பாட்னா அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மின்னல் தாக்கி.. ஒரே நாளில் 26 பேர் பலி.. ஒரே வாரத்தில் 133 பேர் பலி.. பீகாரில் என்ன நடக்கிறது?

Google Oneindia Tamil News

பாட்னா: மின்னல் தாக்கி இன்று மட்டும் பீகாரில் 26 பேர் பலியான சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சமீப நாட்களாக வட இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் மக்கள் மின்னல் தாக்கி பலியாகும் சம்பவம் அடிக்கடி நடந்து வருகிறது. அதிலும் பீகார், உத்தரகாண்ட் மாநிலங்களில் அடிக்கடி மக்கள் மின்னல் தாக்கி பலியாகிறார்கள்.

Lightning kills 26 people in a single day in Bihar

அதன்படி கடந்த ஜூன் 26ம் தேதி பீகாரில் மின்னல் தாக்கி 96 பேர் ஒரே நாளில் பலியானார்கள். அதன்பின் கடந்த செவ்வாய்க்கிழமை ஒரே நாளில் 11 பேர் மின்னல் தாக்கி பலியானார்கள். இந்த நிலையில் மின்னல் தாக்கி இன்று மட்டும் பீகாரில் 26 பேர் பலியான சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அதன்படி பீகாரில் இருக்கும் பாட்னாவில் மட்டும் 6 பேர் இதனால் பலியாகி உள்ளனர். அதேபோல் கிழக்கு சாம்பிரான் பகுதியில் 4 பேர் பலியாகி உள்ளனர். சமஸ்திபூர் பகுதியில் 7 பேர் பலியாகி உள்ளனர். மூன்று பேர் கதிஹார் பகுதியில் பலியாகி உள்ளனர். இரண்டு பேர் சிவகார் மற்றும் மேத்தாப்பூர் பகுதியில் பலியாகி உள்ளனர்.

இதுவரை இல்லாத உச்சம்.. ஒரே நாளில் தமிழகத்தில் 4343 பேருக்கு கொரோனா.. 1 லட்சத்தை நெருங்குகிறது!இதுவரை இல்லாத உச்சம்.. ஒரே நாளில் தமிழகத்தில் 4343 பேருக்கு கொரோனா.. 1 லட்சத்தை நெருங்குகிறது!

பீகாரில் அடுத்த 24 மணி நேரத்திற்கு கடுமையான இடி, மின்னல், மழைக்கு வாய்ப்புள்ளது என்று வானிலை மையம் கூறியுள்ளது. ஏற்கனவே அங்கு மின்னல் காரணமாக 133 பேர் பலியாகி உள்ளதால் பெரிய பரபரப்பு ஏற்பட்டுள்ளது . பீகாரில் கொரோனா காரணமாக 78 பேர் மட்டுமே பலியாகி உள்ள நிலையில் மின்னல் காரணமாக இத்தனை பேர் பலியானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

English summary
Lightning kills 26 people in a single day in Bihar today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X