• search
பாட்னா அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

'கங்கையின் துயரம்'.. வற்றாத ஜீவநதியில் சடலங்கள் மிதப்பதன் மர்மம் என்ன.. நேரடி அதிர்ச்சி ரிப்போர்ட்

Google Oneindia Tamil News

பாட்னா: கங்கை நதியில் ஏராளமான உடல்கள் சிதைந்த நிலையில் தொடர்ந்து மிதந்து வருகின்றன. இந்தியா டுடே டிவி செய்தியாளர் நான்கு மணி நேர படகு பயணத்தில் கண்ட காட்சிகளை அதிர்ச்சியுடன் விவரித்துள்ளார்.

இந்தியா டுடே டிவி செய்தியாளர் ஒரு படகில் காசிப்பூரிலிருந்து பீகாரின் பக்ஸர் வரை பயணம் செய்தார், இது ஆற்றைச் சுற்றியுள்ள மக்கள் தங்கள் அன்புக்குரியவர்களின் உடல்களை போடுகிறார்களா அல்லது எப்படி ஆற்றில் உடல்கள் மிதக்கின்றன என்பதைக் கண்டறியும் முயற்சியாக இப்பயணத்தை மேற்கொண்டார். அங்கு அவர் பார்த்த காட்சிகள் மிகவும் அதிர்ச்சிகரமானவை.. ஏராளமான உடல்கள் மிதந்துள்ளன. அவற்றை எல்லாம் யார் போட்டிருப்பார்கள் திகைத்துபோனார்.

செய்தியாளர்கள் கேமராக்கள் மூலம் உடல்களை படம் பிடிப்பதை பார்த்த உள்ளூர் நிர்வாகம் மூன்று சடலங்களை ஆற்றில் இருந்து வெளியேற்றியது., உடல்களை ஆற்றில் இருந்து வெளியே எடுத்துக்கொண்டிருந்த பணியாளர்கள் பிபிஇ கிட்களையோ அல்லது பாதுகாப்பு உடைகளையே அணியவில்லை என்று உள்ளூர் மக்கள் தெரிவித்தனர்.

கொரோனா.. தோண்ட தோண்ட பிணங்கள்.. அழுகிய நிலையில் நாய்கள் குதறிய உடல்கள்.. கங்கை நதியில் கொடூரம்! கொரோனா.. தோண்ட தோண்ட பிணங்கள்.. அழுகிய நிலையில் நாய்கள் குதறிய உடல்கள்.. கங்கை நதியில் கொடூரம்!

எங்கிருந்தோ வருகின்றன

எங்கிருந்தோ வருகின்றன

செய்தியாளரிடம் ஒரு நபர் கூறுகையில் "நீங்கள் உன்னிப்பாக கவனித்தால், நதியில் அனைத்து உடல்களும் இந்த திசையை நோக்கி பாய்கின்றன. இந்த உடல்கள் இங்குள்ள கிராமங்களைச் சேர்ந்தவர்களுக்கு சொந்தமானது என்பது உண்மையல்ல. இந்த உடல்கள் மற்ற இடங்களிலிருந்து மிதந்து இங்கு வருகின்றன என்றார்.

உள்ளூர்வாசிகள் குற்றச்சாட்டு

உள்ளூர்வாசிகள் குற்றச்சாட்டு

சரி, உடல்கள் எங்கிருந்து வருகின்றன என்று இந்தியா டுடே செய்தியாளர் கேட்டார். அதற்கு அந்த நபர், மக்கள் பிரயாகராஜிலிருந்து(அலகாபாத்) உடல்களைக் கொட்டுகிறார்கள் என்பதை நாங்கள் அறிந்து கொண்டோம், அதனால்தான் அவை ஆற்றில் மிதக்கின்றன. உடல்கள் காற்றின் திசையில் பின்தொடர்கின்றன என்றார்.

விழிப்புணர்வு குழுக்கள்

விழிப்புணர்வு குழுக்கள்

இதனிடையே காசிப்பூரில் ரோந்து குழுக்கள், உடல்களை ஆற்றில் போடக்கூடாது என்று விழிப்புணர்வு ஏற்படுத்தி கொண்டிருந்தன. அக்குழுவினர் இதுபற்றி கூறுகையில், மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் பணிகளை தொடர்ந்து செய்து வருகிறோம். யாருக்கும் எந்த பிரச்சனையும் ஏற்படக்கூடாது என்பதை உறுதிப்படுத்த நாங்கள் கிராமங்களில் மக்களிடம் பிரச்சாரம் செய்து வருகிறோம். கிராம மக்கள் ஏற்கனவே பல பிரச்சனையில் உள்ளனர். அவர்கள் இந்த புதிய பிரச்சனையில் இருந்து விடுவிக்க நாங்கள் விரும்புகிறோம் என்றார்கள்.

நாய்கள் தின்ற உடல்கள்

நாய்கள் தின்ற உடல்கள்

தொடர்ந்து இந்தியா டுடே டிவி செய்தியாளர் காசிப்பூரிலிருந்து நவுபத்பூர் வரை பயணித்தார். அவர் செல்லும் வழியில், கரைகளில் பார்த்து டிரெய்லராகத் தெரிந்தது. ஆற்றிற்குள் ஏராளமான உடல்கள் மிதந்து செல்வதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். ஏறக்குறைய ஒவ்வொரு வளைவிலும் பாறைகளில் சிக்கிய ஒரு உடல் இருந்திருக்கிறது. மோசமான விஷயம் என்னவென்றால், படகு ஆற்றின் ஒரு பக்கத்திலிருந்து மறுபுறம் பயணித்தபோது, நிலைமை மிகவும் கொடூரமாக இருந்தது. காகங்களும், நாய்களும் சடலங்களை தின்று கொண்டிருந்தன பயணத்தில் சில மணிநேரங்களிலேயே, ஆற்றில் உடல்களின் எண்ணிக்கை அவரால் எண்ணவே முடியவில்லை என்று விக்கித்துப்போனார்.

இப்போது அதிகமாக மிதக்கிறது

இப்போது அதிகமாக மிதக்கிறது

உடல்கள் அதிக அளவு மிதப்பது குறித்து உள்ளூர்வாசி ஒருவர் கூறுகையில். இரவைப் பயன்படுத்தி, தொலைதூர கிராமங்களைச் சேர்ந்தவர்கள் உடல்களை நேராக ஆற்றில் போடுகிறார்கள். கங்கை நதி ஹரித்வார் வழியாக பாய்ந்து பீகாருக்கு வருகிறது. பல பகுதிகளில் போடப்படும் உடல் ஆற்றின் வேகம் காரணமாக உடல்கள் காசிப்பூர் மாவட்டத்தில் வந்து கரை ஒதுங்குகின்றன. கடந்த 15 நாட்களில் உடல்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது என்றார்.

English summary
As dozens of decomposed bodies float in the Ganga, India Today TV goes on a four-hour boat ride from Ghazipur to Bihar's Buxar to bring to you a ground report of the river of sorrow.‘
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X