• search
பாட்னா அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In

பூனைக்குட்டி வெளியில் வந்துவிட்டது.. நிதீஷின் பொய்.. அம்பலப்படுத்தியது கோவிட்.. உபேந்திர குஷ்வாகா

|

பாட்னா: ராஷ்ட்ரிய லோக் சம்தா கட்சியின் தலைவர் உபேந்திர குஷ்வாஹா பீகார் தேர்தலில் மஹகத்பந்தன் (கூட்டணி) குறித்து பிரபல ஆங்கில இதழுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் மக்கள் நிதீஷ் குமாரை நிராகரிப்பார்கள் என்றார். உபேந்திர குஷ்வாஹாவிடம் கேட்கப்பட்ட கேள்விகளும் அதற்கு அவர் அளித்த பதிலையும் இப்போது பார்ப்போம்.

கேள்வி: பீகாரில் சட்டமன்றத் தேர்தல் வர இன்னும் சில மாதங்கள்தான் உள்ளது. நிதீஷ்குமார் முதல்வராக இரு தரப்பினரையும் இணைத்து 15 ஆண்டுகள் நிறைவு செய்துள்ளார். காற்று எந்த வழியில் வீசுகிறது?

 Upendra Kushwaha attacks Nitish, he always said migration from Bihar has stopped… but now exposed real situation’

நிதீஷ் குமார் இந்த பக்கத்திலோ அல்லது அந்த பக்கத்திலோ 15 ஆண்டுகள் நிறைவு செய்திருக்கலாம், ஆனால் பீகார் மக்கள் அவரது யதார்த்தத்தை புரிந்து கொண்டுள்ளனர். பல விஷயங்கள் வெட்டவெளிச்சமாகி உள்ளது. அவரது செயல்திறன் பீகாரில் இருந்து மக்கள் புலம் பெயர்ந்தவர்களாக வெளிமாநிலங்களுக்கு வெளியேறுவது நின்றுபோய்விட்டதாக எப்போதும் சொல்லிக்கொண்டே இருப்பார்,

ஆனால் லாக்டவுன் மற்றும் கொரோனா வைரஸ் வெடிப்பு ஆகியவை, பீகாரில் வேலைவாய்ப்பு குறித்த மக்களின் உண்மையான நிலைமையை அம்பலப்படுத்தியுள்ளன. கல்வியின் விஷயத்திலும் நிலைமையும் அதுபோல் தான் உள்ளது.

நிதிஷ் குமார் கல்வி, மருத்துவம் மற்றும் வாழ்வாதாரம் ஆகியவற்றில் மாற்றத்தை ஏற்படுத்துவதாக உறுதியளித்தார். அதற்கு ஐந்து ஆண்டுகள் கேட்டிருந்தார், ஆனால் பீகார் மக்கள் அவருக்கு 15 ஆண்டுகள் கொடுத்தனர்.அவரால் எதுவும் செய்ய முடியவில்லை. சட்டம் ஒழுங்கு அவரது வாக்குறுதியில் முக்கியமானது. சட்டத்தின் ஆட்சியை உறுதி செய்வதாக அவர் உறுதியளித்திருந்தார். ஆனால் இன்று கொலை, கடத்தல், கொள்ளை மற்றும் கற்பழிப்பு ஆகியவை பீகாரில் அதிகரித்துள்ளன. அவரது அரசாங்கம் அனைத்து முனைகளிலும் தோல்வியுற்றது. அவர் ஆட்சியில் இருந்து வெளியேறுவது உறுதி.

கேள்வி: ஆனால் லாலு ஆட்சியின் முந்தைய 15 ஆண்டுகளை விட அவரது 15 ஆண்டுகள் சிறந்தது என்று நிதிஷ் கூறுகிறாரே?

அப்படியே அச்சுஅசலாக மனிதர்களை போலவே வாய், பல்.. இதுல சிரிப்பு வேற.. மிரள வைக்கும் மீனின் புகைப்படம்

