பாட்னா அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தேர்தல் ஆணையம் செய்த பெரிய தப்பு.. போட்டோ போட்டு சுட்டிக் காட்டும் லாலு மகன்

Google Oneindia Tamil News

Recommended Video

    தேர்தல் ஆணையம் செய்த தவறை சுட்டிக்காட்டிய தேஜஸ்வினி யாதவ்

    பாட்னா: சிறுவர்களை கொண்டு ஓட்டுப்பதிவு மெஷின்களை, சுமக்க வைத்தது தவறான செயல் என்று தேர்தல் ஆணையத்திற்கு, பீகார் எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் துணை முதல்வருமான தேஜஸ்வினி யாதவ் தெரிவித்துள்ளார்.

    லாலு பிரசாத் யாதவ் மகனான இவர், தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், சிறுவர்கள் ஓட்டுப் பதிவு இயந்திரங்களை தலை மீது தூக்கிச் செல்லும் போட்டோவை ஷேர் செய்துள்ளார். மேலும், ஹிந்தியில், ட்வீட் செய்துள்ளார்.

    EVMs transported by children: Tejashwi Yadav

    அதில் அவர் கூறியது: குழந்தை தொழிலாளர்களை கொண்டு, வாக்குப்பதிவு இயந்திரங்கள் பீகாரில் கொண்டு செல்லப்பட்டுள்ளன. பதிவு எண் இல்லாத வாகனங்களில் விதிமுறைகளுக்கு ஓட்டுப் பதிவு இயந்திரங்கள் தூக்கிச் செல்லப்பட்டுள்ளன.

    முசாபர்நகரிலுள்ள ஹோட்டலுக்கு தூக்கிச் செல்லப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள், நீதிபதியின் முன்னிலையில், கைப்பற்றப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    இவிஎம் மிஷின்கள் கடத்தப்படுவதாக பல்வேறு வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன. இதை எதிர்க்கட்சிகள் சுட்டிக் காட்டி தேர்தல் ஆணையத்தை குற்றம் சுமத்தின. இந்த நிலையில்தான், தேஜஸ்வி யாதவ் இவ்வாறு கூறியுள்ளார்.

    English summary
    In Bihar, EVM has also been Transportation by child labourers. The EVM was also reached at Muzaffarnagar's hotel, where it was recovered in the presence of a magistrate. Unlike the rules, voting machines were carried in unregistered vehicles, says Tejashwi Yadav.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X