மக்கள் ஆசியுடன் பீகாரில் ஜனநாயகம் மீண்டும் வென்றது - மோடி, அமித்ஷா, ஜே.பி நட்டா நன்றி
பாட்னா: பீகார் சட்டசபைத் தேர்தலில் என்டிஏ கூட்டணிக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்த வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசிய தலைவர் ஜே பி நட்டா ஆகியோர் தங்களின் ட்விட்டர் பக்கத்தில் நன்றி கூறியுள்ளனர். மக்கள் ஆசியுடன் பீகாரில் ஜனநாயகம் மீண்டும் வென்றது. அனைத்து என்.டி.ஏ தொண்டர்களுக்கும் அவர்களுடன் பணியாற்றிய உறுதியும் அர்ப்பணிப்பும் பிரமிக்க வைக்கிறது என்று பதிவிட்டுள்ளார் பிரதமர் மோடி.
பீகார் மாநில சட்டசபைத் தேர்தல் மூன்று கட்டங்களாக நடைபெற்றது. பாஜக, ஐக்கிய ஜனதா தளம் கூட்டணியும், ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் இணைந்து மகா கூட்டணியாகவும் போட்டியிட்டன.

காலையில் இருந்து வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில் நொடிக்கு நொடி பரபரப்பு ஏற்பட்டது. அரியணையை பிடிப்பதில் இரு கூட்டணி கட்சிகளிடையேயும் கடும் பரபரப்பு ஏற்பட்டது.
பீகார் தேர்தல் ரிசல்ட் 2020: வெற்றி முகத்தில் பாஜக கூட்டணி
பீகாரில் மொத்தமுள்ள 243 தொகுதிகளில் 122 தொகுதிகளில் வெற்றி பெறும் கட்சியை ஆட்சியைப் பிடிக்க முடியும். தற்போது, பாஜக கூட்டணி வெற்றி முகத்தில் இருப்பதால் பாஜக தொண்டர்கள் உற்சாகமடைந்துள்ளனர். வெற்றிக்கு பாடுபட்ட என்டிஏ கூட்டணி தொண்டர்களுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மக்கள் ஆசியுடன் பீகாரில் ஜனநாயகம் மீண்டும் வென்றது. அனைத்து என்.டி.ஏ தொண்டர்களுக்கும் அவர்களுடன் பணியாற்றிய உறுதியும் அர்ப்பணிப்பும் பிரமிக்க வைக்கிறது. நான் தொண்டர்களை வாழ்த்துகிறேன் மற்றும் பீகார் மக்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஜனநாயகத்தின் முதல் பாடத்தை பீகார் உலகிற்கு கற்பித்துள்ளது. ஜனநாயகம் எவ்வாறு பலப்படுத்தப்படுகிறது என்பதை இன்று பீகார் மீண்டும் உலகிற்கு தெரிவித்துள்ளது. பீகாரின் ஏழை, தாழ்த்தப்பட்ட மற்றும் பெண்களின் வாக்களித்தனர். இன்று அபிவிருத்திக்கான அவர்களின் தீர்க்கமான முடிவை வழங்கியுள்ளது.

இன்றைய ஆணைக்கு பீகார் மக்களுக்கு நான் முழு மனதுடன் வாழ்த்துகிறேன், நன்றி கூறுகிறேன். கொரோனா காலத்திலும், ஒருபுறம் தங்களை மனிதநேய சேவைக்குத் தள்ளிய கோடிக்கணக்கான ஆர்வலர்களுக்கு எனது மனமார்ந்த நன்றி, மறுபுறம் மத்திய மற்றும் மாநில அரசின் சாதனைகளும் மக்களைச் சென்றடைந்தன என்று பதிவிட்டுள்ளார் ஜெ.பி நட்டா.

அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான அமித் ஷா தனது ட்விட்டர் பக்கத்தில் பீகார் தேர்தலில் 2020 வென்றதற்காக தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். வெற்று அறிவிப்பும்-பொய் வாக்குறுதிகளும் அளித்த வாய்சவடால் வீரரை புறந்தள்ளிய பீகார் மக்களுக்கு நன்றி. பீகார் மக்கள் வளர்ச்சியை நம்பி வாக்களித்துள்ளனர் என்று பதிவிட்டுள்ளார். இது ஒவ்வொரு பீகாரியின் நம்பிக்கைக்கு கிடைத்த வெற்றி என்று பதிவிட்டுள்ளார்.