பாட்னா அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஆக்ஸ்போர்டு கோவிஷீல்டு... தடுப்பு மருந்து... மனித பரிசோதனை... தொடக்கம்!!

Google Oneindia Tamil News

பாட்னா: பிரிட்டன் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் கண்டுபிடித்து இருக்கும் கோவிஷீல்டு தடுப்பு மருந்து மனித பரிசோதனை பாட்னாவில் இருக்கும் ஆர்எம்ஆர்ஐ மருத்துவமனையில் இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்டமாக பரிசோதிக்கப்படுகிறது.

Recommended Video

    Corona vaccine மக்களுக்கு இலவசமாக வழங்க திட்டம் - Australia PM அறிவிப்பு

    பிரிட்டனில் இருக்கும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், ஆஸ்ட்ரா ஜெனிகா நிறுவனத்துடன் இணைந்து கோவிஷீல்டு என்ற தடுப்பு மருந்தை கண்டுபிடித்துள்ளது. இந்த மருந்து தயாரிப்புக்கு இந்தியாவில் புனேவில் இருக்கும் சீரம் இன்ஸ்டிடியூட்டுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

    Oxford University Covishield vaccine in RMRI in Patna

    இதையடுத்து இந்த மருந்தை இந்தியாவில் மனிதர்களிடம் பரிசோதனை மேற்கொள்ள பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் 17 மருத்துவமனைகளில் இந்த மருந்தை மனித பரிசோதனை மேற்கொள்ள இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் அனுமதி அளித்துள்ளது. இந்தியாவில் இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்டமாக இந்த மருந்து பரிசோதனை மேற்கொள்ளப்பட இருக்கிறது.

    இந்தியாவில் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சிலுடன் இணைந்து சீரம் இன்ஸ்டிடியூட் மற்றும் ஆக்ஸ்போர்டு, ஆஸ்ட்ராஜெனிகா பரிசோதனை மேற்கொள்ளும். இந்திய பரிசோதனையில் மனிதர்களிடம் எந்தளவிற்கு எதிர்ப்பு கிடைக்கிறது, பாதுகாப்பு கிடைக்கிறது என்பது குறித்து சோதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

    கொரோனா வைரஸ்.. ஸ்பானிஷ் ஃப்ளூ போல மீண்டும் மீண்டும் வராது.. முதல்முறையாக நல்ல விஷயத்தை சொன்ன ஹு! கொரோனா வைரஸ்.. ஸ்பானிஷ் ஃப்ளூ போல மீண்டும் மீண்டும் வராது.. முதல்முறையாக நல்ல விஷயத்தை சொன்ன ஹு!

    இதுகுறித்து பாட்னா ஆர்எம்ஆர்ஐ டாக்டர் பிரதீப் தாஸ் கூறுகையில், ''ஆரோக்கியமான 160 பேர் பரிசோதனைக்கு எடுத்துக் கொள்ளப்படுவார்கள். ஆண்கள், பெண்கள் என்று 18 வயதுக்கு கீழ் இருப்பவர்கள் இந்த பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள். மனித பரிசோதனைக்கு எடுத்துக் கொள்ளப்படுவார்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட மாட்டார்கள். 0.5 என்ற அளவில் முதல் நாளில் டோஸ் ஊசி மூலம் செலுத்தப்படும். பின்னர் 29வது நாளிலும் இரண்டாவது டோஸ் அதே அளவில் செலுத்தப்படும். இவர்களுக்கு இந்த தடுப்பு மருந்து எந்தளவிற்கு வேலை செய்கிறது என்பது குறித்து 59 மற்றும் 180 நாட்களில் பரிசோதனை முடிவுகள் குறித்து ஆய்வு செய்யப்படும்.

    இந்த மருந்து டி செல்லை தூண்டி நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும். 14 நாட்களில் டி செல் தூண்டுதலும், 28வது நாளில் நோய் எதிர்ப்பு சக்தியையும் உருவாகும். இத்துடன் நச்சுத்தன்மையும் ஆய்வு செய்யப்படும். கொரோனாவுக்கு எதிராக ஏற்கனவே நோய் எதிர்ப்பு சக்தி கொண்டவர்கள் இந்த பரிசோதனைக்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள். இந்த பரிசோதனையை ஏழு மாதங்களுக்குள் முடித்துவிடுவோம். ஐசிஎம்ஆர் - டெல்லி - சீரம் இன்ஸ்டிடியூட் ஆகியவை இணைந்து இந்த பரிசோதனைக்கு ரூ. 55 கோடி கொடுக்கும்'' என்றார்.

    இந்த தடுப்பு மருந்து பரிசோதனை பிரிட்டன், அமெரிக்கா, பிரேசில், தென் ஆப்பிரிக்கா ஆகிய ஆண்டுகளில் மனித பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இந்த மனித பரிசோதனைக்கு மும்பையில் இருக்கும் கெம், சண்டிகர் முதுகலை மருத்துவக் கல்வி, ஆராய்ச்சி நிறுவனம், புனேவில் இருக்கும் ஜஹாங்கீர், டெல்லி எய்ம்ஸ், கோரக்பூர் ஐசிஎம்ஆர் மண்டல மருத்துவ ஆராய்ச்சி மையம், சேவாகிராம் மகாத்மா காந்தி மருத்துவ அறிவியல் நிறுவனம், நாக்பூர் அரசு மருத்துவக் கல்லூரி ஆகியவற்றில் இந்த மனித பரிசோதனை மேற்கொள்ளப்பட இருக்கிறது

    English summary
    Oxford University Covishield vaccine in RMRI in Patna
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X