பாட்னா அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

எங்களுக்கு எதுவும் வேண்டாம்.. வெளியே விட்டா போதும்.. கதறும் பீகார் தொழிலாளர்கள்.. பிகே போட்ட வீடியோ!

பீகார் தொழிலாளர்கள் கதறும் வீடியோவை பிரசாந்த் கிஷோர் பதிவிட்டுள்ளார்

Google Oneindia Tamil News

பாட்னா: "எங்களுக்கு ஒன்னுமே வேணாம்.. தயவுசெய்து வெளியே விட்டால் போதும்" என்று அடைத்து வைக்கப்பட்டிருக்கும் பீகார் தொழிலாளர்கள் கண்ணீருடன் கெஞ்சும் வீடியோவை பிரசாந்த் கிஷோர் தனது ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். அத்துடன், "இன்னொரு அதிர்ச்சி காட்சி.. தொழிலாளர்களின் இதயத்தை கலங்கடிக்கும் சமூக விலகல்... தனிமைப்படுத்தல் ஏற்பாடு" என்று பதிவிட்டுள்ள பிரசாந்த் கிஷோர், நிதிஷ் குமார் பதவி விலக வேண்டும் என்று ஹேஷ்டேக் போட்டு வலியுறுத்தியும் உள்ளார்!

Recommended Video

    எங்களுக்கு எதுவும் வேண்டாம்.. வெளியே விட்டா போதும்.. கதறும் பீகார் தொழிலாளர்கள்.. - வீடியோ

    ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டபோதே பிரசாந்த் கிஷோர் ட்விட்டரில் ஒரு பதிவு போட்டிருந்தார்.. "ஊரடங்கு என்பது வேண்டுமானால் சரியான முடிவாக இருக்கலாம்.. ஆனால் 21 நாட்கள் என்பது மிக நீண்டகாலம்..இந்த ஊரடங்கிற்கு பின்னால் ஒருவர் தகுந்த விலை கொடுக்க வேண்டிய சூழல் ஏற்படும்.

    கொரோனாவை எதிர்கொள்ள சரியான முறையில் தயாராகவில்லை... ஏழைகளை பாதுகாக்க போதுமான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை... நமக்கு முன்னால் மிக கடுமையான நாட்கள் உள்ளன" என்று பதிவிட்டார்.

    பிரசாந்த் கிஷோர்

    பிரசாந்த் கிஷோர்

    கொரோனாவைரஸ் இந்தியாவிற்குள் நுழைந்ததில் இருந்தே எதிர்க்கட்சிகள் மத்திய அரசை விமர்சித்து வருகின்றன.. அந்த வகையில்தான் அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோரும் விமர்சித்து வருகிறார்.. இந்நிலையில் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோ பதிவிட்டுள்ளார்.. அந்த வீடியோவில் பீகார் மாநிலத்தில் வெளிமாநில தொழிலாளர்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து முதல்வர் நிதிஷ்குமார் பதவி விலகவேண்டும் என்றும் காட்டமாக தெரிவித்துள்ளார்.

    நிதிஷ்குமார்

    நிதிஷ்குமார்

    "கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்கும் முயற்சியில் இன்னொரு அதிர்ச்சி தரக்கூடிய காட்சி.. நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து பல கஷ்டங்களை சந்தித்து இங்கு வந்து உழைக்கும் தொழிலாளர்களின் இதயத்தை கலங்கடிக்கும் சமூக விலகல், தனிமைப்படுத்தல் ஏற்பாடு" என்று பிகே பதிவிட்டுள்ளார்.. அத்துடன் #NitishMustQuit அதாவது நிதிஷ் விலக வேண்டும் என்ற ஹேஷ்டேக்கையும் இணைத்து பதிவிட்டுள்ளார்.

    சிவான் பகுதி

    சிவான் பகுதி

    பீகார் - உபி எல்லையில் உள்ள சிவான் பகுதியில் எடுக்கப்பட்ட வீடியோ இது என்கிறார்கள்.. இந்த பகுதி இது பாட்னாவிலிருந்து 130 கிமீ தொலைவில் இருக்கிறதாம்.. அந்த வீடியோவில் ஒருவர் அங்கிருக்கும் பத்திரிகையாளர்களிடம் "பஸ் வந்ததும் அனுப்பிடறோம்ன்னு காலையில இருந்து சொல்றாங்க.. ஆனால் பஸ் எதுவுமே வரல.. எங்களையும் வெளியே விட மாட்டேங்குறாங்க... எங்களுக்கு ஒன்னுமே வேண்டாம்.. எங்களை விட்டுடுங்க.. அதுவே போதும்" என குரல் எழுப்புவதும் பதிவாகி உள்ளது.

    விதிமுறை

    பிகே வெளியிட்ட இந்த வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தி விட்டது.. இதையடுத்து சிவான் பகுதி போலீஸ் அதிகாரி அபினவ் குமார் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு இதை பற்றி சொல்லும்போது, "அவர்களுக்கு ஸ்கிரீனிங் செய்ய வேண்டும்.. சாப்பாடு தரப்பட்டு, அதற்கு பின்னர்தான் அனுப்ப வேண்டும் என்ற விதிமுறை உள்ளது.. ஆனால் அவர்களோ அவசரப்படுகிறார்கள்" என்றார். பிகே போட்ட இந்த வீடியோ மிகுந்த கவனத்தை ஏற்படுத்தி வருகிறது.

    English summary
    lockdown: prashant kishor tweet about bihar migrant workers and their video
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X