பாட்னா அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பீகார்:பலாத்கார வழக்கில் சிக்கிய 2 ஆர்ஜேடி சிட்டிங் எம்எல்ஏக்களுக்கு நோ சீட்..மனைவிகளுக்கு வாய்ப்பு

Google Oneindia Tamil News

பாட்னா: பீகார் சட்டசபை தேர்தலில் பலாத்கார வழக்கில் சிக்கிய ஆர்ஜேடி கட்சியின் 2 சிட்டிங் எம்.எல்.ஏக்களுக்கு சீட் மறுக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த சிட்டிங் எம்.எல்.ஏக்களின் மனைவிகளுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுத்துள்ளது ஆர்ஜேடி.

பீகார் சட்டசபை தேர்தலுக்கான கூட்டணிகள், தொகுதிப் பங்கீடுகள் என களம் அனல் பறந்து கொண்டிருக்கிறது. ஆர்ஜேடி- காங்கிரஸ்- இடதுசாரிகள் ஒரு அணியாகவும் ஜேடியூ-பாஜக இன்னொரு அணியாகவும் களத்தில் நிற்கின்றன. ராம்விலாஸ் பாஸ்வானின் எல்ஜேபி பாஜக கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது.

RJD denies ticket to rape accused MLAs

இந்த நிலையில் ஆர்ஜேடி கட்சி 144 தொகுதிகளில் போட்டியிடுகிறது. முதல் கட்ட வாக்குப் பதிவு நடைபெறும் தொகுதிகளில் வேட்பாளர்களை அறிவித்திருக்கிறது ஆர்ஜேடி. இந்த கட்சியின் 2 சிட்டிங் எம்.எல்.ஏக்களான ராஜ்பல்லப் யாதவ், அருண் யாதவ் ஆகியோருக்கு சீட் இம்முறை கொடுக்கப்படவில்லை.

இவர்களில் ராஜ்பல்லப் யாதவ், சிறுமியை பலாத்காரம் செய்த வழக்கில் சிறையில் இருக்கிறார். மற்றொரு எம்.எல்.ஏ. அருண் யாதவ், பலாத்கார வழக்கு ஒன்றில் ஓராண்டுக்கும் மேலாக தலைமறைவாக இருக்கிறார். இந்த இருவருக்கும் சீட் கொடுக்கப்படாவிட்டாலும் அவர்களது மனைவிகளுக்கு தேர்தலில் போட்டியிட ஆர்ஜேடி வாய்ப்பு கொடுத்துள்ளது.

பாஸ்வான் கட்சியை கூட்டணியைவிட்டு பொட்டிய கட்டிகிட்டு போகச் சொல்லிடுங்க... பாஜகவை மிரட்டும் ஜேடியூ பாஸ்வான் கட்சியை கூட்டணியைவிட்டு பொட்டிய கட்டிகிட்டு போகச் சொல்லிடுங்க... பாஜகவை மிரட்டும் ஜேடியூ

ராஜ்பல்லப் யாதவின் மனைவி விபா தேவி, நவடா தொகுதியில் போட்டியிடுகிறார். அருண் யாதவ் மனைவி கிரண் தேவி- சந்தேஷ் தொகுதியில் போட்டியிடுகிறார்.

English summary
RJD has denied ticket to two sitting MLAs who are accused of rape cases in Bihar Assembly Elections.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X