பாட்னா அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பீகார் அரசியலில் திருப்பம்.. ஜேடியுவில் இருந்து நீக்கப்பட்டார் பிரசாந்த் கிஷோர்.. நிதிஷ் அதிரடி!

ஐக்கிய ஜனதா தளத்திலிருந்து அக்கட்சியின் துணை தலைவரும், பிரபல அரசியல் ஆலோசகருமான பிரசாந்த் கிஷோர் நீக்கப்பட்டுள்ளார்.

Google Oneindia Tamil News

பாட்னா: ஐக்கிய ஜனதா தளத்திலிருந்து அக்கட்சியின் துணை தலைவரும், பிரபல அரசியல் ஆலோசகருமான பிரசாந்த் கிஷோர் நீக்கப்பட்டுள்ளார்.

சிஏஏ சட்டம் காரணமாக பல்வேறு கட்சிகளுக்குள் நாடு முழுக்க சிறு சிறு பிளவுகள் ஏற்பட்டுள்ளது. சிஏஏவை ஆதரித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு கட்சிகளில் சிறுசிறு பிரச்சனை ஏற்பட்டுள்ளது. பீகாரில் ஐக்கிய ஜனதா தளத்தில் பெரிய அளவில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

சிஏஏ சட்டத்தை ஜேடியூ துணை தலைவர் பிரசாந்த் கிஷோர் தொடக்கத்தில் இருந்து எதிர்த்து வந்தார். தனது கட்சியையும் மீறி அவர் மசோதாவை எதிர்த்து வந்தார். ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் பீகார் முதல்வர் நிதிஷ் குமார் இந்த மசோதாவிற்கு ஆதரவாக வாக்களிக்க உத்தரவு பிறப்பித்தார். இதனால் கட்சிக்குள் பெரிய அளவில் குழப்பம் ஏற்பட்டது.

ஹையா ஜாலி.. கொரோனா வைரஸ் எங்களை விட்டு போகுது.. கிஷோரை பங்கமாக கலாய்த்த ஜேடியு! ஹையா ஜாலி.. கொரோனா வைரஸ் எங்களை விட்டு போகுது.. கிஷோரை பங்கமாக கலாய்த்த ஜேடியு!

நேற்று என்ன பேட்டி

நேற்று என்ன பேட்டி

இந்த நிலையில் நேற்று திடீர் திருப்பமாக பிரசாந்த் கிஷோருக்கு எதிராக, நிதிஷ் குமார் நேரடியாக பேட்டி அளித்தார். அதில், பிரசாந்த் கிஷோர் கட்சியில் இருக்க நினைத்தால் இருக்கலாம். அவர் கட்சியை விட்டு போக நினைத்தால் போகலாம். அவர் இப்போதே பல கட்சிகளுக்கு அரசியல் ஆலோசனை வழங்கித்தான் வருகிறார். அவர் கட்சி கொள்கைகளை, விதிகளை பின்பற்றுவது இல்லை. அவர் கட்சியின் விதிகளை மீறி பலமுறை செயல்பட்டார். ஏற்கனவே கட்சியை விட்டு செல்ல முயன்றார்.

எங்களால் முடியாது

எங்களால் முடியாது

நாங்கள் அவரை கட்சியில் பிடித்து வைக்கவில்லை. அவரின் அவசியம் எங்களுக்கு இல்லை. அமித் ஷா சொல்லித்தான் அவரை கட்சியில் சேர்த்தோம். இல்லையென்றால் சேர்த்து இருக்கவே மாட்டோம், என்று நிதிஷ் குமார் குறிப்பிட்டார். இதற்கு பிரசாந்த் கிஷோரும் காட்டமாக பதிலடி கொடுத்தார். அதில், நிதிஷ் பேச வேண்டியதை பேசிவிட்டார். நான் அவருக்கு பதிலடி கொடுப்பேன். நேரடியாக அவரை சந்தித்து பதில் அளிப்பேன். என்னை ஏன் கட்சியில் சேர்த்தேன் என்று ஒரு விளக்கம் கொடுத்துள்ளார் அவர். அது முழுக்க முழு பொய்.

உங்கள் சாயம்

உங்கள் சாயம்

உங்களுக்கு சாயத்தை எனக்கு பூச முயற்சிக்க வேண்டாம். அமித் ஷா மூலம் கட்சிக்குள் வந்த ஒருவரை எதிர்க்கும் திராணி எல்லாம் உங்களுக்கு இல்லை. பொய் சொல்லாதீர்கள், என்று பிரசாந்த் கிஷோர் குறிப்பிட்டுள்ளார். இந்த சண்டையை தொடர்ந்து தற்போது ஐக்கிய ஜனதா தளத்திலிருந்து அக்கட்சியின் துணை தலைவர் பிரசாந்த் கிஷோர் நீக்கப்பட்டுள்ளார். கட்சியில் யாரும் அவருடன் தொடர்ப்பு வைத்துக் கொள்ள கூடாது, அவருடன் பேச கூடாது என்று தலைவர் நிதிஷ் குமார் உத்தரவிட்டுள்ளார்.

பவன் வெர்மா

பவன் வெர்மா

அதேபோல் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் முன்னாள், எம்.பி., மற்றும் கட்சியின் பொதுச்செயலாளர் பவன் வர்மா கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இவர் நிதிஷ் குமாருக்கு எதிராக கருத்து தெரிவித்தார். நிதிஷ் குமாருக்கு எழுதிய கடிதத்தை அவர் பொதுவில் வெளியிட்டுள்ளார். இதற்கு நிதிஷ் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து பேட்டி அளித்தார். தற்போது இதன் காரணமாக நிதிஷ் குமார், பவன் வெர்மாவையும் கட்சியில் இருந்து மொத்தமாக நீக்கியுள்ளார்.

English summary
JDU chief Nitish Kumar expells Prashant Kishore and Pawan Verma from the party after turmoil.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X