பாட்னா அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தமிழகத்தை போலவே.. பீகாரிலும் சொந்த கூட்டணியை கீழே இழுத்துவிட்ட காங்கிரஸ்.. பாஜக கூட்டணி முன்னிலை

Google Oneindia Tamil News

பாட்னா: தமிழகத்தில் கடந்த சட்டசபைத் தேர்தலின்போது திமுக கூட்டணியில் காங்கிரஸ் எப்படி ஒரு கூடுதல் பாரமாக மாறி, திமுக ஆட்சியை பிடிக்க முடியாமல் செய்ததோ அதே போல இப்போது பீகாரிலும் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கூட்டணிக்கு காங்கிரஸ் பாரமாக மாறியுள்ளது. இது பாஜக கூட்டணிக்கு சாதகமாக உள்ளது.

Recommended Video

    Bihar-லும் சொந்த கூட்டணியை கீழே இழுத்துவிட்ட Congress | Oneindia Tamil

    மாலை 4 மணி நிலவரப்படி, ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைமையிலான கூட்டணி 110 இடங்களிலும், தேசிய ஜனநாயக கூட்டணி 123 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகின்றன.

    243 தொகுதிகள் கொண்ட சட்டசபை தேர்தலில், ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி 144 தொகுதிகளில் போட்டியிட்டது. அதில் சுமார் 72 இடங்களில் முன்னிலை வகித்தது. காங்கிரஸ் கட்சி 70 தொகுதிகளில் போட்டியிட்டது. 21 தொகுதிகளில் மட்டுமே முன்னிலை வகிக்கிறது. பாஜக 73 தொகுதிகளிலும், ஜேடியூ 43 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கின்றன.

    பீகாரில் முதல் முறையாக தனிப்பெரும் கட்சியாக உருவெடுக்கிறது பாஜக பீகாரில் முதல் முறையாக தனிப்பெரும் கட்சியாக உருவெடுக்கிறது பாஜக

    நான்கில் ஒரு தொகுதி

    நான்கில் ஒரு தொகுதி

    அதாவது போட்டியிட்ட பாதிக்கும் மேற்பட்ட தொகுதிகளில் ராஷ்ட்ரீய ஜனதாதளம் முன்னிலை வகிக்கும் நிலையில், போட்டியிட்டதில் சுமார் நான்கில் ஒரு தொகுதியில் தான் காங்கிரஸ் முன்னிலை வகிக்கிறது. இதனால்தான் பாஜக கூட்டணி முன்னிலை பெறத் தொடங்கியுள்ளது. ராஷ்ட்ரிய ஜனதாதள கூட்டணியில் மிகப்பெரிய பாரமாக காங்கிரஸ் மாறி அந்த கூட்டணியை முன்னேறவிடாமல் கீழே இழுத்துக் கொண்டிருக்கிறது.

    திமுக கூட்டணியில் காங்கிரஸ்

    திமுக கூட்டணியில் காங்கிரஸ்

    காங்கிரஸ் தனது கூட்டணிக்கு பாரமாக மாறுவது தமிழகத்தில் இருந்துதான் ஆரம்பித்தது என்று சொல்லலாம். 2016 ஆம் ஆண்டு, திமுக கூட்டணியில் காங்கிரஸ் இருந்தது. மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் திமுக 176 தொகுதிகளில் மட்டும் போட்டியிட்டது. கூட்டணி கட்சியான காங்கிரசுக்கு 41 இடங்களை வாரி வழங்கியது. இந்த தேர்தலில் திமுகவுக்கு மட்டும் 31.56 சதவீதம் வாக்குகள் கிடைத்தன. ஆனால் காங்கிரஸின் வாக்கு சதவீதம் வெறும் 6.47 மட்டுமே.

    தவற விட்ட திமுக

    தவற விட்ட திமுக

    திமுக தனித்து 89 தொகுதிகளை வென்றது. காங்கிரஸ் கட்சி வெறும் 8 தொகுதிகளை மட்டுமே வென்றது. காங்கிரஸ் போட்டியிட பல தொகுதிகளில் அதிமுக வென்றது. அதிமுக 227 தொகுதிகளில் தனித்து போட்டியிட்டது. எனவே 'காங்கிரஸின் புண்ணியத்தால்' அதிமுக ஆட்சியை மறுபடியும் பிடித்தது. அதிமுக கூட்டணி 134 இடங்களையும், திமுக கூட்டணி 98 இடங்களையும் பிடித்தது.

     காங்கிரசை புறக்கணித்த மக்கள்

    காங்கிரசை புறக்கணித்த மக்கள்

    இப்போது பீகாரிலும் ராஷ்ட்ரிய ஜனதா தளம் மற்றும் தேஜஸ்வி அதிக வாக்குகளை மக்கள் வழங்கியுள்ளார்கள் தவிர காங்கிரசை புறக்கணித்துள்ளனர் என்பது இந்த ட்ரெண்ட் மூலம் தெரிய வருகிறது. இதனால் இக் கூட்டணி ஆட்சியை பிடிக்க முடியாமல் போனாலும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.

    English summary
    Congress become a big extra luggage for Rashtriya Janata dal alliance in Bihar as the age-old party is the reason for BJP and JDu alliance is getting lead. The Congress party did the same think in 2016 Tamil Nadu assembly elections, while it was with DMK alliance.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X