• search
பாட்னா அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In

ரொம்ப நாள் கழிச்சி வீட்டுக்கு போறீங்க.. காதல் பொங்கிட்டா.. இதை பிடிங்க, ஜாலியா இருங்க: அசத்தும் அரசு

|

பாட்னா: வெகு நாட்களுக்கு பிறகு சொந்த வீடு திரும்புகிறார்கள் புலம்பெயர் தொழிலாளர்கள். மனைவியை பார்த்ததும் காதல் பொங்கி, தேவையற்ற கர்ப்பம் உருவாகும் வாய்ப்பு இருப்பதை மனதில் வைத்து அசத்தல் முடிவை நடைமுறைப்படுத்தி உள்ளது பீகார் மாநில அரசு.

நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் பீகார் மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் புலம்பெயர்ந்து வந்து கட்டிட வேலை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பணியாற்றுகிறார்கள்.

ஆனால், ஊரடங்கு காரணமாக அவர்களுக்கு வேலை கிடைக்காத காரணத்தால், சொந்த மாநிலங்களுக்கு திரும்பத் தொடங்கினர். சிலர், நடந்தே பிஹார் சென்றனர். ரயில்கள் மூலமாக சென்றவர்களும் கணிசமாக உள்ளனர்.

"சுதந்திர இந்தியாவில் முதல் முறை.." மூன்றில் ஒரு சிறு, குறு நிறுவனம் மூடப்பட வாய்ப்பு- ஷாக் சர்வே

14 நாட்கள் தனிமை

14 நாட்கள் தனிமை

இருப்பினும் இவ்வாறு சொந்த மாநிலம் திரும்பியவர்கள், முதலில் நிறுவன தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். 14 நாட்கள் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு அதன் பிறகு சொந்த வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள். இதுவரை 8.77 லட்சம் தொழிலாளர்கள் தனிமைப்படுத்தப்பட்ட மையங்களிலிருந்து வீடுகளுக்கு சென்று உள்ளனர்.

புலம் பெயர் தொழிலாளர்கள்

புலம் பெயர் தொழிலாளர்கள்

அதே நேரம் 5.30 லட்சம் புலம்பெயர் தொழிலாளர்கள் இன்னமும் பிளாக் மற்றும் மாவட்ட மையங்களில் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கிறார்கள். இந்த நிலையில்தான், வீடுகளுக்குத் திரும்பிச் செல்வோருக்கு அரசு சார்பில் இலவச ஆணுறைகள் வழங்கப்பட்டு வருகின்றன. ஆப்பிள், ஆரஞ்சு உட்பட சத்தான உணவுகளை கொடுத்து அனுப்பினால் பரவாயில்லை. காண்டம் எதற்கு கொடுத்து அனுப்பப்படுகிறது என்ற கேள்வி உங்களில் பலருக்கு எழக்கூடும்.

காண்டம் கொடுக்கும் காரணம்

காண்டம் கொடுக்கும் காரணம்

இதுகுறித்து பீகார் மாநில சுகாதாரத் துறை அமைச்சக மூத்த அதிகாரி ஒருவர் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறும்போது, 14 நாட்களில் நிறுவன தனிமைப்படுத்தலுக்கு பிறகு, புலம்பெயர் தொழிலாளர்கள் வீடுகளுக்கு திரும்புகிறார்கள். எனவே மனைவியுடன் உறவு கொண்டு கர்ப்பம் தரிப்பதற்கான வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. தேவையற்ற கர்ப்பம் உருவாகி விடாமல் இருப்பதற்காக, இலவசமாகக் காண்டம் கொடுத்து அனுப்பி வைக்கப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.

மக்கள் தொகை

மக்கள் தொகை

மற்றொரு அதிகாரி இதுபற்றி கூறுகையில், சுகாதாரத்துறை அமைச்சகத்தின் பணிகளில் மக்கள்தொகை கட்டுப்பாடு என்பதும் ஒன்றுதான். அதனால்தான் காண்டம் கொடுக்கிறோம். இதற்கும் கொரோனா வைரஸ் பாதிப்புக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. தனிமைப்படுத்தப்பட்ட மையங்கள் இயங்கும் வரை இது போல இலவச ஆணுறைகள் கொடுக்கக்கூடிய பணிகள் தொடர்ந்து நடைபெறும் என்று தெரிவித்தார்.

வீடுகளுக்கே சப்ளை

வீடுகளுக்கே சப்ளை

ஜூன் 15ஆம் தேதிக்குள் தனிமைப்படுத்தப்பட்ட மையங்கள் அனைத்தும் பீஹார் மாநிலத்தில் மூடப்படும் பாதிப்பு உள்ளது. ஏனெனில் அதற்குள்ளாக பிற மாநிலங்களில் சிக்கித் தவிக்க கூடிய புலம்பெயர் தொழிலாளர்கள், பீகார் மாநிலத்திற்கு திரும்பி விடுவார்கள் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. இங்கிருந்து வீடுகளுக்கு திரும்ப கூடிய தொழிலாளர்களுக்கு இரண்டு பாக்கெட் காண்டம் இலவசமாக வழங்கப்படுகிறது. வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கக்கூடிய தொழிலாளர்களுக்கும் வீடுகளுக்கே சென்று ஆணுறைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

பொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்!

 
 
 
English summary
To prevent unwanted pregnancies, the Bihar government is distributing free condoms to migrant labourers going home after completing 14-day institutional quarantine and those in home quarantine, an official said on Tuesday.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more