பாட்னா அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பீகார் தேர்தல்.. கோதாவில் தேசியவாத காங்கிரஸ், சிவசேனா.. வெளியானது 'பிரச்சார பீரங்கிகளின்' லிஸ்ட்

Google Oneindia Tamil News

பாட்னா: பீகார் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்துள்ள சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ், மற்றும் அதன் கூட்டணி கட்சியான சிவசேனா கட்சிகள், தேர்தலுக்கான நட்சத்திர பிரச்சாரகர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளன.

243 உறுப்பினர்களைக் கொண்ட பீகார் சட்டசபைக்கான தேர்தல், அக்டோபர் 28, நவம்பர் 3 மற்றும் நவம்பர் 7 ஆகிய தேதிகளில் மூன்று கட்டங்களாக நடைபெறும், வாக்கு எண்ணிக்கை நவம்பர் 10 ஆம் தேதி நடைபெறும்.

NCP and Shiv Sena released a list of star campaigners for the Bihar elections

இந்த தேர்தலில், தேசியவாத காங்கிரசும், மகாராஷ்டிராவில் அதன் கூட்டணி கட்சியாக உள்ள சிவசேனாவும் போட்டியிடுகின்றன. இரு கட்சிகளும் தங்களது நட்சத்திர பிரச்சாரகர்களின் பட்டியலையும் தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பியுள்ளன.

இரு கட்சிகளின் பட்டியலின்படி, என்சிபி தலைவர் சரத் பவார், சுப்ரியா சுலே , சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, ஆதித்யா தாக்கரே, சஞ்சய் ரவுத், சுபாஷ் தேசாய், சஞ்சய் ரவுத், அனில் தேசாய், விநாயக் ரவுத், அரவிந்த் சாவந்த், பிரியங்கா சதுர்வேதி உள்ளிட்ட சுமார் 60 தலைவர்கள் பீகாரில் பிரச்சாரத்திற்கு செல்வார்கள்.

அப்பவே 16 அடி பாய்ந்த ராம்விலாஸ் பாஸ்வான்.. மகன் சிராக் 32 அடி பாய்ந்தே ஆகணும்.. சாதிப்பாரா? அப்பவே 16 அடி பாய்ந்த ராம்விலாஸ் பாஸ்வான்.. மகன் சிராக் 32 அடி பாய்ந்தே ஆகணும்.. சாதிப்பாரா?

இதில், மகாராஷ்டிரா சிறுபான்மை விவகார அமைச்சரும், என்சிபி தலைவருமான நவாப் மாலிக், கட்சி எம்.பி.க்கள் பிரபுல் படேல், சுனில் தட்கரே உள்ளிட்ட 40 பேர் என்சிபி கட்சியைச் சேர்ந்தவர்கள். சிவசேனா பீகாரில் சுமார் 50 இடங்களுக்கு போட்டியிடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

English summary
The Nationalist Congress Party (NCP) and its ally Shiv Sena, which has announced its intention to contest the Bihar Assembly elections, have released a list of star campaigners for the elections.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X