பாட்னா அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

வீடியோவை பாருங்க.. புதிய எல்இடி டிவிக்களை கொத்துக் கொத்தாக தூக்கிச் செல்லும் கொள்ளையர்கள்!

Google Oneindia Tamil News

Recommended Video

    புதிய எல்இடி டிவிக்களை கொத்துக் கொத்தாக தூக்கிச் செல்லும் கொள்யைர்கள்!

    பாட்னா: குடவுனில் புகுந்து ரூ.50லட்சம் மதிப்புள்ள புதிய எல்இடி டிவிக்களை கொத்துக் கொத்தாக கொள்ளையர்கள் திருடி செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. இந்த சம்பவம் பீகாரில் நடந்துள்ளது.

    செக்யூரிட்டி, சிசிடிவி கேமரா என எவ்வளவு பாதுகாப்பு அம்சங்கள் இருந்தாலும் திருடும் கொள்ளையர்கள் திருடிக்கொண்டு தான் இருக்கிறார்கள். மாட்டிக்காமல் திருடுவதற்காக அவர்கள் செய்யும் டெக்னிக் தான் இன்று பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி வருகிறது.

     WATCH Robbers loot LED TVs worth Rs 50 lakhs from a godown in Mehndiganj, Bihar

    ஏனெனில் கைரேகை பதியாமல், செல்போனில் பேசிக்கொள்ளாமல் கனக்கச்சிதமாக திருடுவதில் கொள்ளையர்கள் நிபுணர்கள் ஆகிவிட்டார்கள். இதனால் போலீசாருக்கு மிகப் பெரிய சவாலாக மாறிவிட்டது.

    இநநிலையில் பீகாரில் உள்ள ஒரு குடவுனில் சர்வ சாதாரணமாக புதிய எல்இடி டிவிக்களை திருடர்கள் திருடிச் சென்றுள்ளார்கள்.

    பீகார் மாநிலத்தின் மெகந்திகன்ஞ் ஏரியாவில் கடந்த 20ம்தேதி பூட்டிக்கிடந்த குடவுனின் ஷெட்டரை உடைத்து கொள்ளையர்கள் உள்ளே புகுந்தனர். இங்கு இருந்து புத்தம் புதிய எல்இடி டிவிக்களை பாக்ஸ் பாக்ஸாக தூக்கிகொண்டு பயந்தனர். ஒவ்வொருவரும் இரண்டு அல்லது மூன்று டிவிக்களை தூக்கி சென்றுள்ளனர்.

    சிவசேனாவிற்கு ஷாக் தர ரெடியாகும் அமித் ஷா.. கூட்டணிக்கு கல்தா? மகாராஷ்டிராவில் என்ன நடக்கிறது?சிவசேனாவிற்கு ஷாக் தர ரெடியாகும் அமித் ஷா.. கூட்டணிக்கு கல்தா? மகாராஷ்டிராவில் என்ன நடக்கிறது?

    இந்த சிசிடிவி காட்சிகளை பார்த்த பீகார் போலீசார் கொள்ளையர்களை தீவிரமாக தேடிவருகின்றனர். திருடப்பட்ட டிவிக்களின் மதிப்பு 50 லட்சம் ரூபாய் என போலீசார் தெரிவித்தனர்.

    English summary
    Bihar: WATCH Robbers loot LED TVs worth Rs 50 lakhs from a godown in Mehndiganj area; police investigation underway. The incident took place on 20th October
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X