102 இடங்களில்தான் போட்டியிட்டது.

காங்கிரஸுக்கும் ஓகே

காங்கிரஸுக்கும் ஓகே

2015 சட்டசபை தேர்தலில் தேசிய கட்சியான பகுஜன் சமாஜ் 228 தொகுதிகளில் போட்டியிட்டது. சிபிஐ 98, சிபிஎம் 43, காங்கிரஸ் 41, தேசியவாத காங்கிரஸ் 41 தொகுதிகளிலும் போட்டியிட்டன. இதில் காங்கிரஸ் கட்சியின் வாக்கு சதவீதம்தான் உயர்ந்திருந்தது. இதர பகுஜன் சமாஜ், இடதுசாரிகள், தேசியவாத கட்சிகளின் வாக்கு சதவீதம் சரிவைத்தான் சந்தித்தன.

இடதுகளின் நிலவரம்

இடதுகளின் நிலவரம்

2010-ல் காங்கிரஸ் கட்சி மொத்தம் உள்ள 243 தொகுதிகளிலுமே போட்டியிட்டது. 2015-ல்தான் 41 தொகுதிகளில் போட்டியிட்டது. பகுஜன் சமாஜ் கட்சி ஒவ்வொரு தேர்தலில் 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் போட்டியிட்டு 4.41% வாக்குகளைப் பெற்றது. ஆனால் 2015 தேர்தலில் அதன் வாக்கு சதவீதம் 2.07% ஆக குறைந்தது. 2005-ல் 17 தொகுதிகளில் சிபிஐ போட்டியிட்டது. 2015-ல் 98 இடங்களில் போட்டியிட்டும் கூட வாக்கு சதவீதம் 1.36% முதல் 2.09% ஆகத்தான் இருந்தது. சிபிஎம் நிலைமையோ படுமோசமானது. 2005-ல் 10 தொகுதிகளிலும் 2015ல் 43 இடங்களிலும் போட்டியிட்ட அந்த கட்சி 0.61% முதல் 0.71% வாக்குகளைத்தான் பெற முடிந்தது. தேசியவாத காங்கிரஸ் கட்சி 2010-ல் 171 இடங்களில் போட்டியிட்டது. ஆனால் அந்த கட்சியால் 1.82% வாக்குகளைத் தாண்ட முடியவில்லை.

மாநில கட்சிகள் நிலைமை

மாநில கட்சிகள் நிலைமை

பீகாரைப் பொறுத்தவரை ஜேடியூ, ஆர்ஜேடி, எல்ஜேபி ஆகியவைதான் பிரதான மாநில கட்சிகள். இதில் 2005 தேர்தலில் 203 இடங்களில் போட்டியிட்ட எல்ஜேபி 11.10% வாக்குகளையும் 175 தொகுதிகளில் போட்டியிட்ட ஆர்ஜேடி 23.45%; 139 இடங்களில் போட்டியிட்ட ஜேடியூ 20.46% வாக்குகளைப் பெற்றன.

மாநில கட்சிகளுக்கும் சரிவு

மாநில கட்சிகளுக்கும் சரிவு

2015-ல் 42 இடங்களில் போட்டியிட்ட எல்ஜேபிக்கு 4.83%; 101 இடங்களில் போட்டியிட்ட ஆர்ஜேடிக்கு 18.35%; 101 இடங்களில் போட்டியிட்ட ஜேடியூவுக்கு 16.83% வாக்குகள் கிடைத்தன. 2005-ல் மாநில கட்சிகள் இணைந்து பெற்ற வாக்குகள் 57.39%. இது 2015 தேர்தலில் 42.58% ஆக குறைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
According to the Data, BJP's Vote share increase from the 2005 Assembly Polls to 2015 in Bihar.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X