பாட்னா அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பாட்னாவை இன்று புரட்டி போட்ட பேய் மழை.. வீடுகள்.. மருத்துவமனைகளுக்குள் புகுந்தது வெள்ளம்

Google Oneindia Tamil News

பாட்னா: பீகார் மாநில தலைநகர் பாட்னாவில் இன்று பெய்த பேய் மழை காரணமாக அங்கு வீடுகள், மருத்துவமனைகள், மற்றும் சாலைகள் வெள்ளத்தால் மூழ்கியுள்ளன. இதனால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

நம்ம சென்னையில் எப்போதாவது ஒரே நாளில் பேய் மழை கொட்டி அதாவது 100 மில்லி மீட்டர் அளவுக்கு மழை பெய்து மக்களைதிக்குமுக்காட வைக்கும் அப்படி தொடர்ந்து பேய் மழை பெய்தால் எந்த மாதிரியான பாதிப்பு வருமே அப்படி ஒரு பாதிப்பை பீகாரின் பாட்னா எதிர்கொண்டுள்ளது.

பீகாரில் கனமழை பெய்யும் என ரெட் அலார்ட் விடுத்திருந்தது. வானிலை ஆய்வு மையம். அந்தமையம் கணித்தபடியே நேற்று இரவு தொடங்கி இன்று வரை பேய் மழை பெய்தது. பல இடங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

ஆபாச வீடியோக்கள்.. 40 பெண்களை மிரட்டி சீரழித்த.. மாஜி விசிக பிரமுகர் சேலம் மோகன்ராஜ் அதிரடி கைதுஆபாச வீடியோக்கள்.. 40 பெண்களை மிரட்டி சீரழித்த.. மாஜி விசிக பிரமுகர் சேலம் மோகன்ராஜ் அதிரடி கைது

பாட்னாவில் கனமழை

பாட்னாவில் கனமழை

இந்த பலத்த மழை காரணமாக பாட்னா நகரில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. சாலைகள் தேங்கி நிற்கும் வெள்ளம் காரணமாக குளத்தில் நீந்தி செல்வதை போல் வாகன ஓட்டிகள் பெரும சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.

வெள்ளத்தில் சிக்கியது

பாட்னா நகரின் பல்வேறு பகுதிகளில் தண்ணீர் வெளியேற வழியில்லாமல் வீடுகளுக்கு உள்ளும், மருத்துவமனைகளுக்குள்ளும் புகுந்துள்ளது. நாளந்தா மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தண்ணீர் புகுந்துள்ளதால் நோயாளிகள் அவதி அடைந்துள்ளனர்.

பாட்னா நகரம் காலி

இதில் கொடுமை என்னவென்றால் நகரில் உள்ள கால்வாய் கட்டமைப்பை கட்டுவதற்கு அந்த அரசு பெரும் முதலீடு செய்திருக்கிறது. அப்படி இருந்தும் ஒரே நாள் இரவு மழைக்கே மொத்த பாட்னா நகரமும் வெள்ளக்காடாக மாறி உள்ளது.

மழை தண்ணீர் செல்லும் வடிகால்கள், சாக்கடை வடிகால்கள் முறையாக இல்லாததால் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. அங்குள்ள சூழ்நிலைகள் மோசமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாட்னாவில் சாலைகள் மற்றும் பாலங்கள் தண்ணீரில் மூழ்கிகிடப்பபதால் சாலையில் வாகனங்கள் மட்டுமல்ல நடந்து செல்பவர்களும் மிகவும் தவிப்புக்குள்ளாகி உள்ளனர்.

மீட்பு பணி தீவிரம்

மீட்பு பணி தீவிரம்

ஏற்கனவே கனமழையால் வெள்ளத்தால் பாட்னா தவித்து வரும் நிலையில் அடுத்த இரண்டு நாள்களுக்கும் பாட்னாவில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கைவிடுத்துள்ளது.பேரிடர் மீட்பு படையினர் மழை பாதிப்புக்குள்ளான பகுதிகளில் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

English summary
Waterlogged streets, flooded hospitals, homes after heavy rain in patna
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X