முந்தைய 15 ஆண்டுகளை விட சிறப்பாக செயல்பட மக்கள் லாலுவுக்கு 15 ஆண்டுகள் அவகாசம் வழங்கவில்லை. அவர் கூட அதைச் சொல்லவில்லை. நாங்கள் அப்போது சக கூட்டாளிகாக இருந்தோம். பீகாரை ஒரு வளர்ந்த மாநிலமாக மாற்றுவேன் என்று எல்லா இடங்களிலும் நிதிஷ் சொல்லிக்கொண்டிருந்தார். இப்போது அவர் பீகாரை ஒரு வளர்ந்த மாநிலமாக மாற்ற என்ன செய்தார், இப்போது நிலைமை என்ன என்று பதிலளிக்க வேண்டும். எத்தனை பேருக்கு வேலை வழங்கப்பட்டுள்ளது, மேலும் வேலை வாய்ப்புகளை உருவாக்க அவர் என்ன செய்துள்ளார்? ஒரு புதிய தொழில் அல்லது தொழிற்சாலை அமைக்கப்பட்டுள்ளதா? எதுவும் இல்லை. உண்மையில், தொழில்கள் மூடப்பட்டன. சணல் ஆலைகள் மற்றும் சர்க்கரை ஆலைகள் மூடப்பட்டன. அவரது 15 ஆண்டுகளை முந்தைய 15 ஆண்டுகளுடன் ஒப்பிடுவதில் எந்த அர்த்தமும் இல்லை. அவர் நிச்சயமாக மக்களை தவறாக வழிநடத்த முயற்சிப்பார். ஆனால் மக்கள் அவரை நம்ப மாட்டார்கள்.

அடுத்த முதல்வர் யார் என்பது குறித்து மகாகத்பந்தன் இறுதி முடிவு எடுக்கவில்லை. அதற்காக தேஜஷ்வி யாதவ் முதல்வர் அல்ல என்று நான் கூறவில்லை. ஆனால் இன்று வரை மகாகத்பந்தன் முதல்வர் குறித்து ஒரு முடிவை எடுக்கவில்லை. இரண்டாவதாக, அவர் யாராக இருந்தாலும்... அவர் நிதீஷ் குமாரை விட சிறந்தவராக இருப்பார், பீகார் மக்களுக்கு அது தெரியும்.

கேள்வி: ஆனால் உங்கள் முதல்வர் யார் என்று அறிவிப்பதில் இந்த தயக்கம் ஏன்?

பதில்: தயக்கம் இல்லை. இது செயல்முறை பற்றியது. அனைத்து கட்சிகளின் தலைவர்களும் அமர்ந்து முடிவு செய்வார்கள். இது சரியான நேரத்தில் மற்றும் தேர்தலுக்கு முன்னதாக நடக்கும்.

கேள்வி: நீங்கள் அரசியலில் ஒரு மூத்தவர். நீங்கள் சமூக நீதி அரசியலை செய்துள்ளீர்கள், லாலு மற்றும் நிதிஷ் இருவரின் சமூக நீதி அரசியலையும் பார்த்தீர்கள். லாலு ஆட்சியைப் பற்றி அவர் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார். லாலுவின் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் மட்டுமே முதல்வராக மாறுவார் என்பதே ஆர்ஜேடியின் நிலைப்பாடா?

பதில்: இது பீகாரின் முன் உள்ள பெரிய பிரச்சினை அல்ல. பீகார் முன் உள்ள பிரச்சினை இளம் தலைமுறையின் எதிர்காலம் பற்றியது. எங்கள் குழந்தைகள் எவ்வாறு கல்வி கற்கப்படுவார்கள்? மாநிலத்தில் சுகாதார வசதிகள் இல்லாததால் குடியேறியாக அலையும் ஏழைகளுக்கு என்ன நடக்கும்? இவைதான் பிரச்சினைகள். பிரச்சினை (நீங்கள் கேட்கிறீர்கள்) அதிகம் உளளது.

கேள்வி: கிராண்ட் அலையனில் வேறுபாடுகள் இருப்பதாகக் கூறப்படுகிறதே?

வேறுபாடுகள் எதுவும் இல்லை. ஒரு குடும்பத்தில் ஐந்து பேர் இருக்கும்போது, ​​சில விஷயங்களில்... வேறுபாடுகள் வரும். ஆனால் ஏதேனும் வேறுபாடுகள் இருந்தால்... அவற்றை சரியான நேரத்தில் தீர்ப்போம். எங்களால் தீர்க்க முடியாத பிரச்சினைகள் எதுவும் இல்லை, அதற்காக நாம் அதிக ஆற்றலை செலவிட வேண்டும்.

கேள்வி: மகாகத்பந்தனில் ராம் விலாஸ் பாஸ்வானின் எல்ஜேபிக்கு இடம் இருக்கிறதா?

பாஸ்வான்ஜி அவர் இருக்கும் கூட்டணியில் தனது கட்சியின் இடங்களின் பங்கை அதிகரிக்க மட்டுமே முயற்சிக்கிறார் என்று நினைக்கிறேன். அவரது அறிக்கைகளையும் முயற்சிகளையும் வித்தியாசமாக பார்க்கக்கூடாது.

கேள்வி: கொரோனா நிலைமை காரணமாக தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என்ற கருத்து உள்ளதே?

