பாட்னா அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கதவை இழுத்து சாத்தி கொண்ட ரவி.. கதறி துடித்த குடும்பம்.. சோக முடிவு.. எல்லாத்துக்கும் காரணம் வறுமை

வறுமையால் ஆட்டோ டிரைவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்

Google Oneindia Tamil News

பாட்னா: சனிக்கிழமை ராத்திரி கதவை சாத்திக் கொண்ட ரவி, ரொம்ப நேரமாகியும் திறக்கவே இல்லை.. சந்தேகப்பட்டு உள்ளே நுழைந்து பார்த்தபோதுதான் அதிர்ச்சியில் குடும்பத்தினர் அலறி துடித்தனர்.. லாக்டவுன் கொடூரமும், வறுமையும் ரவியையும் விட்டுவைக்கவில்லை!
5வது கட்டமாக ஊரடங்கு போடப்பட்டுள்ளது.. அதேசமயம் தளர்வுகளும் அமலாக்கப்பட்டுள்ளது.. என்றாலும் தொழிலாளர்களால் இயல்பு நிலைக்கு வர முடியவில்லை.. 3-ம் கட்ட பொதுமுடக்கத்தில் இருந்தே இந்த தளர்வுகள் வந்தாலும், பழைய மாதிரி இயல்பு வாழ்க்கையை நகர்த்த முடியவில்லை... சரியான வேலையும் கிடைக்கவில்லை.

அரசு அறிவிக்கும் அறிவிப்புகளும் இவர்களுக்கு போதுமானதாக இல்லை.. அதனால் தொடர்ந்து வறுமையில் சிக்கி உழலும் நிலை ஏற்பட்டுள்ளது.. அந்த வகையில், பாட்னாவில் ரவி என்ற தொழிலாளி வெகுவாகவே பாதிக்கப்பட்டார்.

 lockdown: patna auto driver committed suicide due to poverty

பாட்னாவைச் சேர்ந்த இவர் ஒரு ஆட்டோ டிரைவர்.. லாக்டவுன் போட்டதில் இருந்தே ஆட்டோ ஓட்டமுடியவில்லை.. அதனால் இந்த 3 மாசமாக அவரால் ஏற்கனவே வாங்கிய வங்கி தவணையை செலுத்த முடியவில்லை.. ஆனால் வேலை இல்லாவிட்டாலும் அந்த வங்கி தவணையை சரியாக செலுத்தி வந்தார் ரவி....ஒரு கட்டத்தில் அவரால் அதுவும் முடியாமல் போய்விட்டது.

இந்த சமயத்தில்தான் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.. இதை பற்றி அவரது அப்பா சொல்லும் போது, "சனிக்கிழமை ராத்திரி ரூமுக்குள் சென்று கதவை சாத்தி கொண்டான்.. ரொம்ப நேரம் ஆகியும் வெளியே வரவில்லை. அதனால் சந்தேகம் வந்து, கதவை உடைச்சிக்கிட்டு உள்ளே போனோம்.. அங்கே தூக்கில் தொங்கி கொண்டிருந்தான் என் மகன்.

கொரோனாவால் ஒரே நாளில் 44 பேர் மரணம்.. என்ன காரணத்தால் அதிகம் பேர் பலி. பரபர பின்னணிகொரோனாவால் ஒரே நாளில் 44 பேர் மரணம்.. என்ன காரணத்தால் அதிகம் பேர் பலி. பரபர பின்னணி

உடனே ஆஸ்பத்திரிக்கு தூக்கி சென்றோம், ஆனால் அவன் இறந்துவிட்டதாக டாக்டர்கள் சொல்லிவிட்டார்கள்.. அவனை நம்பிதான் இந்த குடும்பமே இருக்கு.. 3 குழந்தைகளையும் விட்டுட்டு இப்படி தற்கொலை செய்துக்கிட்டானே.. எப்படி இனி வாழ போகிறோம், எங்களுக்குன்னு இன்னும் ரேஷன் கார்டுகூட தரவில்லை" என்று கண்ணீருடன் தெரிவித்தார்.

ரவியின் இந்த தற்கொலை அந்த மாவட்டத்தையே நிலைகுலைய வைத்தது.. உடனே அரசு அதிகாரிகள் ரவியின் வீட்டிற்கு சென்று 25 கிலோ அரிசி, கோதுமையை நிவாரணமாக தந்துள்ளனர்.. ஆனால் ரவி?!

English summary
lockdown: patna auto driver committed suicide due to poverty
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X