பாட்னா அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

8வது முறையாக முதல்வர்.. ஒவ்வொரு தேர்தலிலும் ஒரு "ஜம்ப்.." ஆச்சரியமளிக்கும் நிதீஷ் குமாரின் அரசியல்!

Google Oneindia Tamil News

பாட்னா: பீகார் மாநிலத்தின் முதலமைச்சராக 8வது முறையாக பதவியேற்கும் ஐக்கிய ஜனதா தளம் தலைவர் நிதிஷ் குமாரின் ஆச்சரியமளிக்கும் அரசியல் கூட்டணி மாற்றம் குறித்து பார்க்கலாம்.

Recommended Video

    Bihar ஆட்சி மாற்றம் எதிர்க்கட்சிகளுக்கு கை கொடுக்குமா?

    பீகார் மாநிலத்தில் 2020ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பாஜக 77 இடங்களிலும், நிதீஷ் குமார் தலைமையிலான ஜேடியூ 45 இடங்களிலும் வெற்றிபெற்றன. அதிக தொகுதிகளில் வெற்றிபெற்றாலும், தேர்தலுக்கு முந்தைய ஒப்பந்தப்படி ஜேடியூ தலைவர் நிதிஷ் குமார் முதல்வராகப் பதவியேற்றார்.

    ஆனால் அவர் அமைச்சரவையில் பாஜகவைச் சேர்ந்த 16 அமைச்சர்கள் இடம்பெற்றனர். ஆனால் பாஜகவுடன் தொடர்ச்சியாக கருத்து முரண்பாடுகள் நிலவியது. இந்த நிலையில் அக்கட்சியுடனான கூட்டணியை முறித்துக் கொள்வதாக நிதிஷ்குமார் அறிவித்தார்.

    புயல்ங்க.. வங்க கடலில் உருவான சின்னம்.. சூறாவளியால் கடல் சீற்றம்.. பாம்பனில் புயல் கூண்டு ஏற்றம்புயல்ங்க.. வங்க கடலில் உருவான சின்னம்.. சூறாவளியால் கடல் சீற்றம்.. பாம்பனில் புயல் கூண்டு ஏற்றம்

    8வது முறையாக முதல்வர்

    8வது முறையாக முதல்வர்

    அதன்பின்னர் ஆளுநரை நேரில் சந்தித்து முதல்வர் பதவியை ராஜினாமா செய்வதாக நிதீஷ் குமார் கடிதம் அளித்தார். இதனைத்தொடர்ந்து பாஜக கூட்டணியை விட்டு வெளியேறிய நிதீஷ் குமார், ஆர்ஜேடி, காங்கிரஸ், இடதுசாரிகள் கூட்டணி ஆதரவு அளித்துள்ளது. இதனைத்தொடர்ந்து அடுத்த ஒன்றரை மணி நேரத்தில் மீண்டும் ஆட்சியமைக்க நிதீஷ் குமார் ஆளுநரிடம் உரிமை கோரினார். இதன்மூலம் 22 ஆண்டுகளில் 8வது முறையாக நிதீஷ் குமார் முதல்வராக பதவியேற்க உள்ளார்.

    முதல் முறை

    முதல் முறை

    முதல்முறையாக 2000ம் ஆண்டு பாஜகவுடன் கூட்டணி அமைத்த ஜேடியூ கட்சிக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை. அதேபோல் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இருந்தும் ஆளுநர் நிதீஷ் குமாரை ஆட்சியமைக்க அழைப்பு விடுத்தார். ஆனால் சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிப்பதற்கு முன்னதாகவே, நிதீஷ் குமார் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். அவரது பதவிக்காலம் 7 நாட்களில் முடிவுக்கு வந்தது.

    ஆட்சி நிறைவு

    ஆட்சி நிறைவு

    இதனைத்தொடர்ந்து 2005ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பாஜக - ஜேடியூ கூட்டணி 143 இடங்களில் வெற்றிபெற்றது. இதனைத்தொடர்ந்து இரண்டாவது முறையாக முதலமைச்சராக பொறுப்பேற்ற நிதீஷ் குமார், முதல்முறையாக 5 ஆண்டு கால ஆட்சியை நிறைவு செய்தார். அப்போது நிதீஷ் குமாருக்கு பாஜக கூட்டணி கட்சியாக இருந்தது.

