பாட்னா அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

என் இதயம் எரிகிறது.. ஒருவரையும் விடக்கூடாது.. புல்வாமா தாக்குதல் பற்றி மோடி அனல் பேச்சு!

புல்வாமா தாக்குதலால் தன்னுடைய இதயம் எரிந்து கொண்டு இருக்கிறது என்று பிரதமர் மோடி பீகாரில் பேசி இருக்கிறார்.

Google Oneindia Tamil News

பாட்னா: புல்வாமா தாக்குதலால் தன்னுடைய இதயம் எரிந்து கொண்டு இருக்கிறது என்று பிரதமர் மோடி பீகாரில் பேசி இருக்கிறார்.

கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய தீவிரவாத தாக்குதல் காஷ்மீரின் புல்வாமாவில் நடந்தேறி உள்ளது. இந்த தீவிரவாத தற்கொலைப்படை தாக்குதலில் மொத்தம் 40 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டு இருக்கிறார்கள்.

இந்த நிலையில் பிரதமர் மோடி இந்த சம்பவம் குறித்து பீகாரில் நடந்த கட்சி விழா ஒன்றில் பேசி உள்ளார்.

அஞ்சலி செலுத்தி தொடங்கினார்

அஞ்சலி செலுத்தி தொடங்கினார்

இந்த தாக்குதலை அடுத்து இந்திய ராணுவத்திற்கு முழு சுதந்திரம் அளிப்பதாக பிரதமர் மோடி குறிப்பிட்டு உள்ளார். இதையடுத்து பீகாரில் நடந்த கூட்டத்தில் பிரதமர் மோடி 40 வீரர்களுக்கும் அஞ்சலி செலுத்தினார். அதன்பின் கண்ணீர் விட்ட பிரதமர் மோடி, மக்கள் முன்னிலையில் பேசினார்.

மோடி பேச்சு

மோடி பேச்சு

பிரதமர் மோடி தனது பேச்சில், இந்த மோசமான தாக்குதலில் பலியான வீரர்களின் குடும்பத்திற்கு என்னுடைய இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். பாட்னாவை சேர்ந்த சிஆர்பிஎப் வீரர்கள் சஞ்சய் குமார் சின்கா, ரத்தன் குமார் தாக்குர் ஆகியோருக்கும் என்னுடைய இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அவர்கள் இந்த நாட்டிற்காக மிகப்பெரிய காரியத்தை செய்துள்ளனர்.

அதேதான்

அதேதான்

இங்கே நிறைய பேர் கூடி உள்ளீர்கள், நீங்கள் எல்லோரும் இப்போது எப்படி உணர்கிறீர்கள் என்று தெரியும். அப்படித்தான் நானும் உணர்கிறேன். உங்கள் இதயத்தில் ஒரு நெருப்பு எரிகிறது என்று எனக்கு தெரியும். அதே நெருப்புதான் என்னுடைய இதயத்திலும் எரிந்து கொண்டு இருக்கிறது.

நடக்கும்

நடக்கும்

இந்த தாக்குதலுக்கு காரணமானவர்களை விடக்கூடாது. எல்லோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். துப்பாக்கி தொடங்கி தொட்டா வரை.. வெடிகுண்டு வரை, இந்த காரியத்திற்கு உதவிய யாரையும் விட மாட்டோம். நம் வீரர்களை கொல்ல உதவிய யாரையும் விடக்கூடாது, என்று பிரதமர் மோடி தனது பேச்சில் குறிப்பிட்டு இருக்கிறார்.

English summary
Pulwama attack: I won't spare anyone who helped for this attack says PM Modi in Bihar.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X