பாட்னா அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பீகார்: கொரோனாவுக்கு இடையே நடக்கும் முதல் சட்டசபை தேர்தல்.. அருமையான ஏற்பாடு.. அச்சம் தேவையில்லை

Google Oneindia Tamil News

பாட்னா: இந்தியாவில் கொரோனா பரவலுக்கு பிறகு நடைபெறக்கூடிய முதல் சட்டசபை தேர்தல் என்ற பெருமையை பீகார் மாநில சட்டசபை தேர்தல் பெற்றுள்ளது.

ஆம்.. பெருமை என்று, நாம், குறிப்பிடுவதற்கு காரணம், அந்த அளவுக்கு வாக்குச்சாவடி மையங்களில் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து அசத்தியுள்ளது தேர்தல் ஆணையம்.

How Bihar election held safely amid corona spread? these are the precautionary actions

கொரோனா தடுப்பூசி கண்டுபிடிப்பது, அல்லது கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு முன்பாக, இனி ஏதாவது சட்டசபை தேர்தல்கள் நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டால், பீகார் மாநிலத்தில் தேர்தல் நடத்தியுள்ள விதம் ஒரு முன்மாதிரியாக எடுத்துக் கொள்ளப்படும் என்பது மட்டும் நிச்சயம்.

அப்படி என்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்துள்ளார்கள் என்று கேட்கிறீர்களா?

  • தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அனைத்து அதிகாரிகளும் முககவசம் மட்டும் இல்லாமல் கையில் கிளவுஸ் அணிந்துள்ளனர்.
  • ஒவ்வொரு வாக்குச்சாவடி மையங்களிலும், சானிடைசர் வைக்கப்பட்டுள்ளது. வாக்காளர்கள் உள்ளே செல்லும் போது அதில் தங்கள் கையை கழுவ வேண்டும்.
  • வாக்குப்பதிவு துவங்குவதற்கு முன்பாகவே வாக்குச்சாவடிகள் அனைத்திலும், கிருமி நாசினி தெளிக்கப்பட்டுள்ளது
  • வாக்களிக்க வரும் ஒவ்வொரு வாக்காளருக்கும் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்படுகிறது, இதற்கு வெப்பமானிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
  • காத்திருக்கும் வாக்காளர்கள் ஒவ்வொருவருக்கு இடையேயும் ஆறு அடிக்கு குறையாமல் இடைவெளி இருக்குமாறு பார்த்துக் கொள்ளப்பட்டு அதை குறிக்கும் வகையில் வட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு உள்ளே மட்டும்தான் வாக்காளர்கள் நிற்க வேண்டும்.
  • இத்தனை கெடுபிடிகளையும் தாண்டி கொரோனா பரவி விட முடியாது, இந்த விதிமுறைகளை மக்கள் ஒழுங்காக மதித்து நடந்தாலே போதும், எந்த ஒரு மாநிலத்திலும் எந்த ஒரு தேர்தலிலும் எளிதாக நடத்தி விடலாம் என்ற நம்பிக்கையை பீகார் மாநில தேர்தல் அளித்துள்ளது.
English summary
Precautionary actions have been taken in Bihar where election is underway for first phase of the assembly. These precaution actions will guide other states in the coming assembly elections.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X