பாட்னா அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பாட்னாவில் தனித்தனி அடையாள அட்டைகளுடன் முதல்முறையாக வாக்களித்த தலை ஒட்டிப் பிறந்த சகோதரிகள்!

Google Oneindia Tamil News

பாட்னா: பீகார் மாநிலம் பாட்னாவில் முதல் முறையாக தலை ஒட்டி பிறந்த சகோதரிகள் தனித்தனியாக அடையாள அட்டைகளுடன் வாக்களித்தனர்.

நாட்டில் உள்ள 7 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசங்களில் இன்று லோக்சபா தேர்தல் நடைபெற்று வருகிறது. எல்லா இடங்களிலும் விறுவிறுப்பாக வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது.

Conjoined sisters Saba and Farah cast their votes in Patna

பீகார் மாநிலத்தில் இன்று காலை அதன் முதல்வர் நிதிஷ்குமார் வாக்களித்தார். பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்த போது அவர் கூறுகையில் மக்களவைத் தேர்தலில் இதுபோல் நீண்ட நாட்கள் நடத்தக் கூடாது.

 மறுவாக்குப்பதிவு அமமுகவிற்கு சாதகம்.. உற்சாகத்தில் தங்க தமிழ்செல்வன் மறுவாக்குப்பதிவு அமமுகவிற்கு சாதகம்.. உற்சாகத்தில் தங்க தமிழ்செல்வன்

ஒவ்வொரு கட்டத்துக்கும் அதிக நாட்கள் இடைவெளி தேவையில்லை. இதுதொடர்பாக அனைத்து கட்சி தலைவர்களுக்கும் கடிதம் எழுதுவேன் என தெரிவித்தார்.

மொத்தம் 8 தொகுதிகளுக்கான வாக்குப் பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் பீகாரில் ஒட்டிப் பிறந்த இரட்டை சகோதரிகள் முதல்முறையாக இன்று தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர்.

சபா மற்றும் ஃபாரா என்ற இரு சகோதரிகள் பிறக்கும் போதே தலை ஒட்டி பிறந்தனர். 18 வயதை நிறைவுச் செய்த அவர்கள் இருவரும் இன்று வாக்களிக்க வந்தனர். தலை ஒட்டி பிறந்திருந்தாலும் அவர்களிடம் இரு அடையாள அட்டைகள் இருந்தன.

English summary
Conjoined sisters Saba & Farah cast their votes as separate individuals with independent voting rights for the first time.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X