பாட்னா அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மும்பையில் இருந்து சொந்த ஊர் திரும்பிய உ.பி. இடம்பெயர் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை

Google Oneindia Tamil News

பண்டா: மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் இருந்து உத்தரப்பிரதேசத்துக்கு சென்ற இடம்பெயர் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் பண்டா மாவட்டம் மியூசிவியான் கிராமத்தைச் சேர்ந்தவர் சுனில் (வயது 19). மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் தொழிற்சாலை ஒன்றில் பணிபுரிந்து வந்தார். நாடு முழுவதும் லாக்டவுன் அமல்படுத்தப்பட்டதால் சுனிலும் வேலை இழந்தார்.

Migrant worker commits suicide in UP

இதனால் மும்பையில் இருந்து சுனில் உத்தரப்பிரதேசத்துக்கு 7 நாட்களாக சைக்கிளில் தொடர்ந்து பயணம் மேற்கொண்டிருந்தார் என ஒருதரப்பு செய்திகள் கூறுகின்றன. இன்னொரு தரப்பினர் சிறப்பு ரயில் மூலம் சொந்த ஊர் திரும்பியிருந்தார் சுனில் என்றும் கூறுகின்றன.

மேலும் பிற மாநிலத்தில் இருந்து வந்தவர் என்பதால் 14 நாட்கள் வீட்டிலேயே சுனில் தனிமைப்படுத்தவும் செய்யப்பட்டார். இந்த நிலையில் சுனில் திடீரென வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அரசு சாராய ஆலையில்..10 லட்சம் லிட்டர் சாராயம் திருட்டு புகார்..சிபிஐ விசாரணைக்கு கிரண்பேடி பரிந்துரைஅரசு சாராய ஆலையில்..10 லட்சம் லிட்டர் சாராயம் திருட்டு புகார்..சிபிஐ விசாரணைக்கு கிரண்பேடி பரிந்துரை

இது தொடர்பாக சுனில் குடும்பத்தினர் கூறுகையில், சுனில் ஊர் திரும்பிய போது அவரது பாக்கெட்டில் ஒரு பைசா கூட இல்லை; சுனிலின் தந்தையும் குஜராத்தில் சிக்கி இருக்கிறார். அடுத்து என்ன செய்வது என தெரியாமல் சுனில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என்கின்றனர். இது தொடர்பாக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

English summary
A migrant worker who returned from Mumbai allegedly committed suicide in UP.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X