பாட்னா அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

'தீராத விளையாட்டுப்பிள்ளை' தேஜஸ்வி.. அரசியலுக்கு லாயக்கில்லை- வெடிக்கும் கலகக் குரல்

Google Oneindia Tamil News

பாட்னா: ராஷ்டிரிய ஜனதா தளத்தின் தலைவரான தேஜஸ்வியின் முதிர்ச்சியின்மையால் பீகாரில் லோக்சபா தேர்தலில் அக்கட்சியின் மெகா கூட்டணி படுதோல்வி அடைந்தது என கலகக் குரல்கள் வெடித்துள்ளன.

லோக்சபா தேர்தலில் காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் இணைந்து மெகா கூட்டணியை அமைத்தன. ஆனால் பெயரளவுக்கு மெகா கூட்டணி இருந்ததே தவிர நடைமுறையில் சாத்தியம் இல்லாததாகவே இருந்தது.

தொகுதிப் பங்கீடு, கூட்டணி கட்சிகள் பொதுக்கூட்டம் ஆகிய எதனையும் தேஜஸ்வி ஒருங்கிணைத்து செயல்படவில்லை. இந்நிலையில் லோக்சபா தேர்தலில் மெகா கூட்டணி ஒரு இடத்தில் கூட வெல்லாதது அக்கட்சியின் மூத்த தலைவர்களை கொந்தளிக்க வைத்துள்ளது.

ராஜ்யசபா: அங்கிட்டு வேல்முருகன், சுபவீ... இங்கிட்டு மன்மோகன்சிங்? என்ன செய்யும் திமுக? ராஜ்யசபா: அங்கிட்டு வேல்முருகன், சுபவீ... இங்கிட்டு மன்மோகன்சிங்? என்ன செய்யும் திமுக?

இடஒதுக்கீடு

இடஒதுக்கீடு

வைஷாலி தொகுதியில் போட்டியிட்டு பெரும் தோல்வியை சந்தித்த அக்கட்சியின் மூத்த தலைவர் ரகுவன்ஸ் பிரசாத் சிங், உயர் ஜாதியினருக்கு 10% இட ஒதுக்கீடு வழங்குவதை எதிர்க்கக் கூடாது எவ்வளவோ வலியுறுத்தினேன்.

ஆர்ஜேடி கொள்கை

ஆர்ஜேடி கொள்கை

இத்தனைக்கும் ராஷ்டிரிய ஜனதா தளத்தின் 2010 தேர்தல்ல அறிக்கையிலேயே அப்படி ஒரு வாக்குறுதி தரப்பட்டிருந்தது. அதை எல்லாம் படிப்பதும் இல்லை. இப்போதைய படுதோல்விக்கு கட்சி எடுத்த நிலைப்பாடுதான் காரணம் என சாடியுள்ளார்.

ஒருங்கிணைக்கவில்லை

ஒருங்கிணைக்கவில்லை

மேலும் தேஜஸ்வியைப் பொறுத்தவரையில் ராகுலுடன் இணைந்து பிரசாரம் செய்யவில்லை; லாலு பிரசாத்தை போல தொண்டர்களின் கருத்துகளை எல்லாம் கேட்பது இல்லை என கொந்தளிக்கின்றனர் 2-ம் கட்ட தலைவர்கள். இத்தனைக்கும் தேர்தல் பிரசாத்தின் நடுவே 5 நாட்கள் 'விடுமுறை' வேறு எடுத்தாராம் தேஜஸ்வி.

தேஜஸ்வி தலைமை வேண்டாம்

தேஜஸ்வி தலைமை வேண்டாம்

தேஜஸ்வியின் தலைமையை மாற்றினால்தான் ராஷ்டிரிய ஜனதா தளம் தாக்குப் பிடிக்கும் என்பது அக்கட்சியின் மூத்த தலைவர்களின் ஒற்றைக்குரலாக இருக்கிறது.

English summary
Senior RJD leaders very upset over party leadership with Tejashwi.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X