பாட்னா அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பிரதமர் பதவியே எங்களுக்கு வேண்டாம்.. ராகுல் "எதிர்ப்பாளர்களுக்கு" காங்கிரஸ் மறைமுக மெசேஜ்!

Google Oneindia Tamil News

Recommended Video

    எதிர்ப்பாளர்களுக்கு காங்கிரஸ் கூறிய மறைமுக மெசேஜ்!- வீடியோ

    பாட்னா: காங்கிரஸ் கட்சிக்கு பிரதமர் பதவி கொடுக்காவிட்டாலும் கவலையில்லை என்ற ஒரு கருத்தை அக்கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் வெளியிட்டதிலிருந்து அவர் இதை மம்தாவுக்கும் மாயாவதிக்கும் மறைமுகமாக கூறுவதாகவே பார்க்கப்படுகிறது.

    மே 23-ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகின்றன. இந்த தேர்தல் முடிவுகளை நாட்டு மக்கள் அனைவரும் உற்று நோக்கி வருகின்றனர். இந்த நிலையில் தேசிய கட்சிகளான பாஜக, காங்கிரஸ் ஆகிய கூட்டணிகள் ஆட்சியை பிடிக்க போராடுகின்றன.

    காங்கிரஸ் கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் ராகுல்காந்தி என ஸ்டாலின் ஏற்கெனவே அறிவித்துவிட்டார். இதற்கு மாயாவதி, மம்தா பானர்ஜி, சரத்பவார் ஆகியோர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சரத்பவாரை பொருத்தமட்டில் பிரதமர் பதவிக்கு தகுதியானவர்கள் மம்தாவும் மாயாவதியும் என கருதுகிறார்.

    மரங்களை வெட்ட கூடாது.. ஷீரடி சாய் அப்பவே அப்படி சொல்லி இருக்கார்...! மரங்களை வெட்ட கூடாது.. ஷீரடி சாய் அப்பவே அப்படி சொல்லி இருக்கார்...!

    குலாம் நபி ஆசாத்

    குலாம் நபி ஆசாத்

    பிரதமர் பதவி மீது ராகுலுக்கு நாட்டமில்லாத நிலையில் அவர்தான் அப்பதவியை ஏற்க வேண்டும் என ஸ்டாலின், சந்திரபாபு நாயுடு, அரவிந்த் கேஜரிவால், தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோர் விரும்புகின்றனர். இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.

    காங்கிரஸ்

    காங்கிரஸ்

    அப்போது அவர் கூறுகையில் எங்களது முக்கிய நோக்கமே பாஜக கூட்டணி அரசை வெளியேற்றுவதுதான். நாம் கடைசி கட்ட தேர்தலை சந்திக்கவுள்ளோம். நாடு முழுவதும் பிரசாரம் மேற்கொண்ட அனுபவத்தில் சொல்கிறேன், மத்தியில் பாஜக கூட்டணியோ, காங்கிரஸ் கூட்டணியோ ஆட்சி அமைக்க போவதில்லை.

    கவலையில்லை

    கவலையில்லை

    இரண்டாவது முறையாக நரேந்திர மோடி நிச்சயம் பிரதமராக மாட்டார். பாஜக அல்லாத ஒரு அரசே மத்தியில் அமைய வேண்டும். எனவே பிரதமர் பதவியை எங்களுக்கு கொடுக்காவிட்டாலும் நாங்கள் அதுகுறித்து கவலைப்பட மாட்டோம் என வெளிப்படையாக ஆசாத் தெரிவித்துள்ளார்.

    வரவேற்கத்தக்கது

    வரவேற்கத்தக்கது

    இது ராகுலை பிரதமராக ஏற்க மறுத்து ஓரணியில் திரள மறுக்கும் தலைவர்களுக்கு ஆசாத் மறைமுகமாக அறிவித்துள்ளதாகவே பார்க்கப்படுகிறது. மேலும் பிரதமர் யார் என்ற விவகாரத்தில் தேர்தல் முடிவுகளுக்கு முன்பு கட்சியினரிடையே கருத்தொற்றுமை ஏற்படுவது வரவேற்கத்தக்கது என்றும் ஆசாத் தெரிவித்துள்ளார்.

    English summary
    Congress Senior leader Ghulam Nabi Azad says that Congress has no issues that if it doesnt get top post.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X