பாட்னா அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கொரோனாவில் மீண்டவர்களுக்கு...நுரையீரல் பாதிப்பு...அதிர்ச்சி தகவல்!!

Google Oneindia Tamil News

பாட்னா: பீகாரில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியவர்களுக்கு நுரையீரல் திசுக்கள் பாதிப்படைந்து, மூச்சு விடுதலில் சிரமம் ஏற்பட்டு, தொடர் இருமல் ஏற்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

பீகார் தலைநகர் பாட்னாவில் இருக்கும் எய்ம்ஸ்- பி மருத்துவமனையின் மருத்துவர் சஞ்சீவ் குமார் கூறுகையில், ''மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியவர்களில் 100 பேர் மீண்டும் மருத்துவமனைக்கு வந்தனர். இவர்களுக்கு தொடர் இருமல் இருப்பதாகவும், மூச்சுவிடுதலில் சிரமம் இருப்பதாகாவும் தெரிவித்தனர். இவர்களுக்கு கொரோனாவுக்கு பிந்தைய நுரையீரல் பாதிப்பாக ''லங் ஃபைப்ரோசிஸ்'' ஏற்பட்டுள்ளது.

Post Coronavirus: Cured patients will develop lung Fibrosis says doctors

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நுரையீரலின் திசுக்கள் பாதிக்கப்படுகிறது. இதனால், நுரையீரலில் வீக்கம் ஏற்படுகிறது. இது கொரோனா நோயில் இருந்து குணமடைந்து மீள்பவர்களுக்கு இருக்கும் அடுத்தகட்ட உடல் பாதிப்பாக பார்க்கப்படுகிறது. இந்த பாதிப்பினால், நுரையீரல் திசுக்கள் கடினமாகி, மூச்சுவிடுதலில் சிரமத்தை ஏற்படுத்துகிறது. சில சமயம் ஆக்சிஜனும் தேவைப்படுகிறது. இதை மருந்துகளால் குணப்படுத்தலாம். ஆனால், ஏற்கனவே நுரையீரல் பாதிப்பு இருந்தவர்களுக்கு இந்த சிக்கல் எழும்போது சிகிச்சையில் தாமதம் ஏற்படும்'' என்று தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்றில் இருந்து மீண்டவர்களில் 25 முதல் 30% பேருக்கு நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பொதுவாக இதுபோன்ற உடல் உபாதைகளை தவிர்க்க வேண்டுமானால், கொரோனா தொற்று நம்மை அண்டாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

பாட்னா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் மருத்துவர் சமரேந்திர ஜா கூறுகையில், ''கொரோனா தொற்று ஏற்பட்டபோது, மூச்சுவிடுதலில் சிரமம் ஏற்பட்டு இருந்தால், அவர்களுக்கு இதுமாதிரியான தொந்தரவுகள் ஏற்படலாம். இது பாட்னாவில் மட்டுமில்லை. நாடு முழுவதும் இந்த பாதிப்பு இருப்பதாக எனது நண்பர்களிடம் இருந்து தகவல்கள் கிடைக்கின்றன. தற்போது குறைந்த எண்ணிக்கையில் இந்த பாதிப்பால் மருத்துவமனைக்கு வந்து கொண்டுள்ளனர். இது மேலும் அதிகரிக்கலாம்.

இந்தியாவில் 24 மணிநேரத்தில் 90,802 பேருக்கு கொரோனா- 42 லட்சத்தை கடந்த பாதிப்பு இந்தியாவில் 24 மணிநேரத்தில் 90,802 பேருக்கு கொரோனா- 42 லட்சத்தை கடந்த பாதிப்பு

இதுபோன்ற பாதிப்புகள் ஏற்படும்போது, அதில் இருந்து நிவாரணம் பெறுவதற்கு ஆறு மாதங்கள் வரை ஆகலாம். இந்த பாதிப்புக்கு நுரையீரல் புற்று நோய்க்கு கொடுக்கப்படும், மருந்தையே கொடுத்து வருகிறோம்'' என்று தெரிவித்துள்ளார்.

Recommended Video

    கொரோனா நோயாளிகளே.. நுரையீரலில் உள்ள கிருமிகளை சுத்தம் செய்ய பிராண முத்திரை

    கொரோனா தொற்று அறிகுறி அறிந்தவுடன், விட்டமின் சி, ஜிங்க் சத்து மருந்துகளை துவக்கத்தில் இருந்தே எடுத்துக் கொள்ள வேண்டும். கொரோனா நோயில் இருந்து குணமடைந்த பின்னர் ஏற்படும் தொந்தரவுகளில் இருந்து இது நம்மை பாதுகாக்கும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

    English summary
    Post Coronavirus: Cured patients will develop lung Fibrosis says doctors
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X