பாட்னா அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தேசிய குடிமக்கள் பதிவேடு நடைமுறையும் பணமதிப்பிழப்பு போல பாதிப்பை ஏற்படுத்தும்: பிரசாந்த் கிஷோர்

Google Oneindia Tamil News

Recommended Video

    குடியுரிமை சட்ட திருத்த மசோதாவின் குறைகள்... எதிர்ப்பிற்கான காரணம்

    பாட்னா: தேசிய குடிமக்கள் பதிவேடு நடைமுறையும் பணமதிப்பிழப்பு போல கடும் பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று ஐக்கிய ஜனதா தளத்தின் (ஜேடியூ) துணைத் தலைவரும் தேர்தல் வியூக வல்லுநருமான பிரசாந்த் கிஷோர் எச்சரித்துள்ளார்.

    குடியுரிமை மசோதாவை நாடாளுமன்றத்தில் ஜேடியூ ஆதரித்து வாக்களித்ததை மிகக் கடுமையாக எதிர்த்தவர் பிரசாந்த் கிஷோர். அவருக்கு ஆதரவாக ஜேடியூ மூத்த தலைவர்களும் கருத்து தெரிவித்தனர்.

    Prashant Kishor slams Centre NRC

    இந்நிலையில் ஜேடியூவின் தேசிய துணைத் தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாகவும் பிரசாந்த் கிஷோர் தெரிவித்தார். ஆனால் அவரது ராஜினாமாவை கட்சி மேலிடம் ஏற்கவில்லை.

    இதனிடையே பீகார் முதல்வர் நிதிஷ்குமாரை நேரில் சந்தித்து தமது நிலையை பிரசாந்த் கிஷோர் விளக்கியிருந்தார். இந்நிலையில் இன்று மத்திய அரசை விமர்சித்து மீண்டும் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் பிரசாந்த் கிஷோர்.

    குடியுரிமை சட்டத்துக்கு எதிர்ப்பு.. சென்னையிலும் போராட்டத்தை தொடங்கிய அஸ்ஸாமியர்கள் குடியுரிமை சட்டத்துக்கு எதிர்ப்பு.. சென்னையிலும் போராட்டத்தை தொடங்கிய அஸ்ஸாமியர்கள்

    அதில், தேசிய குடிமக்கள் பதிவேடு நடைமுறையை நாடு முழுவதும் அமல்படுத்தப்போவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது ஏழைகளும் அப்பாவி பொதுமக்களும் எத்தகைய பாதிப்புக்குள்ளானார்களோ அதேபோல் பாதிப்பை தேசிய குடிமக்கள் பதிவேடு நடைமுறை ஏற்படுத்தும் என எச்சரித்துள்ளார்.

    English summary
    JDU National Vice President Prashant Kishor has slammed Centre NRC for Nationwide.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X