பாட்னா அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மூளைக் காய்ச்சலால் குழந்தைகள் இறப்புக்கும் லிச்சி பழத்திற்கும் தொடர்பில்லை.. பீகாரில் ஆய்வில் தகவல்

Google Oneindia Tamil News

பாட்னா: பீகாரில் மூளைக் காய்ச்சலால் குழந்தைகள் இறப்பு சம்பவத்துக்கும் லிச்சி பழத்திற்கும் எந்தவித கொடர்பும் இல்லை என முஸாஃபர்நகரில் தேசிய ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பீகாரில் மூளைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் பீகார் மாநிலத்தின் அரசு மருத்துவமனையான முஸாஃபர்நகரில் உள்ள கிருஷ்ணா மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் பெரும்பாலான குழந்தைகளுக்கு ரத்தத்தில் குளுக்கோஸ் அளவு குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து குழந்தைகள் பலியாகினர். இதுபோல் 120-க்கும் மேற்பட்ட குழந்தைகள் அடுத்தடுத்து உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ரசாயனம்

ரசாயனம்

இந்த நிலையில் பீகாரில் குழந்தைகள் மூளைக்காய்ச்சலால் இறந்ததாகவும் அவர்கள் லிச்சி பழத்தை உண்டதால் அதில் உள்ள ரசாயனத்தால் மூளைக் காய்ச்சல் ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது.

தவறான செய்திகள்

தவறான செய்திகள்

இதையடுத்து முஸாஃபர்நகரில் உள்ள தேசிய ஆய்வு கூடத்துக்கு லிச்சி பழங்கள் ஆராய்ச்சிக்கு அனுப்பப்பட்டன. அதன் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. அதில் ஆய்வாளர் விஷால் நாத் கூறுகையில் லிச்சி பழத்தினால் மூளைக் காய்ச்சல் ஏற்பட்டதாக தவறான செய்திகள் வெளியாகியுள்ளன.

தீங்கு

தீங்கு

இதனால் பஞ்சாப், ஹிமாசலம், ஜம்மு- காஷ்மீர் மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த மாநிலங்களில் கிடைக்கும் லிச்சி பழங்கள் பாதுகாப்பானவை. இதில் தீங்கு விளைவிக்கும் எந்த பொருளும் இல்லை.

மூளைக் காய்ச்சல்

மூளைக் காய்ச்சல்

லிச்சிப் பழங்கள் ஆரோக்கியமானவை என்றும் அதில் முழு சத்துகளும் உள்ளது என்றும் ஆராய்ச்சியின் மூலம் தெரிகிறது. எனவே லிச்சி பழங்களை சாப்பிடுவோருக்கு நிச்சயம் எந்த வித உடல் உபாதைகளையும் அது ஏற்படுத்தாது. எனவே லிச்சி பழங்களால் மூளைக் காய்ச்சல் ஏற்படாது என்பது தவறான பிரச்சாரம் என இதன் மூலம் பொதுமக்களுக்கு தெரிவித்துக் கொள்கிறோம் என விஷால் நாத் தெரிவித்துள்ளார்.

English summary
Bihar's National Reaserch Centre Director says that There is no connection of Litchi with Encephalitis.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X