பாட்னா அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இவருதான் பீகார் சுயேட்சை எம்எல்ஏ.. வீட்டில் என்னா வச்சிருந்தாரு தெரியுமா.. இப்ப திமிர் பேச்சு வேற

Google Oneindia Tamil News

பாட்னா: வீட்டில் ஏகே 47 துப்பாக்கி வைத்து இருந்த பீகார் சுயேட்சை எம்எல்ஏ அனந்த் குமார் சிங், போலீஸ் கைது பண்றதற்கு எல்லாம் தான் பயப்படவில்லை என்றும், 3 அல்லது 4 நாளில் சரண் அடைவேன் என்றும் கூறியுள்ளார்.

கடந்த ஆகஸ்ட் 17ம் தேதி கான்ட்ராக்டர் ஒருவர் கொல்லப்பட்ட வழக்கில் தொடர்பு இருப்பதாக போலீசார் சந்தேகித்தனர். இதன்படி பீகார் மோகாமா தொகுதி சுயேட்சை எம்எல்ஏ அனந்த் குமார் சிங்கின் வீட்டில் போலீசார் நடத்திய சோதனையில் மறைத்து வைத்திருந்த சட்டவிரோத பயங்கர ஆயுதமான ஏகே 47 துப்பாக்கியை கைப்பற்றினர்.

I am not scared of being arrested. I will surrender in next three-four days, Independent MLA Anant Kumar Singh,

இது தொடர்பாக அவரதுமனைவியிடம் நடத்திய விசாரணையில் சரியான தகவல் கிடைக்கவில்லை. இதையடுத்து சுயேட்சை எம்எல்ஏவை அழைத்து விசாரிக்க போலீசார் திட்டமிட்டனர். ஆனால் எம்எல்ஏ அனந்த் குமார் சிங் திடீரென தலைமறைவாகினார்.

இதையடுத்து அவர் மீது உபா சட்டத்தில் வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிரமாக தேடிவருகிறார். இந்த சூழலில் எம்எல்ஏ அனந்த் குமார் சிங் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

காஷ்மீரை போல் தமிழகமும் இரண்டாக பிரியலாம்.. சென்னை யூனியன் பிரதேசமாகலாம்.. சீமான் குற்றச்சாட்டு காஷ்மீரை போல் தமிழகமும் இரண்டாக பிரியலாம்.. சென்னை யூனியன் பிரதேசமாகலாம்.. சீமான் குற்றச்சாட்டு

அந்த வீடியோவில், "போலீசாரின் கைது நடவடிக்கைக்கு நான் பயப்படவில்லை. 3 அல்லது நான்கு நாளில் நானே சரண் அடைகிறேன். ஏகே47 துப்பாக்கியை போலீசார் எடுத்த வீட்டில் நான் 14 வருடங்களாக போனதே இல்லை.இந்த விஷயத்தில் முதல்வர் நிதீஷ்குமாரிடம் பேச உள்ளேன். ஆனால் அதற்கு தற்போது நேரம் இல்லை. நான் நீதிமன்றத்தில் விரைவில் சரண் அடைவேன் " இவ்வாறு கூறினார்.

English summary
"I am not scared of being arrested. I will surrender in next three-four days," Independent MLA Anant Kumar Singh, who is facing heat after recovery of prohibited weapons from his residence.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X