பாட்னா அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பீகாருக்கு இலவச கொரோனா தடுப்பூசி.. மரண பயத்தை பாஜக விற்பதற்கு சமம்.. எதிர்க்கட்சிகள்

Google Oneindia Tamil News

பாட்னா: கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என பாஜக கூட்டணி தனது தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளது மரண பயத்தை விற்பதற்கு சமம் ஆகும் என எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

பீகார் மாநிலத்தில் சட்டசபை தேர்தல் அக்டோபர் 28, நவம்பர் 3 மற்றும் 7 ஆகிய தேதிகளில் 3 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. பீகாரில் ஏற்கெனவே ஆட்சியில் இருந்து ஜேடியு-பாஜக கூட்டணி ஒரு அணியாகவும் காங்கிரஸ் ஆர்ஜேடி இன்னொரு அணியாகவும் மோதுகின்றன.

தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்புகளிலும் ஜேடியு- பாஜக கூட்டணியே மகத்தான வெற்றி பெறும் என கணிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பூசி என்ன தேர்தல் லாலிபாப்பா?.. அது உயிர் காக்கும் மருந்தில்லையா?.. காங். விளாசல்கொரோனா தடுப்பூசி என்ன தேர்தல் லாலிபாப்பா?.. அது உயிர் காக்கும் மருந்தில்லையா?.. காங். விளாசல்

இலவசம்

இலவசம்

இந்த நிலையில் இன்றைய தினம் பாஜக கூட்டணி தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. 11 அம்சங்கள் கொண்ட அந்த தேர்தல் அறிக்கையில் முக்கியமானது தாங்கள் வெற்றி பெற்றால் கொரோனா தடுப்பூசியை பீகார் மக்களுக்கு இலவசமாக தருவோம் என்பதுதான். இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றன.

மரண பயம்

மரண பயம்

இதுகுறித்து ராஷ்ட்ரீய ஜனதா கட்சி கூறுகையில் அரசியலுக்காக கொரோனா தொற்றை பயன்படுத்தும் பாஜக தற்போது மரண அச்சத்தையும் விற்கிறது. கொரோனா தடுப்பூசி என்பது இந்தியாவுக்கு சொந்தமானது. பாஜகவுக்கு சொந்தமானது அல்ல. மரண பயத்தையும் நோய் பயணத்தையும் விற்க அவர்கள் முடிவு செய்துவிட்டார்கள். பீகார் மக்களுக்கு சுய கவுரவம் உள்ளது என அக்கட்சி குறிப்பிட்டுள்ளது.

தடுப்பூசி

தடுப்பூசி

இதுகுறித்து ராகுல் காந்தி கூறுகையில் மாநில வாரியாக தேர்தல் அட்டவணையை பாருங்கள். உங்களுக்கு கொரோனா தடுப்பூசி எப்போது கிடைக்கும். பொய்யான வாக்குறுதிகளை மக்களிடம் கூடவேண்டாம் என ராகுல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து சசிதரூர் கூறுகையில் நீங்கள் வாக்களியுங்கள் நான் தடுப்பூசி தருகிறேன் என்கிறார்கள். வெட்கமாக இல்லை என சசிதரூர் கேள்வி எழுப்பியுள்ளார்.

தடுப்பூசி

தடுப்பூசி

இதுகுறித்து ஒமர் அப்துல்லா கூறுகையில் கொரோனா தடுப்பூசியை இலவசமாக வழங்குவதாக கூறும் பாஜக அதற்காகும் செலவை தங்கள் கட்சியின் பணத்திலிருந்து எடுத்து தருமா. ஒரு வேளை அதற்கான பணம் அரசு கருவூலத்தில் இருந்து வந்தால் பீகார் மக்கள் மட்டும் எப்படி இலவச தடுப்பூசியை பெறுவர்? என கேள்வி எழுப்பியுள்ளார்.

இலவச தடுப்பூசி

இலவச தடுப்பூசி

இதுகுறித்து ஆம் ஆத்மி கட்சி கூறுகையில் இந்த கொரோனா தடுப்பூசி வெறும் பாஜக வாக்காளர்களுக்கு மட்டும்தானா. பாஜக ஆளாத மாநிலங்களில் என்ன நடக்கும். பாஜகவுக்கு வாக்களிக்காத இந்தியர்களுக்கு இலவச தடுப்பூசி கிடைக்காதா என கேள்வி எழுப்பியுள்ளது.

English summary
Opposition attacks BJP for their announcement on free covid 19 vaccine, as it selling fear of death.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X