பாட்னா அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கொரோனா பாதிப்பு.. பீகார் சட்டசபை தேர்தலை தள்ளி வைக்க வேண்டும்.. லோக் ஜனசக்தி கோரிக்கை!

Google Oneindia Tamil News

பாட்னா: பீகாரில் சட்டசபை தேர்தலை தள்ளிவைக்கும் படி அங்கு ஆளும் கட்சி கூட்டணியில் இருக்கும் லோக் ஜனசக்தி கட்சி தேர்தல் ஆணையத்திற்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.

பீகாரில் தற்போது ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் சார்பாக முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் கூட்டணி ஆட்சியை நடத்தப்பட்டு வருகிறது. அங்கு வரும் அக்டோபர் மாதம் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. இதற்கான தயாரிப்புகள் செய்யப்பட்டு வருகிறது.

LJP asking to postpone Bihar Election citing Coronavirus as a reason

கொரோனாவை கருத்தில் கொண்டு தேர்தல் தயாரிப்புகள் நடக்கும் என்று ஏற்கனவே தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் பீகாரில் சட்டசபை தேர்தலை தள்ளிவைக்கும் படி அங்கு ஆளும் கட்சி கூட்டணியில் இருக்கும் லோக் ஜனசக்தி கட்சி தேர்தல் ஆணையத்திற்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது தொடர்பாக தேர்தல் ஆணையத்திற்கு அந்த கட்சி கடிதம் எழுதியுள்ளது. கொரோனா பாதிப்பு அதிகம் ஆகி வருகிறது. இப்போது தேர்தலை நடத்துவது சரியாக இருக்காது. இப்போது அரசின் கவனம் முழுக்க கொரோனாவை கட்டுப்படுத்துவதில் இருக்க வேண்டும்.

காஷ்மீர்: பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் மெகபூபா முப்தியின் காவல் மேலும் 3 மாதம் நீட்டிப்புகாஷ்மீர்: பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் மெகபூபா முப்தியின் காவல் மேலும் 3 மாதம் நீட்டிப்பு

அதைவிட்டுவிட்டு தேர்தலை நடத்த கூடாது. மக்கள் இதனால பலியாக வாய்ப்புள்ளது. கொரோனா வைரஸ் இனிதான் வேகம் எடுக்கும். அக்டோபர் - நவம்பர் மாதத்தில்தான் கொரோனா கேஸ்கள் அதிகரிக்கும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதனால் இப்போது தேர்தலை நடத்த கூடாது என்று லோக் ஜனசக்தி கட்சி கூறியுள்ளது. ஆனால் இதே என்டிஏ கூட்டணியில் இருக்கும் ஆளும் கட்சியான ஐக்கிய ஜனதா தளம் தேர்தலை நடத்த ஆதரவு அளித்துள்ளது. அதேபோல் பாஜகவும் பீகாரில் தேர்தலை நடத்த ஆதரவு அளித்துள்ளது.

Recommended Video

    கொரோனாவிலிருந்து போய்டுச்சேன்னு அசால்ட்டா இருக்காதீங்க.. இதை செய்ங்க.. டாக்டர் தீபா

    ஆனால் எதிர்க்கட்சியான ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி இதற்கு முன்பே தேர்தலை நடத்த கூடாது, தள்ளி வைக்க வேண்டும் என்று கூறியது குறிப்பிடத்தக்கது.

    English summary
    LJP asking to postpone Bihar Election citing Coronavirus as a reason.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X