பாட்னா அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மணமகன் திடீர் மரணம்.. திருமணத்தில் கலந்து கொண்ட 111 பேருக்கு கொரோனா.. பாட்னாவில் அதிர்ச்சி

Google Oneindia Tamil News

பாட்னா: பீகார் மாநிலத்தில் நடந்த ஒரு திருமணத்தில் மணமகன் திடீரென இறந்துவிட்டார். அந்த திருமணத்திற்கு வந்த 111 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் பல்வேறு தடைகள் விதிக்கப்பட்டுள்ளன. பொதுவாக கூட்டம் கூடுவதற்கு அனைத்து மாநிலங்களிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இறுதி ஊர்வலம், திருமணம் என்றால் 50 பேருக்கு மேல் கலந்து கொள்ளக் கூடாது என்ற விதி உள்ளது. இந்த நிலையில் பீகாரில் ஒரு திருமணத்தில் மணமகனுக்கு கொரோனா இருந்ததால் அந்த திருமணத்தில் கலந்து கொண்ட 111 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

கொரோனா போரில் களப்பணியாற்றும் மருத்துவர்களுக்கு வாழ்த்துக்கள் - தேசிய மருத்துவ தினம் கொரோனா போரில் களப்பணியாற்றும் மருத்துவர்களுக்கு வாழ்த்துக்கள் - தேசிய மருத்துவ தினம்

மணமகன்

மணமகன்

பாட்னாவில் உள்ள பாலிகஞ்ச் பகுதியில் ஒரு திருமணம் ஜூலை 15-ஆம் தேதி நடைபெற்றது. மணமகன் குர்கானில் உள்ள நிறுவனத்தில் பொறியாளராக பணியாற்றி வந்தார். இதனால் அந்த திருமணத்தில் 350 பேருக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். திருமணத்தின் போது அவரது உடல்நிலை மோசமடைந்தது.

சடங்குகள்

சடங்குகள்

உடனடியாக அவர் பாட்னாவில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு கொரோனாவின் அறிகுறியான வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. எனினும் அவரது உறவினர்கள் அவரை வயிற்றுப்போக்கிற்கான மருந்து எடுக்க சொல்லிவிட்டு திருமண சடங்குகளை நடத்த அழைத்து சென்றுவிட்டனர்.

இறுதிச் சடங்குகள்

இறுதிச் சடங்குகள்

இந்த நிலையில் கொரோனா சோதனையும் அவருக்கு எடுக்கப்படவில்லை. இதையடுத்து அவர் திருமணம் ஆன அடுத்த நாளே உயிரிழந்துவிட்டார். தகவலறிந்த மாவட்ட நிர்வாகத்தினர் சம்பந்தப்பட்டவர்கள் வீடுகளுக்கு சென்று விசாரணை நடத்துவதற்குள் இறந்த மணமகனுக்கு இறுதி சடங்குகள் நடத்தப்பட்டன.

சோதனை

சோதனை

இதனால் அவருக்கு கொரோனா சோதனை ஏதும் செய்யப்படவில்லை. இந்த நிலையில் இறந்த நபரின் உறவினர்களுக்கு கொரோனா அறிகுறி ஏற்பட்டது. இதையடுத்து அவர்களிடம் எடுக்கப்பட்ட மாதிரிகளில் வைரஸ் உறுதியானது. திருமணத்திற்கு சென்று கொரோனா உறுதியானவர்களின் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்த நிலையில் மாவட்ட நிர்வாகம் ஒரு சிறப்பு முகாமை அமைத்தது.

பரிசோதனை

பரிசோதனை

திருமணத்தில் கலந்து கொண்டவர்களுக்கு கொரோனா சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை 111 பேருக்கு கொரோனா உறுதியானது. இந்த திருமணத்தில் கலந்து கொண்டோரின் எண்ணிக்கை 350க்கு மேல் உள்ளது. இதனால் திருமணத்திற்கு சென்றோர் தாமாக முன் வந்து கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

English summary
Groom died in Bihar Wedding results 111 attendees positive. Its a very super spreader wedding.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X