பாட்னா அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பழிவாங்கிய நிதீஷ்... டெல்லியில் வாங்கியதை.. பாட்னாவில் திருப்பி கொடுத்ததால் பாஜக அதிர்ச்சி

Google Oneindia Tamil News

Recommended Video

    Nitish kumar: டெல்லியில் வாங்கியதை, பாட்னாவில் திருப்பி கொடுத்த நிதீஷ்- வீடியோ

    பாட்னா: மத்திய அமைச்சரவை ஒரு இடம் பாஜக கொடுத்ததால் அதிருப்தி அடைந்த ஐக்கிய ஜனதா தளம், பீகார் அமைச்சரவை விரிவாக்கத்தில் பாஜகவுக்கு ஒரு இடம் மட்டுமே ஒதுக்கியது. இந்த செயல்களால் பாஜக மேலிடம் அதிர்ச்சி அடைந்துள்ளது.

    தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று மத்தியில் ஆட்சிக்கு வந்துள்ளது. கடந்த வியாழக்கிழமை பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அமைச்சரவை பொறுப்பேற்றது.

    அப்போது சிவசேனா, லோக் ஜனசக்தி, உள்பட பாஜகவின் பல கூட்டணி கட்சிகள் அமைச்சரவையில் இடம் பெற்றன. ஆனால் பீகாரில் பாஜகவின் நெருங்கிய கூட்டணி கட்சியான ஐக்கிய ஜனதா தளம் மட்டும் கூட்டணியில் பங்கேற்கவில்லை.

    பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன அய்யாக்கண்ணு.. கர்நாடக அரசை 'டிஸ்மிஸ்' செய்ய வலியுறுத்தல் பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன அய்யாக்கண்ணு.. கர்நாடக அரசை 'டிஸ்மிஸ்' செய்ய வலியுறுத்தல்

    அமைச்சரவையில் இடம்

    அமைச்சரவையில் இடம்

    நிதீஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் கட்சி மத்திய அமைச்சரவையில் இரண்டு இடம் கேட்டு இருந்தது. ஆனால் ஒரு இடம் மட்டுமே தருவோம் என பாஜக தலைமை தெரிவித்தது. இதனால் அதிருப்தி அடைந்த நிதீஷ்குமார் மத்திய அமைச்சரவையில் ஐக்கிய ஜனதா தளம் பங்கேற்காது என அறிவித்தார்.

    பாஜகவுக்கு ஒரு இடம்

    பாஜகவுக்கு ஒரு இடம்

    இதற்கிடையே பீகாரில் முதல்வர் நிதீஷ்குமார் தலைமையிலான அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டது. பீகாரில் 36 பேர் வரை அமைச்சரவையில் இடம் பெற முடியும் என்கிற நிலையில், ஐக்கிய ஜனதா தளத்தைச் சேர்ந்த 8 பேர் அமைச்சர்களாக பொறுப்பு ஏற்றனர். இதன்படி இப்போது அமைச்சர்களின் எண்ணிக்கை 33 ஆக உயர்ந்துள்ளது. மீதமுள்ள 3 இடங்களில் ஒரு இடத்தை பாஜகவுக்கும், ஒரு இடத்தை லோக் ஜனசக்தி கட்சிக்கும், ஒரு இடம் ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்கும் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளது,

    பழிவாங்கியதாக விமர்சனம்

    பழிவாங்கியதாக விமர்சனம்

    பாஜகவுக்கு ஒரு இடம் மட்டுமே பீகார் அமைச்சரவையில் ஒதுக்கப்பட்டுள்ளதை பீகார் மாநில எதிர்க்கட்சியான ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சி செய்தி தொடர்பாளர் சித்ரஞ்சன் காகன் விமர்சித்துள்ளார். இது தொடர்பாக கூறுகையில், ஒரு இடம் மட்டுமே ஒதுக்குவதாக கூறிய பாஜகவுக்கு ஒரு இடத்தை ஒதுக்கி நிதீஷ்குமார் பழிவாங்கிவிட்டதாக தெரிவித்துள்ளார்.

    யோசித்து முடிவு

    யோசித்து முடிவு

    நிதீஷ்குமாரின் இந்த அறிவிப்பால், அமைச்சரவையில இடம் பெறுவதா வேண்டாமா என்பதை பாஜக பின்னாளில் யோசித்து முடிவு எடுக்கும் என பீகார் பாஜக மூத்த தலைவரும் துணை முதல்வருமான சுஷில் குமார் மோடி தெரிவித்துள்ளார். கூட்டணி தர்மப்படி ஜக்கிய ஜனதா தளம் 20 இடங்களும், பாஜகவுக்கு 14 இடங்களும், லோக்ஜனசக்திக்கு ஒரு இடமும் ஒதுக்கி இருக்க வேண்டும் என பீகார் பாஜக தலைவர்களில் ஒருவரும் அமைச்சருமான நந்த் கிஷோர் யாதவ் தெரிவித்துள்ளார்.

    English summary
    bihat cm Nitish kumar offers single seat to BJP in Bihar cabinet after 1 seat offer to JD(U) in Modi cabinet
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X