பாட்னா அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

என்னாது! 18 மாதத்தில் 13 குழந்தைகளை பெற்றெடுத்த 65 வயது மூதாட்டி?.. பிராடுத்தனத்திற்கு அளவே இல்லையா!

Google Oneindia Tamil News

பாட்னா: பீகார் குழந்தை பேறு திட்டத்தில் முறைகேட்டிற்கு ஒரு அளவே இல்லாமல் போய்விட்டது. 65 வயது மூதாட்டி ஒருவர் 18 மாதங்களில் 13 குழந்தைகளை பெற்றெடுத்ததாக ஆவணங்கள் பகீர் கிளப்புகின்றன.

பீகார் மாநிலம் முஸாஃபர்பூர் மாவட்டம் முசாஹரி தொகுதியில் சோதி கோதியா கிராமத்தை சேர்ந்தவர் லீலா தேவி (65). இவருக்கு மொத்தம் 4 பிள்ளைகள் உள்ளனர். இவர் கடைசியாக கடந்த 21 ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு ஆண் குழந்தையை பெற்றெடுத்தார்.

அந்த மாவட்டத்தில் தேசிய சுகாதாரத் திட்டத்தின் கீழ் தேசிய மகப்பேறு நன்மை பெறும் பல பயனாளிகளில் லீலா தேவியும் ஒருவராம். இந்த திட்டத்தின் கீழ் தாய்க்கு ரூ 1400ம், ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கர்ப்பிணியை அழைத்து வரும் ஏஎஸ்எச்ஏ தொழிலாளிக்கு ரூ 600 உதவித் தொகையாக வழங்கப்படுகிறது.

சட்டசபையில் பரபரப்பை ஏற்படுத்திய திமுகவின் குட்கா வழக்கு.. இன்று ஹைகோர்ட்டில் தீர்ப்பு சட்டசபையில் பரபரப்பை ஏற்படுத்திய திமுகவின் குட்கா வழக்கு.. இன்று ஹைகோர்ட்டில் தீர்ப்பு

18 மாதங்கள்

18 மாதங்கள்

லீலாதேவியின் கணவர் விவசாயியாவார். கடந்த 18 மாதங்களில் லீலா தேவி 13 குழந்தைகளை பெற்றெடுத்ததாக ஆவணங்கள் கூறுகின்றன. இந்த திட்டத்தின் கீழ் இவர் பயனாளியாக சேர்க்கப்பட்டது கடந்த ஒரு வாரத்திற்கு முன்தான் தெரியவந்துள்ளது.

வாடிக்கையாளர் சேவை

வாடிக்கையாளர் சேவை

பாரத ஸ்டேட் வங்கியின் வாடிக்கையாளர் சேவை மையத்தின் ஊழியர் பயனாளி குறித்த விவரங்களை சரி பார்க்க லீலாதேவியின் வீட்டுக்கு கடந்த 6ஆம் தேதி சென்றிருந்தார். அப்போதுதான் அரசின் பணம் தவறுதலாக லீலாதேவியின் வங்கிக் கணக்கிற்கு பரிமாற்றம் செய்யப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து வாடிக்கையாளர் சேவை மையத்திற்கு வந்து ஒரு படிவத்தில் கைரேகை வைத்துவிட்டால் இந்த பிரச்சினை தீரும் என அந்த ஊழியர் தெரிவித்துள்ளார்.

வாடிக்கையாளர் சேவை மையம்

வாடிக்கையாளர் சேவை மையம்

இதனால் சந்தேகமடைந்த லீலாதேவி வாடிக்கையாளர் சேவை மையத்திற்கு செல்லாமல் நேராக முஷாஹரி ஆரம்ப சுகாதார மையத்திற்கு சென்றுள்ளார். அப்போதுதான் அவருக்கு அவருடைய கிராமத்தை சேர்ந்த 17 பெண்களும் அண்டைய கிராமமான ராஹுவா கிராமத்தை சேர்ந்த ஒரு பெண் உள்பட 18 பெண்கள் இந்த திட்டத்தின் மூலம் பயனடைந்துள்ளது தெரியவந்தது.

கர்ப்பிணிகள் அல்ல

கர்ப்பிணிகள் அல்ல

ஆனால் இந்த 18 பேரும் கர்ப்பிணிகள் அல்ல. இதே போல் சோட்டி கோத்தியா கிராமத்தை சேர்ந்த 59 வயதான ஷீலாதேவி, கடந்த 13 மாதங்களில் 8 குழந்தைகளை பெற்றெடுத்ததாக ஆரம்ப சுகாதார மைய ஆவணங்கள் கூறுகின்றன. ஒரு நாளில் இரு குழந்தைகளை பெற்றெடுத்தது போல் கணக்கு காட்டப்பட்டுள்ளன. உண்மையில் இந்த மூதாட்டிக்கு 4 குழந்தைகள் உள்ளனர். இவரது கடைசி பெண்ணுக்கு 17 வயது ஆகிறது.

இரு ஆண்டுகள்

இரு ஆண்டுகள்

இதுகுறித்து தகவலறிந்த மாவட்ட நிர்வாகம், அந்த மாவட்டத்தில் கடந்த இரு ஆண்டுகளில் மகப்பேறு நிதியுதவி கொடுக்கப்பட்ட பயனாளிகளின் விவரங்களை சமர்ப்பிக்குமாறு அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கும் உத்தரவிட்டுள்ளது. இவ்வாறு அறிக்கை சமர்ப்பிக்கும்பட்சத்தில் எத்தனை முறைகேடுகள் வெளியே வரும் என தெரியவில்லை.

English summary
As per Bihar's Delivery scam Scheme, 65 years old gives birth to 13 kids in 18 months, this lady has 21 years old son too.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X