பாட்னா அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பீகார் சட்டசபை தேர்தலில் புதிய வாக்காளர்கள் எண்ணிக்கை 50% குறைவு- தேர்தல் ஆணையம் ஷாக் தகவல்

Google Oneindia Tamil News

பாட்னா: பீகாரில் கடந்த சட்டசபை தேர்தலை ஒப்பிடுகையில் புதிய வாக்காளர்கள் எண்ணிக்கை 50% குறைவாக இருப்பதாக தேர்தல் ஆணையத்தின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

பீகார் சட்டசபைக்கு வரும் 28-ந் தேதி முதல் நவம்பர் 7-ந் தேதி வரை 3 கட்டங்களாக வாக்குப் பதிவு நடைபெறுகிறது. நவம்பர் 10-ந் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

ராமர்கோயிலை மிஞ்சும் வகையில்... பீகாரில் சீதா கோயில் கட்டவேண்டும்... சிராக் பாஸ்வான் விருப்பம்..!ராமர்கோயிலை மிஞ்சும் வகையில்... பீகாரில் சீதா கோயில் கட்டவேண்டும்... சிராக் பாஸ்வான் விருப்பம்..!

புதிய வாக்காளர்கள்

புதிய வாக்காளர்கள்

இந்த தேர்தலில் இளம் தலைமுறை புதிய வாக்காளர்கள் 50% குறைவாக இருப்பதாக தேர்தல் ஆணைய புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. 2015 சட்டசபை தேர்தலில் மொத்தம் 24.13 லட்சம் பேர் புதிய வாக்காளர்களாக பதிவு செய்தனர்.

கடந்த தேர்தலுடன் ஒப்பீடு

கடந்த தேர்தலுடன் ஒப்பீடு

ஆனால் தற்போதைய தேர்தலில் 11.17 லட்சம் பேர்தான் புதிய வாக்காளர்களாக பதிவு செய்திருக்கின்றனர். 30வயதுக்கும் குறைவான வாக்காளர்கள் எண்ணிக்கையும் குறைவாகவே பதிவு செய்யப்பட்டிருக்கிறது. 2015-ல் 2.04 கோடியாக இருந்த இந்த எண்ணிக்கை இப்போது 1.79 கோடியாக குறைந்துள்ளது.

லாக்டவுன் காரணம்

லாக்டவுன் காரணம்

இது தொடர்பாக தேர்தல் ஆணைய அதிகாரிகள் கூறுகையில், வாக்காளராக பதிவு செய்வதற்கு முன்னர் மக்களிடத்தில் இது தொடர்பாக தீவிர பிரசாரங்கள் கொண்டு சேர்க்கப்படும். ஆனால் இம்முறை லாக்டவுன் காலம் என்பதால் அத்தகைய பிரசாரங்கள் மேற்கொள்ளப்படவில்லை என்பதும் ஒரு காரணம் என்கின்றனர்.

கட்சிகள் அசால்ட்

கட்சிகள் அசால்ட்

இத்தனைக்கும் இந்த தேர்தலில் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உள்ளிட்டவை குறித்துதான் பிரசாரம் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இருந்தபோதும் புதிய வாக்காளர்களை பதிவு செய்வதில் கட்சிகள் அனைத்துமே கோட்டைவிட்டு வேடிக்கை பார்த்திருக்கின்றன.

English summary
According to the Election Commission Data First time voters decreased in Bihar Election.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X