• search
பாட்னா அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

பீகார்: சித்தப்பாவுடன் உரசல்.. கட்சியை கட்டுப்படுத்த சிராக் பாஸ்வான் மூவ்.. அரசியல் யாத்திரை ஆரம்பம்

Google Oneindia Tamil News

பாட்னா: தனது சித்தப்பா பசுபதி பராஸ் உடன், மோதல் போக்கு அதிகரித்து வரும் நிலையில், சிராக் பாஸ்வான், தனது ஆதரவாளர்களை அணிதிரட்டுவதற்காக அவரது தந்தை ராம் விலாஸ் பாஸ்வானின் பாரம்பரிய லோக்சபா தொகுதியான ஹாஜிப்பூரிலிருந்து யாத்திரையை தொடங்கியுள்ளார்.
"ஆசிர்வாத் யாத்திரை" என்று இதற்கு பெயர் சூட்டப்பட்டுள்ளது.

ஜெ. நினைவிடத்திற்கு செல்கிறார் சசிகலா?.. தொண்டர்களை சந்திக்கிறார்?.. ஜூலை 5 க்கு பிறகு சாத்தியம்? ஜெ. நினைவிடத்திற்கு செல்கிறார் சசிகலா?.. தொண்டர்களை சந்திக்கிறார்?.. ஜூலை 5 க்கு பிறகு சாத்தியம்?

மோடி அரசில் மத்திய அமைச்சராக இருந்த ராம்விலாஸ் பாஸ்வான் கடந்த ஆண்டு அக்டோபரில் இறந்தார். மிகவும் அனுபவம் வாய்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவராக இருந்தவர் ராம்விலாஸ் பாஸ்வான். சோசலிச குழுக்கள் முதல் காங்கிரஸ் மற்றும் பாஜக வரை பல்வேறு கட்சிகள் தலைமையிலான அரசுகளில் அமைச்சராக பணியாற்றினார்.

மோடியின் நண்பர்

மோடியின் நண்பர்

இன்று அவரது பிறந்த நாள் தினம். இது தொடர்பாக, பிரதமர் மோடி வெளியிட்ட ட்வீட்டில், "இன்று எனது நண்பர் மறைந்த ராம் விலாஸ் பாஸ்வான் ஜியின் பிறந்த நாள். அவரது இருப்பை நான் பெரிதும் மிஸ் செய்கிறேன். அவர் இந்தியாவின் மிகவும் அனுபவம் வாய்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் நிர்வாகிகளில் ஒருவராக இருந்தார். பொது சேவை மற்றும் நலிந்தவர்களுக்கு அதிகாரம் அளிப்பதில் அவர் செய்த பங்களிப்புகள் எப்போதும் நினைவில் வைக்கப்படும்." என்று புகழாரம் சூட்டியுள்ளார். பாஸ்வானின் மரணத்திற்கு பிறகு அவர் தலைவராக இருந்த லோக் ஜன சக்தி கட்சிக்கு யார் தலைமை வகிப்பது என்பது பற்றி கட்சிக்குள் அவரது மகன் சிராக் பாஸ்வான் மற்றும் அவரது சகோதரர் பசுபதி குமார் பராஸ் ஆகியோரிடையே உரசல் ஏற்பட்டது.

சிராக் பாஸ்வான் அரசியல்

சிராக் பாஸ்வான் அரசியல்

கடந்த பீகார் சட்டசபை தேர்தலில்,பாஜகவின் பி டீமாக சிராக் பாஸ்வானின் லோக் ஜனசக்தி செயல்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. பீகாரில் நிதிஷ்குமாரின் ஜேடியூ அதிக இடங்களில் வென்றுவிடக் கூடாது என்று திட்டம் போட்டது பாஜக. எனவே சிராக் பாஸ்வானின் லோக் ஜனசக்தியை ஜேடியூவுக்கு எதிராக களமிறக்கியது பாஜக. இத்தனைக்கும் பாஜகவின் கூட்டணி கட்சியாகத்தான் ஜேடியூவும் களத்தில் நின்றது. ஜேடியூவின் தலைவர்கள் பாஜகவுக்கு எவ்வளவோ எடுத்து சொல்லியும் சிராக் பாஸ்வான், ஜேடியூவுக்கு எதிரான வேட்பாளர்களை வாபஸ் பெறவில்லை.

