பாட்னா அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஹையா ஜாலி.. கொரோனா வைரஸ் எங்களை விட்டு போகுது.. கிஷோரை பங்கமாக கலாய்த்த ஜேடியு!

Google Oneindia Tamil News

பாட்னா: கொரோனா வைரஸ் எங்களை விட்டு செல்ல போகிறது. மகிழ்ச்சியாக இருக்கிறது என பிரசாந்த் கிஷோர் குறித்து ஜேடியு கட்சியின் மூத்த தலைவர் அஜய் அலோக் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில் பிரசாந்த் கிஷோரிடம் நம்பகத்தன்மை இல்லை. பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் நிதிஷ்குமார் ஆகியோரின் நம்பிக்கையை அவர் பெறவில்லை. பிரசாந்த் கிஷோர் ஆம் ஆத்மிக்கு பணியாற்றுகிறார். ராகுல் காந்தியுடன் பேசுகிறார். மம்தா பானர்ஜியை சந்திக்கிறார்.

பொய் சொல்லாதீங்க நிதிஷ்.. பிரசாந்த் கிஷோர் அதிரடி பதிலடி.. பூதாகரமாகும் ஜேடியு சண்டை.. உடைகிறதா?பொய் சொல்லாதீங்க நிதிஷ்.. பிரசாந்த் கிஷோர் அதிரடி பதிலடி.. பூதாகரமாகும் ஜேடியு சண்டை.. உடைகிறதா?

நாடாளுமன்றத்தில்

நாடாளுமன்றத்தில்

இப்படி பல கட்சிகளுடன் சகவாசம் இருந்தால் யார் அவரை நம்புவார்கள். அவர் எந்த கட்சிக்கு செல்ல விரும்புகிறாரோ அங்கு செல்லட்டும். அதுகுறித்து எங்களுக்கு கவலையில்லை. கொரோனா வைரஸ் எங்களை விட்டு செல்வதால் நாங்கள் சந்தோஷமடைகிறோம் என்றார். குடியுரிமை திருத்தச் சட்ட மசோதாவுக்கு ஆதரவாக நாடாளுமன்றத்தில் ஐக்கிய ஜனதா தளம் வாக்களித்தது.

சலசலப்பு

சலசலப்பு

ஆனால் அக்கட்சியின் துணைத் தலைவரும் அரசியல் ஆலோசகருமான பிரசாந்த் கிஷோர் கட்சியின் கருத்துக்கு மாறாக கருத்து தெரிவித்துள்ளார். இந்த நிலையில் பிரசாந்த் இது போல் பேசி வருவது பாஜக- ஐக்கிய ஜனதா தளம் கட்சி இடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அவரை மூத்த தலைவர்கள் எதிர்க்க தொடங்கிவிட்டனர்.

நாட்கள்

நாட்கள்

இதுகுறித்து பாட்னாவில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் ஒருவர் கடிதம் எழுதினார். அதற்கு நான் பதில் அளித்தேன். ஒருவர் ட்வீட் செய்தார். அவரும் ட்வீட் செய்யட்டும். யார் எவ்வளவு நாட்கள் தங்க விரும்புகிறார்களோ அத்தனை நாட்கள் தங்கிக் கொள்ளட்டும். எங்கள் கட்சி வித்தியாசமான கட்சி.

வேறு கட்சி

வேறு கட்சி

அவர் ஏற்கெனவே பல்வேறு கட்சிகளுக்கு அரசியல் ஆலோசகராக பணியாற்றியுள்ளார். ஆனால் நான் ஒன்றை மட்டும் தெளிவாக கூறி கொள்கிறேன். அவர் கட்சியில் இருப்பது என்றால் இருக்கட்டும். ஆனால் எங்கள் கட்சியின் அடிப்படை கட்டமைப்புகளை அவர் ஏற்றுக் கொள்ள வேண்டும். வேறு கட்சிக்கு செல்ல விரும்பினால் அவர் செல்லட்டும். நான் தடுக்கவில்லை.

தெரியவில்லை

தெரியவில்லை

அவர் கட்சியில் சேருவதற்கு யார் காரணம் தெரியுமா. அமித்ஷாதான். அவர்தான் கிஷோரை ஐக்கிய ஜனதா தளத்தில் சேர்த்து கொள்ளுமாறு தெரிவித்தார். அதை கொஞ்சமாவது அவர் நினைவில் கொள்ள வேண்டும். ஒரு வேளை அவர் கட்சியை விட்டு செல்ல விரும்புகிறாரோ என்னவோ தெரியவில்லை என நிதிஷ்குமார் தெரிவித்தார்.

English summary
JDU leader Ajay Alok calls Prashant Kishore a Corona virus as he is thinking of leaving the party.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X