பாட்னா அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பாஜகவின் கிளை தேர்தல் ஆணையம்.. தேஜஸ்வி முதல்வரானாலும் ஆச்சரியமில்லை.. சிவசேனா தாக்கு

Google Oneindia Tamil News

பாட்னா: பாஜகவின் கிளையாகத்தான் தேர்தல் ஆணையம் செயல்படுகிறது. நாளையே கூட தேஜஸ்வி யாதவை முதல்வராக்கினால் கூட ஆச்சரியப்பட முடியாது என்று சிவசேனா கூறியுள்ளது.

பீகார் தேர்தல் தொடர்பாக சிவசேனா தலைவர் சஞ்சய் ராவத் கூறுகையில், பீகார் தேர்தலில் என்ன நடக்கிறது என்பதை எல்லோரும் பார்த்துக் கொண்டுதான் உள்ளனர். ஆனால் தேர்தல் நடைமுறைகள் வெளிப்படையாக உள்ளதாக இன்னும் மக்கள் நம்பிக் கொண்டுள்ளனர்.

EC branch of BJP, wont be surprised if Tejashwi becomes Bihar CM tomorrow: Sanjay Raut

நாளையே பீகார் முதல்வராக தேஜஸ்வி யாதவை இவர்கள் அறிவித்தால் கூட ஆச்சரியப்பட முடியாது. பீகார் போன்ற ஒரு பெரிய மாநிலத்தில், குடும்பத்தினர் அனைவரும் சிறையில் உள்ள நிலையில், பெரிய பின்புலம் இல்லாத ஒரு இளைஞர், சிபிஐ, ஐடி வழக்குகள் சூழ்ந்துள்ள ஒருவர் அனைவரையும் எதிர்த்து நிற்கிறார் என்றால், என்ன நடக்கிறது என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.

நாளையே இவருக்குத்தான் அதிக வாக்குகள் கிடைத்துள்ளன என்று கூறி தேஜஸ்வியை முதல்வராக்கினால் கூட அதிர்ச்சி அடைய தேவையில்லை... ஆனால் மக்கள்தான் பாவம் தேர்தல் நியாயமாக நடைபெறுவதாக எண்ணிக் கொண்டுள்ளனர்.

பாஜகவின் கிளையாக தேர்தல் ஆணையம் மாறி விட்டது.. இது எல்லோருக்கும் தெரிந்ததுதான்.. பீகார் தேர்தலில் கொரோனா தடுப்பு மருந்தை வாக்குறுதியாக பாஜக அறிவித்தது தேர்தல் விதிமீறல் இல்லை என்று தேர்தல் ஆணையம் கூறியதிலிருந்தே இதைப் புரிந்து கொள்ளலாம். எனவே அவர்களிடமிருந்து இதைத் தவிர வேறு எதையும் எதிர்பார்க்க முடியாது என்றார் சஞ்சய் ராவத்.

போதும்ப்பா.. ரஜினியை விட்டுவிட்டு சசிகலா பக்கம் ரூட்டை மாற்றுகிறதா பாஜக.. இனிதான் ஆட்டம் ஆரம்பமே போதும்ப்பா.. ரஜினியை விட்டுவிட்டு சசிகலா பக்கம் ரூட்டை மாற்றுகிறதா பாஜக.. இனிதான் ஆட்டம் ஆரம்பமே

சஞ்சய் ராவத் சொல்லும்போது, பீகார் தேர்தலில் என்ன நடக்கிறது என்பதை எல்லோரும் பார்த்துக் கொண்டுதான் உள்ளனர். ஆனால் தேர்தல் நடைமுறைகள் வெளிப்படையாக உள்ளதாக இன்னும் மக்கள் நம்பிக் கொண்டுள்ளனர்.

English summary
EC branch of BJP, won't be surprised if Tejashwi becomes Bihar CM tomorrow: Sanjay Raut
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X