பாட்னா அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பீகார் சட்டசபை தேர்தல்: ஜார்க்கண்ட் போல வெற்றியை அறுவடை செய்ய காங். மெகா கூட்டணி வியூகம்

Google Oneindia Tamil News

பாட்னா: ஜார்க்கண்ட்டைப் போல பீகார் சட்டசபை தேர்தலிலும் அமோக வெற்றி பெற மெகா கூட்டணி அமைப்பதற்காக முயற்சிகளை காங்கிரஸ் மேற்கொண்டு வருகிறது.

ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தலில் ஜே.எம்.எம். தலைமையில் காங்கிரஸ்- ஆர்ஜேடி கட்சிகள் இணைந்து மெகா கூட்டணியை அமைத்தன. இந்த கூட்டணியின் வாக்குகளை சிந்தாமல் சிதறாமல் செய்வதற்கான ஒருங்கிணைப்பு பணிகளை 3 கட்சிகளும் மேற்கொண்டன.

Congress to form mega alliance for Bihar Assembly Elections 2020

இதே பாணியை இந்த ஆண்டு நடைபெற உள்ள பீகார் சட்டசபை தேர்தலிலும் காங்கிரஸ் கடைபிடிக்க உள்ளது. ஆர்ஜேடியின் தலைமையில் பீகாரில் காங்கிரஸ் மெகா கூட்டணியை அமைக்க உள்ளது.

இக்கூட்டணியில் ராஷ்டிரிய உபேந்திர குஷாவாவின் லோக் சமதா கட்சி, முன்னாள் முதல்வர் ஜிதின் ராம் மஞ்சியின் ஹிந்துஸ்தானி அவாமி மோர்ச்சா ஆகியவையும் இடம்பெற உள்ளன. கடந்த ஆண்டு லோக்சபா தேர்தலிலும் இப்படியான ஒரு கூட்டணியை காங்கிரஸ் அமைத்தது.

மாவட்ட கவுன்சிலர்களை தட்டி தூக்கிய திமுக.. ஒன்றிய கவுன்சிலர்களை அள்ளிய அதிமுக.. தேர்தலில் டிவிஸ்ட்மாவட்ட கவுன்சிலர்களை தட்டி தூக்கிய திமுக.. ஒன்றிய கவுன்சிலர்களை அள்ளிய அதிமுக.. தேர்தலில் டிவிஸ்ட்

பீகாரில் காங்கிரஸ் அமைக்க இருக்கும் கூட்டணியில் இடதுசாரிகள் இம்முறை இடம்பெறுவார்களா? என்பது தெரியவில்லை. தற்போதே இக்கூட்டணிக்கான தொகுதி பங்கீடு குறித்து அதிகாரப்பூர்வமற்ற பேச்சுவார்த்தைகள் தொடங்கிவிட்டன.

இருப்பினும் அதிகாரப்பூர்வமாக ஏப்ரல்-மே மாதம் காங்கிரஸின் மெகா கூட்டணியின் அதிகாரப்பூர்வ தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தைகள் நடைபெறும். மேலும் தற்போதே அனைத்து மாவட்ட அமைப்புகளிலும் மெகா கூட்டணி அமைக்க இருக்கிறோம்; ஆகையால் போட்டியிடாத இடங்களிலும் கூட்டணி கட்சிக்கான வாக்குகளை கிடைக்கும் வகையில் ஒருங்கிணைந்து செயற்பட வேண்டும் என்கிற களப்பணி தொடங்கப்பட்டுள்ளது.

English summary
Congress and RJD, Rashtriya Lok Samta Party, Hindustani Awam Morcha (HAM) will form mega alliance for Bihar Assembly Elections 2020.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X