கொரோனா நிலைமை காரணமாக மக்கள் பிரச்சினைகளை எதிர்கொள்கிறார்கள் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் நீங்கள் அதைப் பார்த்தால், இந்திய அரசு ஆரம்ப கட்டங்களில் சில தவறான நடவடிக்கைகளை எடுத்தது, இதன் விளைவாக தற்போதைய நிலைமை ஏற்பட்டது. கொரோனா வந்த போது ஆரம்பத்திலேயே அவர்கள் ஒரு சிறந்த யுக்திகளை கடைப்பிடித்திருந்தால்... இந்நேரம் வீட்டிற்கு நடக்க வேண்டிய நிலைக்கு லட்சக்கணக்கான மக்கள் தள்ளப்பட்டிருக்க மாட்டார்கள். அவர்களின் கஷ்டங்களை தவிர்த்திருக்க முடியும்... ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் நடந்திருக்க மாட்டார்கள். பட்டினியை எதிர்கொண்டிருக்க மாட்டார்கள்... மேலும் கொரோனா கேஸ்களின் எண்ணிக்கையும் அதிகரித்திருக்காது. நாங்கள் இப்போதையே கொரோனா சூழ்நிலையை எதிர்கொள்கிறோம். ஆனால் இந்த நிலைமை காரணமாக தேர்தலை நடத்தாமல் இருப்பது பொருத்தமானதல்ல. தேர்தல் ஆணையம் தேர்தல் செயல்முறையை மேம்படுத்துவதற்கும், மக்கள் பங்கேற்பை உறுதி செய்வதற்கும், அதே நேரத்தில் அவர்களை கொரோனா வைரஸில் இருந்து பாதுகாக்கும் வகையில் ஒரு வழியைக் கண்டுபிடிக்க வேண்டும்.

கேள்வி: கூட்டணியில் சீட் பகிர்வு குறித்து முடிவு செய்துள்ளீர்களா?

பேச்சுக்கள் நடந்து கொண்டிருக்கின்றன. யாருக்கு எவ்வளவு சீட் என்பதை இப்போது வெளிப்படுத்த முடியாது. அதை இப்போது வெளியிடுவதும் பொருத்தமானதல்ல.

கேள்வி: உங்கள் எதிரிகள் மஹா கத்பந்தன் ஒரு ஹாட்ச்-பாட்ச் கூட்டணி என்றும், நிலையான அரசாங்கத்தை வழங்க முடியாது என்றும் கூறுகிறார்களே. அதை எப்படி எதிர்கொள்வீர்கள்?

நிதீஷ்குமார் என்ன வேண்டுமானாலும் சொல்லிக்கொள்ளட்டும்... அவர் ஆட்சி செய்த 15 ஆண்டுகள் என்பது குறுகிய காலம் அல்ல. இப்போது யாரும் நிதீஷை நம்ப தயாராக இல்லை வேண்டும்? அவர் விரும்பியதை 15 ஆண்டுகளில் செய்திருக்க முடியும். வேலையின்மை அல்லது சுகாதார உள்கட்டமைப்பின் பற்றாக்குறையை சமாளித்திருக்க முடியும். நிதீஷுக்கு அந்த திறன் உள்ளது என்பதை நான் தனிப்பட்ட முறையில் அறிவேன். அவர் விரும்பி இருந்தால் இதையெல்லாம் செய்திருக்க முடியும். ஆனால் அவர் தனது ஆற்றலை எல்லாம் தனது நாற்காலியைக் காப்பாற்றுவதில் கவனம் செலுத்தினார். இப்போது மக்கள் அவரை நிராகரிக்கிறார்கள். அவர்களுக்கு முன் உள்ள ஒரே மாற்று மகாகத்பந்தன். மக்கள் நிச்சயமாக எங்கள் கூட்டணிக்கு ஒரு வாய்ப்பை வழங்குவார்கள். நாங்கள் ஒரு சிறந்த அரசாங்கத்தை வழங்குவோம்.

கேள்வி: பொதுவான தேர்தல் அறிக்கை இருக்குமா?

பொதுவான குறைந்தபட்ச திட்டத்திற்கான திட்டம் உள்ளது. நாங்கள் அதை பரிசீலித்து வருகிறோம். அதில் ஒருமித்த கருத்து உள்ளது.

கேள்வி: உங்கள் கூட்டணியில் முதல்வரை தேர்ந்தெடுப்பதில் ஒருமித்த கருத்து இல்லையா?

இல்லை என்று இல்லை... எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று மட்டுமே நான் சொன்னேன்

 
 
 
English summary
RLSP chief Upendra Kushwaha speaks on the mahagathbandhan’s prospects in the Bihar polls and why he thinks people will reject Nitish Kumar
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X