பாட்னா அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பீகாரில் காங். 70 இடங்களில் போட்டியிட்டது ஆர்ஜேடி கூட்டணியின் பலவீனம்: சிபிஎம் சாடல்

Google Oneindia Tamil News

பாட்னா: பீகார் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 70 இடங்களில் போட்டியிட்டது என்பது ஆர்ஜேடி கூட்டணியின் பலவீனத்தை காட்டுகிறது என மார்க்சிஸ் கம்யூனிஸ்ட் கட்சி சாடியுள்ளது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பீப்பிள்ஸ் டெமாக்ரஸி ஏட்டின் தலையங்கத்தில் எழுதப்பட்டுள்ளதாவது:

பீகார்: நிதிஷ்குமார் அமைச்சரவையில் பாஜகவுக்கு 21; ஜேடியூவுக்கு 12 இடங்கள்? பீகார்: நிதிஷ்குமார் அமைச்சரவையில் பாஜகவுக்கு 21; ஜேடியூவுக்கு 12 இடங்கள்?

பாஜக வாக்கு சதவீதம் குறைவு

பாஜக வாக்கு சதவீதம் குறைவு

பீகாரில் பாஜக-ஜேடியூ கூட்டணிக்கும் ஆர்ஜேடி-காங். இடதுசாரிகள் கூட்டணிக்கும் இடையேயான வாக்கு சதவீத வித்தியாசம் 0.2% மட்டும்தான். 2019 லோக்சபா தேர்தலை ஒப்பிடுகையில் பாஜக கூட்டணியின் 12.4% வாக்குகள் இடம்பெயர்ந்திருக்கிறது.

மக்கள் வெளிப்படுத்திய கோபம்

மக்கள் வெளிப்படுத்திய கோபம்

நிதிஷ்குமார் தலைமையிலான அரசுக்கு எதிரான மக்களின் அதிருப்தி, கோபம் ஆகியவற்றின் வெளிப்பாடால் ஜேடியூ 43 இடங்களில்தான் வெல்ல முடிந்தது. ஆர்ஜேடி-காங்கிரஸ் கூட்டணியில் வெற்றி பெற்ற பின் பாஜக அணிக்கு நிதிஷ்குமார் தாவியதை மக்கள் ஏற்கவில்லை.

வென்ற இடதுசாரிகள்

வென்ற இடதுசாரிகள்

பீகார் தேர்தலில் இடதுசாரிகள் 16 தொகுதிகளில் வென்றிருக்கின்றனர். பாஜகவைப் பொறுத்தவரையில் வழக்கமான் இந்துத்துவா செயல்திட்டங்களையே பீகார் தேர்தலில் முன்வைத்தது. மதவெறியும் ஜாதி அரசியலும் இணைந்ததால் பாஜக 74 இடங்களை வென்றிருக்கிறது.

காங். அதிக இடங்கள்

காங். அதிக இடங்கள்

தேர்தல் கூட்டணிகளில் இடம்பெறும் கட்சிகள் தங்களது சக்திக்கு அதிகமான இடங்களை பெற கூடாது என்கிற உண்மையையும் இத்தேர்தல் முடிவு சொல்கிறது. காங்கிரஸ் கட்சியானது 70 இடங்களில் போட்டியிட்டது ஆர்ஜேடி கூட்டணியின் பலவீனத்தை காட்டுகிறது. இவ்வாறு அதில் எழுதப்பட்டுள்ளது.

English summary
CPI (M) mouthpiece People's Democracy said that 70 seats that the Congress fought proved to be a weakness for the alliance in Bihar.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X