    தொடர்ந்து ஆட்சி

    தொடர்ந்து ஆட்சி

    பின்னர் 2010ல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், நிதீஷ் குமார் தலைமையிலான ஜேடியூ தலைமையில் பாஜக தேர்தலை சந்தித்தது. அதில் ஜேடியூ 115 இடங்களிலும், பாஜக 91 இடங்களிலும் வெற்றிபெற்றன. இதனைத்தொடர்ந்து மூன்றாவது முறையாக நிதீஷ் குமார் முதலமைச்சராக பொறுப்பேற்றார். ஆனால் 2014ல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில், ஜேடியூ 2 தொகுதிகளில் மட்டும் வெற்றிபெற்றதையடுத்து, முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.

    மீண்டும் முதல்வர்

    மீண்டும் முதல்வர்

    தொடர்ந்து 9 மாத இடைவெளிக்குப் பின் 2015ம் ஆண்டு பிப்ரவரியில் மீண்டும் முதலமைச்சராக பொறுப்பேற்றார். அப்போது 2014ம் ஆண்டு எடுத்த முடிவை தவறு என்று குறிப்பிட்டார். அப்போது முதலமைச்சராக இருந்த ஜிதன் ராம் மஞ்சி பதவி விலக மறுத்த நிலையில், கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக கூறி கட்சியில் இருந்து ஜிதன் ராம் மஞ்சி நீக்கப்பட்டார். இறுதியாக நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்பே முதல்வர் பதவியில் இருந்து அவர் விலகினார்.

    கூட்டணி மாற்றம்

    கூட்டணி மாற்றம்

    2015ல் நடைபெற்றத் தேர்தலில் நிதீஷ் குமார் தலைமையிலான ஜேடியூ, ஆர்ஜேடி மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சியுடன் இணைந்து போட்டியிட்டது. அதில் மொத்தமுள்ள 243 இடங்களில் 178 இடங்களை கைப்பற்றி பாஜகவை வீழ்த்தியது. இதனைத்தொடர்ந்து நிதீஷ் குமார் ஐந்தாவது முறையாக முதலமைச்சராகப் பதவியேற்றார். அப்போது ஆர்ஜேடி கட்சியின் தேஜஸ்வி யாதவ் துணை முதலமைச்சராக பதவி வகித்தார்.

    பாஜகவுன் கூட்டணி

    பாஜகவுன் கூட்டணி

    ஆனால் 2017ம் ஆண்டு ஆர்ஜேடி தலைவர் லாலு பிரசாத் யாதவ் மற்றும் தேஜஸ்வி யாதவ் ஆகியோர் ஊழல் புகாரில் சிக்கியதால், ஆர்ஜேடி உடனான கூட்டணியை நிதீஷ் குமார் முறித்தார். இதனால் மீண்டும் பாஜகவுடன் கூட்டணி அமைத்து மீண்டும் 6வது முறையாக முதல்வர் பதவியை ஏற்றார்.

    மீண்டும் ஆர்ஜேடி

    மீண்டும் ஆர்ஜேடி

    பின்னர் 2020ம் ஆண்டு தேர்தலில் பாஜகவுடனான கூட்டணியை தொடர்ந்த ஜேடியூ கட்சி வெறும் 3 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்றது. அப்போது பாஜக 77 இடங்களில் வெற்றிபெற்றாலும், ஒப்பந்தப்படி நிதீஷ் குமாருக்கு பாஜக முதலமைச்சர் பதவியை கொடுத்தது. தற்போது மீண்டும் நிதீஷ் குமார் ஆர்ஜேடி உடன் கூட்டணி அமைத்து 8வது முறையாக முதல்வர் பொறுப்பை ஏற்கவுள்ளார்.

    English summary
    Janata Dal United leader Nitish Kumar will take oath as the Chief Minister of Bihar for the eighth time today, a day after ditching the Bharatiya Janata Party to form a grand alliance with the Rashtriya Janata Dal, Congress and smaller parties.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X