பாட்னா அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இதுவரை இப்படி பரிதாபமாக தோற்றதே இல்லையே... காங்கிரஸ் உறவை முறிக்கிறது லாலுவின் ஆர்ஜேடி?

Google Oneindia Tamil News

பாட்னா: லோக்சபா தேர்தலில் ஒரு இடம் கூட வெல்லாமல் படுதோல்வியை சந்தித்த லாலு பிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதா தளம் கடும் அதிர்ச்சியில் உறைந்துள்ளது. இதனைத் தொடர்ந்து காங்கிரஸுடனான உறவை அக்கட்சி முறித்துக் கொள்ள வாய்ப்பிருக்கிறது என்கின்றன தகவ்ல்கள்.

பீகாரில் ஐக்கிய ஜனதா தளம்- பாஜக கூட்டணிக்கு எதிராக காங்கிரஸ்- ஆர்ஜேடி-ஹெச்ஏஎம்(எஸ்)- ஆர்.எல்.எஸ்.பி இணைந்து மெகா கூட்டணி அமைத்தது. ஆனால் இக்கூட்டணி ஒரு தொகுதியில் கூட வெல்ல முடியாத பரிதாப நிலையில்தான் உள்ளன.

RJD to cut ties with COng.

இத்தனைக்கும் 1998 முதல் ராஷ்டிரிய ஜனதா தளம் எந்த ஒரு தேர்தலிலும் இத்தனை மோசமான தோல்வியை எதிர்கொண்டது இல்லை. 1998-ல் 17; 1999-7; 2004-ல் 22; 2009, 2014-ல் தலா 4 தொகுதிகள் என வென்றிருந்தது. தற்போதைய தோல்வியை ஜீரணிக்க முடியாமல் வேட்பாளர்களின் ஆலோசனை கூட்டத்தைக் கூட்டியுள்ளது ஆர்ஜேடி.

பழம்பெரும் கட்சி, ஏராளமான தலைவர்கள்.. ஆனால் தொண்டர்கள் எங்கே.? காங்கிரஸை கேட்கும் சிவசேனா பழம்பெரும் கட்சி, ஏராளமான தலைவர்கள்.. ஆனால் தொண்டர்கள் எங்கே.? காங்கிரஸை கேட்கும் சிவசேனா

ஆகக் குறைந்தது 12 தொகுதிகளில் வெல்வோம் என நம்பிய போதும் ஒரு இடம் கூட கிடைக்காமல் போனது எப்படி? என குறித்து ஆர்ஜேடி ஆராய இருக்கிறது. மேலும் காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சியுடனான ஒருங்கிணைப்பு எப்படி இருந்தது? இந்த உறவை முறித்துக் கொள்ளலாமா? என்பது குறித்தும் ஆர்ஜேடி தீவிரமாக ஆலோசித்து வருகிறது.

English summary
Senior RJD leader wants to cut the ties with the Congress.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X