கட்சிக்குள் பிளவு

கட்சிக்குள் பிளவு


இதனால் பீகாரில் ஜேடியூவைவிட பாஜக அதிக இடங்களில் வென்றது. இதனை ஜேடியூ தலைவர்கள் பகிரங்கமாக விமர்சித்தனர். இருந்தபோதும் ஜேடியூ- பாஜக ஆட்சி பீகாரில் நடைபெற்று வருகிறது. இப்போது சிராக் பாஸ்வானுக்கு எதிரான சித்தப்பா, பசுபதி குமார் பராஸ், பிரின்ஸ் ராஜ் உள்ளிட்டோர் தலைமையில் 5 எம்.பிக்கள் கூண்டோடு ஜேடியூவுக்கு தாவுகின்றனர். மேலும் லோக்சபா சபாநாயகர் ஓம்பிர்லாவுக்கு, லோக்சபாவில் தங்களை தனி அணியாக அங்கீகரிக்க கோரியும் இந்த 5 எம்.பிக்களும் கடிதமும் அனுப்பியுள்ளனர்.

பிறந்த நாளில் யாத்திரை

பிறந்த நாளில் யாத்திரை

இந்த நிலையில், சிராக் பாஸ்வான் கட்சியை தக்க வைத்துக் கொள்ள பிரயத்தனப்பட்டு வருகிறார். இதன் ஒரு பகுதியாக, தனது தந்தை பிறந்த நாளான ஜூலை 5 முதல் ‘ஆஷிர்வாத் யாத்திரை' தொடங்குவதாக அறிவித்திருந்தார். பாஜ்வானின் அறிவிப்பு எல்.ஜே.பி தேசிய நிர்வாக குழு கூட்டத்தைத் தொடர்ந்து வெளி வந்தது. அந்த குழு கூட்டத்தில், தேசிய நிர்வாக உறுப்பினர்களில் 90 சதவீதத்திற்கும் அதிகமானோர் அவரது தலைமைக்கு ஒப்புதல் அளித்தனர்.

பசுபதி பராஸ் தொகுதியில் யாத்திரை

பசுபதி பராஸ் தொகுதியில் யாத்திரை

ராம் விலாஸ் பாஸ்வான் ஹாஜிபூர் லோக்சபா தொகுதியிலிருந்துதான் பல முறை தேர்ந்தெடுக்கப்பட்டதாலும், சித்தப்பாவான பசுபதி குமார் பராஸ் இப்போது இந்த தொகுதியில்தான் எம்பியாக இருப்பதாலும், ஹாஜிப்பூரிலிருந்து யாத்திரை தொடங்க முடிவு செய்துள்ளார் சிராக் பாஸ்வான்.

பசுபதி ஆதரவு எம்.பி.க்கு எதிராக கருப்புக் கொடி

பசுபதி ஆதரவு எம்.பி.க்கு எதிராக கருப்புக் கொடி

சித்தப்பா தொகுதிக்குள் சிராக் வருவதால் பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது. ஏற்கனவே, கராகியாவில் பசுபதி பராஸ் ஆதரவாளரான லோக் ஜனசக்தி கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மெஹபூப் அலிக்கு சிராக் ஆதரவாளர்கள் கறுப்புக் கொடிகளை காட்டி எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மெகபூர் அலி முன்னாள் காங்கிரஸ் தலைவர், அவர் எல்.ஜே.பி-யில் சேர்ந்ததும், 2014 ல் ககேரியாவிலிருந்து போட்டியிட வாய்ப்பு தரப்பட்டது. அந்த நேரத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஒரே முஸ்லீம் எம்.பி. இவர்தான். ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, ராம் விலாஸ் பாஸ்வான் மீண்டும் அவருக்கே சீட் கொடுத்தார். பராஸ் அணியோடு அவர் உறவில் இருப்பதால் சிராக் ஆதரவாளர்கள் இப்படி கருப்புக் கொடி காட்டியுள்ளனர்.

பசுபதி பராஸ் கருத்து

பசுபதி பராஸ் கருத்து

இதனிடையே தனது அண்ணன் மகன் சிராக் பாஸ்வான் ஆசீர்வாத் யாத்திரையை துவங்குவது பற்றி கருத்து தெரிவித்துள்ள பசுபதி பராஸ், அவர் மீது தனது தனிப்பட்ட கோபம் கிடையாது என்றும் அவரின் அரசியல் ஆலோசகர் தவறான வழிகாட்டுதலை அளித்து வருவதால் கட்சியை நிர்வகிப்பதில் அவர் குழப்பமான மனநிலையில் இருக்கிறார் என்று குற்றம்சாட்டியுள்ளார். யாத்திரை தொடங்கும் போது தனது கட்சி அலுவலகத்திற்கு வருகை தந்தால் அவரை வரவேற்க தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளார் பசுபதி.

English summary
Faced with an internal revolt, Chirag Paswan will launch a yatra from Hajipur, his father Ram Vilas Paswan’s traditional Lok Sabha seat, on Monday to rally the party’s supporters after the split of old party members.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X